காடுகளில் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார்.. கொக்கைன் போதைப்பொருள் உற்பத்தி கூடாரங்கள் தகர்ப்பு!

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரித்து வந்த ஆலைகளை போலீசார் தகர்ந்தெறிந்தனர். கோச்சபம்பா வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு ராணுவத்தினர், காட்டின் மையப்பகுதியில் படுக்கையறை, சமையலறை உள்ளிட்ட சகல வசதிகளுடன் நாளொன்றுக்கு 100 கிலோ அளவில் கொக்கைன் போதைப் பொருள் உற்பத்தி செய்துவந்த இரு கூடாரங்கள் அழிக்கப்பட்டன. Source link

ஆப்கானிஸ்தானில் கடும் உறை பனி; 78 பேர் உயிரிழப்பு

காபூல், ஆப்கானிஸ்தானில் கடந்த 1½ ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகளின் ஆட்சி நடந்து வருகிறது. இவர்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இது ஒரு புறமிருக்க தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசை எந்தவொரு நாடும் முறைப்படி அங்கீகரிக்காததால் அந்த நாட்டுக்கான சர்வதேச நிதிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதோடு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆப்கானிஸ்தான் அரசுக்கு சொந்தமான சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆப்கானிஸ்தானில் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டு உணவு பஞ்சம் உள்ளிட்ட பல்வேறு … Read more

காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதித்த போலீசார்!

காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அந்நாட்டு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். மக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து வீடியோ ஒன்றில் பேசிக் கொண்டே பயணித்த ரிஷி சுனக், சீட் பெல்ட் அணியாமல் இருக்கும் வீடியோ வெளியானது. இதையடுத்து நாட்டின் உயர் பதவியில் இருப்பவரே சட்டத்தை மீறியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து ரிஷி சுனக் மன்னிப்பு கேட்டிருந்த நிலையில், தற்போது அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Source link

உக்ரைனுக்கு மேலும் ரூ.20 ஆயிரம் கோடி ராணுவ உதவிஅமெரிக்கா வழங்குகிறது

வாஷிங்டன், உக்ரைன்-ரஷியா போரில் அமெரிக்கா உக்ரைனுக்கு பெரும் பக்கபலமாக இருந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுப்பதற்கான சூழல் தென்பட்டது முதல் இருந்தே உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. அமெரிக்கா வழங்கி வரும் அதிநவீன ஆயுதங்களை கொண்டே உக்ரைன் ராணுவம் கிட்டத்தட்ட ஓர் ஆண்டாக ரஷிய படைகளை துணிவுடன் எதிர்த்து நிற்கிறது. இந்த நிலையில் உக்ரைனுக்கு மேலும் 2.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 20,288) மதிப்பிலான ராணுவ உதவியை வழங்க அமெரிக்க … Read more

தைவானுக்குள் ஊடுருவிய 31 சீன போர் விமானங்கள் – போர்ப்பதற்றம் அதிகரிப்பு

பீஜிங், 1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பின் சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்த தைவானை, சீனா இன்னும் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த சூழலில் சமீபகாலமாக தைவானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வருவது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தேவை ஏற்பட்டால் தைவான் மீது படையெடுத்து அதனை ஆக்கிரமிப்போம் என சீனா மிரட்டி வருகிறது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாகவே இருநாடுகளுக்கும் இடையே கடுமையான … Read more

தென்கொரியாவில் குடிசை பகுதியில் பயங்கர தீ விபத்து – 60 வீடுகள் எரிந்து சாம்பல்

சியோல், தென்கொரியாவின் தலைநகர் சியோல் அந்த நாட்டின் பணக்கார நகராகவும், அதிநவீன நகராகவும் உள்ளது. அங்கு கடந்த 1988-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக வெளிநாட்டு பார்வையாளர்களை கவர நகரை அழகுப்படுத்துவதில் கவனம் செலுத்திய அப்போதைய ராணுவ தலைவர்கள் சியோலில் இருந்த குடிசை பகுதிகளை ஒழிக்க நடவடிக்கை எடுத்தனர். எனினும் சியோலின் தெற்கு பகுதியில் உள்ள குர்யோங் கிராமத்தில் இருக்கும் குடிசை பகுதியை மட்டும் அவர்களால் ஒழிக்க முடியாமல் போனது. தற்போது சியோலில் இருக்கும் ஒரே … Read more

சட்டவிரோத மருந்து கடத்தல் இந்தியருக்கு 7 ஆண்டு சிறை| 7 years in jail for illegal drug smuggling Indian

வாஷிங்டன்,-அமெரிக்காவில், சட்டவிரோத மருந்துகளை, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து கடத்திச் சென்று விற்றதாக, இந்திய இளைஞருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குதாரராக இருந்தவர் மணிஷ் குமார், ௩௪. இவர், பல்வேறு நிறுவனப் பெயர்களில் சட்டவிரோத மருந்துகளை தயாரித்து, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து அமெரிக்காவுக்கு கப்பலில் ஏற்றுமதி செய்துள்ளார். இந்த மருந்துகள் அனைத்தும் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டவை. இவற்றை டாக்டர்களின் மருந்து … Read more

100 பயங்கரவாதிகள் பலி சோமாலியாவில் அதிரடி| Action in Somalia kills 100 terrorists

மொகாதிசு,-சோமாலியாவில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்க, அந்நாட்டு ராணுவத்தினர் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான சோமாலியாவில், ‘அல் – குவைதா’ பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ‘அல்- – ஷபாப்’ அமைப்பு, மத்திய மற்றும் தெற்கு சோமாலியா பகுதிகளை கைப்பற்றியுள்ளது. இது, பிற பகுதிகளையும் கைப்பற்ற பொதுமக்கள், ராணுவம் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த அமைப்புக்கு எதிராக, … Read more

அமெரிக்காவில் ஹிந்து கோவிலில் திருட்டு| Theft at a Hindu temple in America

ஹூஸ்டன்,-அமெரிக்காவில் கோவிலுக்குள் புகுந்து விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் உண்டியல் பணம் திருடப்பட்டதை அடுத்து, அங்குள்ள ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரசோசில் வசிக்கும் இந்திய சமூகத்தினர், அங்கு ஓம்கார்நாத் கோவிலை கட்டி வழிபட்டு வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஒரே கோவில் இது தான். இதற்குள், ௧௧ம் தேதி இரவு புகுந்த மர்ம நபர், அங்கிருந்த உண்டியல் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடி தப்பிச் சென்றது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி … Read more

இந்தியா சீனா இடையே சண்டை மூட்டும் நேட்டோ; ரஷ்ய அமைச்சர் குற்றச்சாட்டு.!

நேட்டோ என்பது வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 12 நாடுகள் சேர்ந்து 1949இல் இந்த ராணுவ கூட்டு அமைப்பை உருவாக்கின. இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர இணங்க வேண்டும். ஐரோப்பாவில் பனிப்போர் காலத்துக்குப் பிந்தைய ரஷ்ய விரிவாக்க அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கத்தையே இந்த அமைப்பு குறிக்கோளாகக் கொண்டிருந்தது. 1955இல் நேட்டோ கூட்டுப்படைக்கு … Read more