பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசு பதவி வகிக்க 5 ஆண்டு தடை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) என்ற கட்சியை நடத்தி வருகிறார் 2018-ல் நடைபெற்ற தேர்தலில் இவரது கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடித்தது. சிறிய கட்சிகளின் உதவியுடன் ஆட்சியமைத்த இம்ரான் கான் 2018 முதல் 2022 ஏப்ரல் வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்தார். இதனிடையே பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இம்ரான் கான் தலைமையிலான அரசு, கடந்த ஏப்ரல் மாதம் கவிழ்ந்தது. இந்நிலையில் … Read more

ரூ. 828 கோடி கேட்கும் நைமான்| Dinamalar

மிசவுரி: உலக சாம்பியன் கார்ல்சன் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார் நைமான். உலக சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் 31. அமெரிக்காவில் நடந்த சின்குபீல்டு கோப்பை தொடரில், 19 வயது வீரர் ஹான்ஸ் நைமானிடம்(அமெரிக்கா) தோல்வியடைந்தார். அடுத்து சாம்பியன்ஸ் செஸ் தொடரில் நைமானுக்கு எதிரான போட்டியில் இருந்து வெளியேறினார். இதுகுறித்து கார்ல்சன் கூறுகையில்,”சமீபகாலமாக நைமன் அதிகமாக ஏமாற்றுகிறார். இனிமேல் இவருக்கு எதிராக விளையாட மாட்டேன்,” என்றார். கார்ல்சன் புகார் குறித்து விசாரிக்க மூன்று பேர் … Read more

ரஷ்யாவின் அண்டைநாடான போலந்து வான் எல்லையில் பறந்துசென்ற நேட்டோ போர் விமானங்கள் ..!

ரஷ்யாவின் அண்டைநாடான போலந்து வான் எல்லையில், நேட்டோ நாடுகளின் போர் விமானங்கள் பறந்து சென்றன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால், நேட்டோ நாடுகளின் கிழக்குக் பகுதியில் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, போலந்து வான் எல்லையில் நேட்டோ நாடுகளான இத்தாலியின் யூரோ ஃபைட்டர்கள், அமெரிக்காவின் எஃப்-22, போலந்தின் எஃப்-16 மற்றும் மிக்-29 போர் விமானங்கள் வானில் பறந்த சென்றன. Source link

அணையைத் தகர்க்க ரஷ்யா திட்டமிடுவதாக உக்ரைன் குற்றச்சாட்டு – பல உக்ரைனிய மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்..!

ரஷ்ய கட்டுப்பாட்டிலுள்ள “கெர்சன்” மாகாணத்தை மீண்டும் கைப்பற்ற, உக்ரைன் படைகள் கடுமையாகப் போராடிவரும் வேளையில், அங்குள்ள நோவா கக்கோவா அணையை ரஷ்யா வெடி வைத்து தகர்க்கத் திட்டமிட்டுள்ளதாக, அதிபர் செலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். அணை தகர்க்கப்படும் பட்சத்தில், பல உக்ரைனிய மாகாணங்கள் வெள்ளக்காடாக மாறும் அபாயம் உள்ளதால், அந்த முயற்சியை கைவிடும்படி, ரஷ்யாவை எச்சரிக்குமாறு, மேற்கத்திய நாடுகளுக்கு அதிபர் செலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். Source link

பாக்., மாஜி பிரதமர் இம்ரான் கான் அரசு பதவி வகிக்க 5 ஆண்டுகள் தடை| Dinamalar

இஸ்லாமாபாத் :பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அரசு பதவிகள் வகிப்பதில் இருந்து ஐந்து ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்து, அந்நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. பாகிஸ்தானில், பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்கு செல்லும் போது அங்கு அவர்களுக்கு அளிக்கப்படும் விலை உயர்ந்த பரிசுகளை, நாடு திரும்பியதும் அரசிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அந்தப் பரிசுகள், அரசு கருவூலத்தில் பாதுகாக்கப்படும். தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட தலைவர்கள் அல்லது அதிகாரிகள் அந்த பரிசு பொருட்களை விலை கொடுத்து … Read more

முட்டைக் கண்ணுன்னு சொன்னா வருத்தப்படாதீங்க… மனுஷன் எப்படி சாதிச்சிருக்கார்னு பாருங்க!

