உக்ரைனில் கடுங்குளிருக்கு மத்தியில் ஏவுகணை தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா..!
உக்ரைன் மீது அடுத்தடுத்து ஏவுகணைகளை ஏவி, ரஷ்யா நடத்திய தாக்குதலால், கடுங்குளிருக்கு மத்தியில், நாடு முழுவதும் அவசரகால மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல், 60 ஏவுகணைகளை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் லான்ட்ராடிவ்கா கிராமத்தில் 8 பேரும், ஸ்வாடோவ் நகரில் ஒருவரும் பலியாகினர். 23 பேர் காயமடைந்தனர். பல பகுதிகளில் உள்கட்டமைப்புகள் முற்றிலுமாக சேதமடைந்ததால், மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு … Read more