துப்பாக்கி வாங்க, விற்க தடை: பிரதமர் அதிரடி உத்தரவு!

கனடா நாட்டில் கைத் துப்பாக்கி விற்பனையை உடனடியாக முடக்க அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டு உள்ளார். கனடா நாட்டில் கைத் துப்பாக்கிகளின் விற்பனை, வாங்குதல் மற்றும் பரிமாற்றம் செய்வதற்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுவதாகவும், இது உடனடியாக அமல்படுத்தப்படுவதாகவும் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்து உள்ளார். இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “மக்கள் கொல்லப்படும் போது, மக்கள் பாதிக்கப்படும் போது, பொறுப்பான தலைமை நாம் சிறப்பாக செயல்பட வேண்டும். … Read more

இத்தாலி புதிய பிரதமராக ஜியார்ஜியா மெலோனி பதவியேற்றார்..!

இத்தாலி புதிய பிரதமராக ஜியார்ஜியா மெலோனி  பதவியேற்றுக் கொண்டார். ரோமில் நடைபெற்ற விழாவில் அவருக்கு அதிபர் Sergio Mattarella பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து அவரது அமைச்சரவை சகாக்களும் பதவியேற்றனர். வலதுசாரி அணிக்கு தலைமை தாங்கும் மேலோனி, அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆவார். Source link

சாண்டியாகோவில் சாலையில் பறந்த கரன்சி நோட்டுகள்…!

சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் கொள்ளையடித்த பணத்தை கொள்ளையர்கள் சாலையில் வீசிச் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.  கடந்த வியாழக்கிழமை அன்று, ஒரு கடையில் இருந்து 10 மில்லியன் சிலி பெசோக்களை  திருடிவிட்டு காரில் தப்பிய கொள்ளையர்கள், போலீசார் விரட்டியதால் அந்த பணத்தை சாலையில் வீசிவிட்டுச் சென்றனர். விடாமல் விரட்டிய போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்ததோடு சாலையில் வீசிய பணத்தை கைப்பற்றினர். Source link

பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் முன்னிலை!

பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் முன்னிலை வகிப்பதாக கூறப்படுகிறது. பிரதமருக்கான போட்டியில் இருந்த ரிஷி சுனக்கை தோற்கடித்து கடந்த மாதம் பிரதமராக பொறுப்பேற்ற லிஸ் ட்ரஸ் இரு தினங்களுக்கு முன்பு பதவி விலகினார். இதனையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சி வருகின்ற 28-ம் தேதி புதிய பிரதமரை அறிவிக்கிறது. பிரதமர் போட்டியில் பெரும்பாலான கன்சர்வேட்டிவ் உறுப்பினர்களின் ஆதரவு ரிஷி சுனக்கிற்கு இருப்பதாக கூறப்படுகிறது. பென்னி மோர்டான்ட் இரண்டாவது இடத்திலும், போரிஸ் ஜான்சன் மூன்றாவது இடத்திலும் … Read more

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? – போட்டியில் முந்தும் போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக்

லண்டன்: பிரிட்டனின் அடுத்த பிரதமர் போட்டியில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் ஆகியோர் முன்னணியில் இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இடையே பிரிட்டன் பிரதமராக லிஸ் ட்ரஸ் பொறுப்பேற்றார். அவரது தலைமையிலான அரசு வரி குறைப்பு திட்டங்களில் மேற்கொண்ட குளறுபடியான நடவடிக்கைகளையடுத்து பிரிட்டன் பொருளாதாரம் மேலும் நெருக்கடிக்கு உள்ளானது. இதனால், டாலருக்கு நிகரான பவுண்ட் மதிப்பு கணிசமாக வீழ்ச்சியடைந்தது. ஏற்கெனவே அன்றாட பொருட்களின் செலவினம் அதிகரித்து வருவதால் … Read more

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் இருந்து முன்னாள் அதிபர் ஹு ஜின்டாவோ வலுக்கட்டாயமாக வெளியேற்றம்..!

சீனாவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் இருந்து முன்னாள் அதிபர் ஹு ஜின்டாவோ வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். பெய்ஜிங்கில் உள்ள அரங்கம் ஒன்றில் இன்று நடைபெற்ற மாநாட்டின்போது அதிபர் ஜி ஜின்பிங் அருகில் முன்னாள் அதிபர் 79 வயதான ஹு ஜின்டாவோ அமர்ந்திருந்தார். அப்போது இரண்டு பணியாளர்கள் அவரை அங்கிருந்து வலுக்கட்டாமாக வெளியே அழைத்துச்சென்றனர்.  Source link

சீன கம்யூ., மாநாட்டிலிருந்து முன்னாள் அதிபர் வெளியேற்றம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீன கம்யூனிஸ்ட் மாநாட்டில், அதிபர் ஷி ஜின்பிங் முன்னிலையில், முன்னாள் அதிபர் ஹூ ஜிண்டாவோவை பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடக்கும் மாநாடு அக்.,16ல் துவங்கியது. ஒருவாரத்துக்கு நடக்கும் இந்த மாநாட்டில், சீன அதிபராக ஷி ஜின்பிங் 3வது முறையாக தொடர்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.மாநாட்டின் கடைசி நாளான இன்று, அரங்கில் அதிபர் ஷி ஜின்பிங் அருகில் முன்னாள் அதிபர் ஹூ ஜின்டாவோ (79) … Read more

கனடாவில் கைத்துப்பாக்கி வாங்கவும், விற்கவும் தடை..!

ஒட்டாவா, கனடாவில் கைத்துப்பாக்கிகளின் விற்பனை, வாங்குதல் மற்றும் பரிமாற்றம் செய்வதற்கு நாடுமுழுவதும் தடைவிதிக்கப்படுவதாகவும், இது உடனடியாக அமல் படுத்தப்படும் என்றும் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடா நாடாளுமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக விவாதித்து வருகின்றனர், புதிய கைத்துப்பாக்கி முடக்கம் ஒரு “உடனடி நடவடிக்கை” என்று ட்ரூடோ நிர்வாகம் கூறிவந்தது. இந்த மசோதா தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ … Read more

இருமல் மருந்தால் குழந்தைகள் இறப்பு: மக்களே உஷார்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 69 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தனர். இதற்கு இந்தியாவில் உள்ள மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் என்ற மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தரமற்ற 4 இருமல் மருந்துகள் காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மத்திய அரசு, காம்பியா நாட்டு குழந்தைகள் இறப்புடன் தொடர்புடையதாக குற்றச்சாட்டுக்கு ஆளான மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் இருமல் மருந்து தயாரிப்புகளுக்கு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், இந்தோனேசியாவில் … Read more

கெர்சன் நகரில் 4 பேர் பலி; அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டு

கீவ், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரானது 8 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இந்த படையெடுப்பின் ஒரு பகுதியாக உக்ரைனின் 4 முக்கிய பகுதிகளை ரஷியா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதன்படி, டோனெட்ஸ்க், லுகான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோரிஜியா ஆகிய 4 பகுதிகளை கைப்பற்றிய ரஷியா அவற்றை தன்னுடன் இணைத்து கொண்டது. இதனை, ரஷிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின்போது, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டது. … Read more