பிலிப்பைன்ஸில் வெள்ள பாதிப்பு – சுமார் 40,000 பேர் வெளியேற்றம்.. 6 பேர் உயிரிழப்பு..!

பிலிப்பைன்ஸில் வெள்ள பாதிப்பால் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் தினத்தன்று பிலிப்பைன்ஸின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மிண்டானோ, ஒசாமிஸ், கிளாரின் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ள பாதிப்புகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததாகவும், 10க்கும் மேற்பட்டோர் மாயமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Source link

வடமேற்கு சீனாவில் தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு.. நிலச்சரிவில் சிக்கிய 18 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்..!

வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் தங்கச் சுரங்கத்தில் சிக்கிய 18 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கஜகஸ்தான் எல்லையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த நிலத்தடி தங்கச் சுரங்கத்தில் 40 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். திடீரென மண் சரிந்ததில் அங்கிருந்த தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கினர். 22 பேர் வரை மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள தொழிலாளர்களை மீட்பதற்கான நடவடிக்கை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படாத காரணத்தால், சீனாவில் சுரங்க விபத்துகள் அடிக்கடி … Read more

சீனாவில் தடை அகற்றம்! சிக்கலில் பாகிஸ்தான்! பேரழிவை ஏற்படுத்தும் அண்டை நாடு

இஸ்லாமாபாத்: கொரோனா வைரஸ் சீனாவில் அழிவை ஏற்படுத்தி வருகிறது, கடந்த ஒரு வாரத்தில் மில்லியன் கணக்கான மக்கள் கோவிட்-19 இன் புதிய வகையான BF.7 (Omicron BF.7) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் ஏற்பட்டிருக்கும் இந்த பேரழிவு, பாகிஸ்தானிலும் பாதிப்பைஇ ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இந்த கொரோனத் தொற்று வெறும் தொல்லையாக மட்டுமே முடிந்துவிடாமல், மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. சீனாவில் அதிகரித்து வரும் கோவிட்-19 இன் புதிய வகை BF.7 (Omicron BF.7) பாகிஸ்தானுக்கு … Read more

கிரீன் வால்ட் அருங்காட்சியத்தில் கலைப் பொக்கிஷங்கள் கொள்ளை – லேண்ட்வேர் கால்வாயில் இறங்கி தடயங்களை தேடிய ஜெர்மன் போலீஸ்

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் 2019ம் ஆண்டு கிரீன் வால்ட் அருங்காட்சியத்தில் கலைப் பொக்கிஷங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், லேண்ட்வேர் கால்வாயில் இறங்கி ஜெர்மன் போலீஸார் தேடும் பணியில் ஈடுபட்டனர். டிரெஸ்டன் நகரில் ஐரோப்பாவின் மிகப்பெரிய கலைப்பொக்கிஷங்களின் சேகரிப்பு அரண்மனையில் ‘கிரீன் வால்ட்’ அருங்காட்சியம் உடைக்கப்பட்டு, 120 மில்லியன் டாலர் மதிப்பிலான கலைப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. பழைமை வாயந்த அருங்காட்சியங்களில் ஒன்றான இதில், 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய நகைகள், கலைப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த ஜனவரியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் … Read more

Boxing Day : பாக்ஸிங் டே என்றால் என்ன ? – முழு பின்னணி

கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாளான டிச. 26ஆம் தேதி (இன்று) அன்று ‘பாக்ஸிங் டே’ தினம் கொண்டாடப்படுகிறது. இதன் பெயர் பாக்ஸிங் என்று இருந்தாலும், இதற்கும் குத்துச்சண்டை விளையாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. பாக்ஸிங் டே என்றால் என்ன? இங்கிலாந்து, அயர்லாந்தை தவிர்த்து காமன்வெல்த் நாடுகளில் டிச.26ஆம் தேதி விடுமுறை தினமாக அறிவிப்பார்கள். ஒருவேளை, டிச. 26 சனி அல்லது ஞாயிறு கிழமைகளில் வந்தால், திங்கட்கிழமை அன்று பாக்ஸிங் டே கொண்டாடப்படும். அதாவது, கிறிஸ்துமஸ் தினத்திற்கு வழங்கப்படும் … Read more

ஸ்பெயினில் 65 அடி உயர பாலத்திலிருந்து ஆற்றுக்குள் பேருந்து விழுந்து விபத்து.. 6 பேர் பலி!

