அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி; 15ம் தேதி அறிவிப்பை வெளியிடும் டிரம்ப்.!

கடந்த 2016 ஆம் ஆண்டு, ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து, அமெரிக்காவின் 45வது அதிபராக டிரம்ப் பதவியேற்றார். தொடர்ந்து 4 ஆண்டுகள் 2020 வரை அதிபராக இருந்த டிரம்ப், வடகொரியாவுடன் நட்பு, இஸ்ரேல் – அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போன டிரம்ப், கடந்த 2020ம் நடைபெற்ற தேர்தலில், தற்போதயை அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் தோற்றார், இந்தநிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் … Read more

சரக்கு விண்கலம் பயணம்: சீனாவின் முயற்சி வெற்றி| Dinamalar

பீஜிங் : விண்வெளியில் அமைத்து வரும் ஆய்வு மையத்துக்கு தேவையான பொருட்களுடன் கூடிய விண்கலத்தை, சீனா வெற்றிகரமாக ஏவியது.அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ தலைமையில், விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.ரஷ்யா உட்பட பல நாடுகள் இணைந்து இந்த ஆய்வு மையத்தை அமைத்துள்ளன.இந்நிலையில், நம் அண்டை நாடான சீனா, விண்வெளியில் தனக்கென தனியாக ஆய்வு மையத்தை அமைத்து வருகிறது. இதற்கு தேவையான பொருட்களை சீனா ஏற்கனவே அனுப்பி வைத்து உள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஆய்வு … Read more

சீனாவின் சாதனையை இந்தியா முறியடிக்குமா?..

உலக மக்கள்தொகை 800 கோடியை கடந்து விட்டதாக அமெரிக்க புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலை 11ம் தேதி ஐ.நா. வெளியிட்ட வெளியிட்ட மக்கள் தொகை புள்ளி விவரத்தில், நவம்பர் 15ஆம் தேதி உலக மக்கள்தொகை 800 கோடியை தொடும் என கணித்திருந்தது. அது தற்போது கடந்து விட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் உலக மக்கள் தொகையானது சராசரியாக 1.10 சதவீதம் அதிகரிக்கிறது. அதன் அடிப்படையில், ஐ.நா கணிப்பின்படி அடுத்த ஆண்டு அதிக மக்கள் … Read more

லண்டனில் உணவுப் பொருட்கள் கடும் விலையேற்றம்.. உணவு வங்கி துவங்கி ஏழைகளுக்கு உணவு வழங்கும் நிலை..

லண்டனில் உணவுப் பொருட்களின் கடுமையான விலையேற்றத்தினால் உணவு வங்கி துவங்கி ஏழைகளுக்கு உணவு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வல்லரசு நாடான இங்கிலாந்தில் தற்போது பால் உள்ளிட்ட உணவு பொருட்களின் விலையேற்றத்தினால் ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், லண்டனில் அறக்கட்டளை மூலமாக உணவு வங்கி ஏற்பாடு செய்து ஏழைகள், முதியவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. முன்பதிவு செய்து உணவு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், கடந்தாண்டில் நிதி உதவி வழங்கியவர்கள் கூட தற்போது உதவி பெறும் … Read more

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: பள்ளிகளை இழுத்து மூட உத்தரவு!

கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகளை மறு உத்தரவு வரும் வரை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றுக்கு உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்ததை அடுத்து கடந்த ஜனவரி … Read more

துப்பாக்கிச்சூடு எதிரொலி; இம்ரான் கானுக்கு கூடுதல் கமாண்டோ படை பாதுகாப்பு

பாகிஸ்தானில் விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை ஆகிய பிரச்சனைகளுக்கு இம்ரான் கானின் மோசமான ஆட்சிமுறையே காரணம் என குற்றம் சாட்டி, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்தன. அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது. அதையடுத்து பாகிஸ்தான் முன்னாள் முதல்வர் நவாஸ் ஷெரிஃபின் சகோதரர், ஷாபாஸ் ஷெரீஃப் பிரதமராக பதவி ஏற்றார். இதையடுத்து வெளிநாட்டு சதி காரணமாக தனது அரசு கவிழ்க்கப்பட்டது என கூறியும், உள்நாட்டு அரசுக்கு … Read more

பிஜி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.9 ஆக பதிவு

நியூயார்க், பிஜி தீவின் மேற்கு வடமேற்கே 399 கி.மீ. தொலைவில் சுவா என்ற இடத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 587.2 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் சுனாமி பாதிப்புக்கான ஆபத்து எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்து உள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. … Read more

ரஷ்யாவிடம் இருந்து கெர்சன் பகுதியை மீட்ட உக்ரைன்: மக்கள் கொண்டாட்டம்

கீவ்: ரஷ்ய படைகளிடம் இருந்து கெர்சன் பகுதியை உக்ரைன் மீட்டுள்ளதை அடுத்து, அந்நாட்டு மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனின் கீவ் நகர் வரை வெகு வேகமாக முன்னேறிய ரஷ்யப் படைகள் பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியுடன் உக்ரைன் கொடுத்த பதிலடியால் பின்வாங்கியது. இதனிடையே, போர் மூலம் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய நகரங்களை … Read more

உக்ரைனின் கெர்சோன் பகுதியில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்திருக்கும் வீடியோவை வெளியிட்ட ரஷ்யா..!

ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்த உக்ரைனின் கெர்சோன் பகுதியில் உள்ள அன்டோனிவ்ஸ்கி பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்திருக்கும் வீடியோவை ரஷ்யா வெளியிட்டுள்ளது. டினிப்ரோ ஆற்றின் கிழக்குக் கரைக்கு செல்லும் ஒரே வழித்தடமாக அன்டோனிவ்ஸ்கி பாலம் இருந்தது. பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. டினிப்ரோ ஆற்றின் கிழக்குக் கரையில் இருந்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படைவீரர்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று கூறியதாக இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. Source link

ரஷியாவிடம் இருந்து விரும்பிய அளவு எண்ணெய்யை இந்தியா வாங்கி கொள்ளலாம்; அமெரிக்கா

வாஷிங்டன், உக்ரைனுக்கு எதிராக ரஷியா தொடர்ந்த போரானது பல மாதங்களாக நீடித்து வருகிறது. தூதரக பேச்சுவார்த்தை தோல்வி, பொருளாதார தடைகள் போன்றவைகளால் போரை முடிவுக்கு கொண்டு வர முடியாத சூழலே நீடித்து வருகிறது. ரஷியாவின் வருவாயை குறைக்கும் நோக்கில் புதிய யுக்தியாக, ரஷியாவின் எண்ணெய் விலைக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனால், ரஷியாவிடம் இருந்து எண்ணெய்யை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு நாடுகள் தள்ளப்படும். அதனால், ரஷியாவை புறக்கணிக்க கூடிய சூழல் ஏற்படும். … Read more