பிறப்பிலேயே கண்கள் பெரிதாக கொண்டவர்களை பார்த்து ‘முட்டைக் கண்’ என்று உலகம் கேலி பேசுவதுண்டு. ஆனால் இந்த முட்டை கண்ணையே கான்செப்ட்டாக வைத்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார் ஒருவர். பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் சிட்னி டி கார்வாலோ மெஸ்கிடா. இவர் தமது கண் இமைகளை விட்டு 18 மில்லி மீட்டர் தூரத்துக்கு விழிகளை வெளியே கொண்டு வந்து உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கண் விழிகளை வெளியில் கொண்டு வந்து மீண்டும் அவற்றை பழைய நிலைக்கு எடுத்து … Read more

ஆசிரியரின் தலையை துண்டித்து மியான்மர் ராணுவம் கொடூரச் செயல்| Dinamalar

யாங்கூன், மியான்மரில், ராணுவத்துக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, பள்ளி ஆசிரியர் ஒருவரின் தலையை துண்டித்து, ராணுவத்தினர் வாசல் கதவில் தொங்கவிட்டது, பொதுமக்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், தேர்தல் நடைபெற்று ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சி ஆட்சி அமைத்தது. ஆனால், கடந்த ஆண்டு பிப்ரவரியில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. மேலும், ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் மீது ராணுவம் … Read more

4 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பின் கிரே பட்டியலில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான்

உலக அளவில் நடக்கும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவாக நிதியுதவி போன்றவற்றை கண்காணிக்கும் அமைப்பு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு. சுருக்கமாக எஃப்.ஏ.டி.எஃப் (FATF) என்று சொல்லப்படுகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவருகிறது. இந்த அமைப்பு பயங்கரவாதத்திற்கு ஆதரவாக நிதியுதவி, சட்டவிரோத பணபரிமாற்றம் ஆகியவை எந்தெந்த நாடுகளில் அதிகம் நடைபெறுகிறது என்பதை கண்காணித்து, அந்த நாடுகளுக்கு உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற நிதி அமைப்புகள் நிதியுதவி வழங்குவதை தடுக்கும். … Read more

அமெரிக்கா – 150 எரியும் மெழுகுவர்த்திகளை 30 வினாடிகளுக்கு வாயில் வைத்து கின்னஸ் சாதனை..!

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர், 150 எரியும் மெழுகுவர்த்திகளை 30 வினாடிகளுக்கு வாயில் வைத்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார். ஐடாஹோவைச் சேர்ந்த டேவிட் ரஷ் என்ற அந்த நபர், 150 மெழுகுவர்த்திகளை வாயில் அடக்கி, பின்னர் அவற்றை தீ வைத்து ஏற்றி, 30 வினாடிகளுக்கு அப்படியே வைத்திருந்து, சாதனை படைத்தார்.  கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த காரெட் ஜேம்ஸ் என்பவர் 105 எரியும் மெழுகுவர்த்திகளை வாயில் அடைத்து கின்னஸ் சாதனை படைத்த நிலையில், அதனை டேவிட் … Read more

அதிபர்,மாஜி அதிபர் வீடுகளில் விருந்து| Dinamalar

வாஷிங்டன் :அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோர், தங்கள் வீடுகளில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை துவக்கினர். அமெரிக்காவில் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். நியூயார்க் நகரின், ‘டைம்ஸ்’ சதுக்கத்தில் கடந்த 15ம் தேதியே கொண்டாட்டங்கள் துவங்கின. இந்நிலையில், தலைநகர் வாஷிங்டனில் சிறப்பான கொண்டாட்டத்துக்கு அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதையடுத்து, அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் வாஷிங்டன் வந்தவண்ணம் உள்ளனர்.துணை அதிபர் … Read more