ஸ்பெயினில் சுமார் 130 அடி உயர பாலத்தில் இருந்து பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு விகோ நகரம் நோக்கி 8 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. மழை பெய்ததன் காரணமாக பேருந்தின் டயர்கள் வழுக்கியதில் இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. இதில் ஓட்டுநரும் ஒரு பெண் பயணியும் உயிருடன் மீட்கப்பட்டனர். நேற்றிரவே 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. ஆற்றில் நீரில் வேகம் அதிகரித்திருந்ததால் … Read more

இஸ்லாமாபாத் மரியாட் ஓட்டலில் தங்க வேண்டாம் என்று அமெரிக்கா தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை..!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலான மரியாட்டில் தங்க வேண்டாம் என்று அமெரிக்கா தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அமெரிக்கா உளவுத்துறை தகவலை ஆதாரமாகக் கொண்டு தனது நாட்டவரை எச்சரிக்கை செய்துள்ளது. விடுமுறை நாட்களில் வழிபாட்டுத் தலங்கள், மக்கள் நெரிசல் மிக்க இடங்களையும் தவிர்க்குமாறும் தனது குடிமக்களை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. Source link

கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி 2 டிகிரி குளிர் ஏரியில் குளித்து உற்சாகம்..!

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி உறைபனி போர்த்திய ஏரியில் ஆண்களும், பெண்களும் உற்சாகமாக குளித்தனர். அவ்வாறு குளிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது என்று சீல்ஸ் குழுவினர் நம்புகின்றனர். 1980-ல் கிழக்கு ஜெர்மனியின் தலைநகராக இருந்த பெர்லினில், சீல்ஸ் கிளப் நிறுவப்பட்டது. இதில், 12 முதல் 90 வயது வரையிலான 157 உறுப்பினர்கள் உள்ளனர். 40 வருடங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் இந்த பாரம்பரிய நிகழ்வில், பெர்லின் சீல்ஸ் குழுவினர் 20-க்கும் மேற்பட்டோர் 2 டிகிரி குளிர் ஏரியில் குளித்து … Read more

நேபாள அரசியலில் திருப்பம்; பிரதமராகிறார் பிரசண்டா| Turnaround in Nepalese politics; Prasanda becomes the Prime Minister

காத்மாண்டு: நேபாள அரசியலில் ஒரே நாளில் நடந்த திடீர் திருப்பங்களில், எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவர் புஷ்பகமல் பிரசண்டா, 68, அந்த நாட்டின் அடுத்த பிரதமராக இன்று பதவியேற்க உள்ளார். நம் அண்டை நாடான நேபாளத்தில், பார்லிமென்ட் தேர்தல் நவம்பர் 20ல் நடந்தது. இதில் ஆளுங்கட்சியான நேபாளி காங்கிரஸ், மக்கள் பிரதிநிதி சபையின் 275- இடங்களில், ௮௯ல் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. புதிய அரசு அமைப்பது தொடர்பாக, கூட்டணி கட்சிகள் … Read more

அமெரிக்காவை வாட்டும் பனிப்புயல்; பலி 30 ஆக அதிகரிப்பு: கிறிஸ்துமஸ் நாளில் வீடுகளில் முடங்கிய மக்கள்

நியூயார்க்: அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கூடவே பனிப்புயலும் மக்களை வாட்டி வதைக்கிறது. மிகக் கடுமையாக வீசும் இந்தப் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை கொண்டாட திட்டமிட்டிருந்த மக்கள் பலரும் தங்களின் வீடுகளிலேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவு, பனிப்புயல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் கணிப்பு: இந்நிலையில் வானிலை ஆய்வாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக கடுமையாக வாட்டிவதைத்து … Read more