இந்தோனேசியாவில் அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு!

மேற்கு இந்தோனேசியாவின் கடற்கரையில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமத்ராவின் பெங்குலு நகருக்கு தென்மேற்கே 155 கிலோ மீட்டர் தொலைவில் ((Enggano)) எங்கானோ என்ற சிறிய தீவுக்கு அருகில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம், இரவு 8 முதல் 9 மணிக்கு இடையே ரிக்டர் அளவில் 6.9 மற்றும் 5.4 ஆக இருமுறை பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.  … Read more

இன்று உலக ஆண்கள் தினம்| Dinamalar

* குடும்பத்துக்காக உழைக்கும் ஆண்களின் தியாகத்தை பாராட்டுதல், அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தி நவ. 19ல் உலக ஆண்கள் தினம் கடை பிடிக்கப்படுகிறது. * குழந்தைகள் மீதான பாலியல், வன்கொடுமைகளை தடுக்க வலியுறுத்தி நவ. 19ல் உலக குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. * சுகாதாரத்தை பேணும் கழிப்பறை பயன்பாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் நவ. 19ல் உலக கழிப்பறை தினம் கடைபிடிக்கப்படுகிறது. தங்களின் குடும்பங்கள் மற்றும் சமூகத்திற்கு ஆண்கள் … Read more

பாக்.,கில் வேன் கவிழ்ந்து விபத்து 12 குழந்தைகள் உட்பட 20 பேர் பலி| Dinamalar

கராச்சி, :பாகிஸ்தானில் சாலை ஓரம் வெட்டப்பட்ட பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ௧௨ குழந்தைகள் உட்பட ௨௦ பேர் பரிதாபமாக பலியாகினர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், சிந்து மாகாணத்தில் உள்ள காயிர்பூரில் இருந்து, சேவானில் உள்ள மசூதிக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, நெடுஞ்சாலை ஓரமாக வெட்டப்பட்டுஇருந்த பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குஉள்ளானது. இந்தப் பள்ளத்தில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ௧௨ குழந்தைகள் உட்பட ௨௦ … Read more

மெட்டா இந்தியாவின் புதிய தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம்

மெட்டா இந்தியாவின் தலைமைப் பொறுப்பை சந்தியா தேவநாதன் ஏற்றுள்ளார். பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் இந்தியத் தலைமைப் பொறுப்பில் இருந்த இரண்டு முக்கிய அதிகாரிகள் ராஜினாமா செய்ததையடுத்து சந்தியா தேவநாதன் மெட்டா இந்தியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். உலக அளவில் 22 ஆண்டு அனுபவத்துடன் வங்கிகள், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் தொழில்முனைவோராக பிரசித்தி பெற்றவர் சந்தியா. டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். 2016 முதல் அவர் மெட்டா நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார் Source … Read more

ஐ.நா., பொது சபை கூட்டத்தில் பாக்.,குக்கு இந்தியா பதிலடி| Dinamalar

நியூயார்க்ஐ.நா., பொது சபை கூட்டத்தில், ஜம்மு – காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி தந்தது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் தொடர்பான ஐ.நா., பொது சபை கூட்டம் நேற்று முன்தினம் கூடியது. அப்போது, ஜம்மு – காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் பிரதி நிதி பேசினார். இதற்கு பதில் அளித்த ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் பிரதிக் மாத்துார் கூறியதாவது: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் சீர்திருத்தங்கள் தொடர்பான மிக முக்கியமான கூட்டத்தில், பாகிஸ்தான் … Read more

ரூ.14 கோடி ஹெராயின் பறிமுதல்| Dinamalar

ஷில்லாங், :மேகாலயாவில், 14 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘ஹெராயின்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மூவரை போலீசார் கைது செய்துஉள்ளனர். வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள ரி-போய் மாவட்டத்திலிருந்து ஷில்லாங் செல்லும் பஸ்சில், போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாண்டரின்-சைடன் கிராமத்தில் உள்ள நெடுஞ்சாலையில், ஷில்லாங் செல்லும் பஸ்களை போலீசார் சோதனை செய்தனர். அப்போது 158 சோப்பு டப்பாக்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 2 கிலோ எடையுள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு … Read more

கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க நூதன நாடகம்; அம்பலப்பட்ட சுவாரஸ்யம்.!

இந்தோனேசியாவின் தெற்கு ஜகார்த்தாவில் உள்ள ஒரு தம்பதி, தங்களின் இறந்த குடும்ப உறுப்பினர் ஒருவினரின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஒன்றை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சவப்பெட்டியுடன் தங்கள் வீட்டிற்கு வருமாறு தெரிவித்துள்ளனர். அதையடுத்து ஆம்புலன்ஸ் வந்த பின்னர், தம்பதி ஆம்புலன்ஸில் ஏறியுள்ளனர். வாகனத்தில் ஏறும் போது தம்பதியினர் நலமாக இருந்ததை ஆம்புலன்ஸ் டிரைவர் கவனித்துள்ளார். ஆம்புலன்ஸ் ஒரு நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டு இருந்த போது, சிறிது நேரம் ஆம்புலன்ஸை நிறுத்துமாறு கூறிய அந்த தம்பதி, … Read more

வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 20 பேர் பலி!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் செஹ்வான் ஷெரீப் பகுதியில் புகழ்பெற்ற சூஃபி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு ஒரு வேனில் 25 க்கும் மேற்பட்டவர்கள் புனித பயணம் மேற்கொண்டிருந்தனர். வேன் கைர்பூர் அருகே சிந்து நெடுஞ்சாலையில் வேகமாக பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையை ஒட்டிய 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அண்மையில் அங்கு ஏற்பட்ட வெள்ளத்தால் பள்ளம் முழுவதும் நீர் தேங்கியிருந்தால், அதில் மூழ்கி வேனில் பயணித்த 6 சிறுவர்கள், 8 … Read more

பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாட்டை ரத்து செய்ய வலியுறுத்தி 350க்கும் மேற்பட்டோர் போராட்டம்..!

தாய்லாந்தில் நடைபெற உள்ள ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாட்டை ரத்து செய்ய வலியுறுத்தி 350க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் பிரயூத் சான் ஓசா பதவி விலக வலியுறுத்தியபடி கையில் கிடைத்தவற்றை எல்லாம் போலீசார் மீது வீசி எறிந்தனர். ரப்பர் தோட்டாக்களால் துப்பாக்கி சூடு நடத்தி போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். Source link

கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறும் பாகிஸ்தான்! அதிகரிக்கும் நெருக்கடி!

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி: அரசியல் போராட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகளில் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றுக்கு மத்தியில், பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்தாண்டு  கிரெடிட் – டிபால்ட் – ஸ்வாப் என்னும்  (CDS) திட்டம் மூலம் நாட்டிற்கு கடன் கொடுத்தால் திரும்ப வருமா என்பது குறித்து அளவிடப்படுகிறது. CDS என்பது முதலீட்டாளரை பாதுகாக்கும் ஒரு வகையான காப்பீட்டு ஒப்பந்தமாகும். கிரெடிட்-டிஃபால்ட்  ஸ்வாப் புதன்கிழமை 56.2 சதவீதத்தில் இருந்து 75.5 … Read more