கன்யா வெஸ்ட் வன்முறையை தூண்டினார்: எலான் மஸ்க் விளக்கம்
நியூயார்க்: வன்முறைகளை தூண்டுவதற்கு எதிரான விதிகளை அவர் மீண்டும் மீறினார் என கன்யா வெஸ்ட்டின் ட்விட்டர் பக்கம் நீக்கப்பட்டதற்கு எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல பாடகர் கன்யா வெஸ்ட்டின் ட்விட்டர் பக்கம் நீக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறியதன் காரணமாக 2 மாதங்களுக்கு முன்னர்தான் கன்யா வெஸ்ட்டின் ட்விட்டர் பக்கம் நீக்கப்பட்டு பின்னர் மீட்கப்பட்டது. இந்த நிலையில் விதிமுறை மீறல் காரணமாக தற்போது மீண்டும் நீக்கப்பட்டுள்ளது. முன்னதாக நிகழ்ச்சி ஒன்றின் நேரலையில் ”தனக்கு ஹிட்லர் பிடிக்கும். நாஜிகள் … Read more