கார் விபத்தில் காயமடைந்தார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ பிளின்டாஃப்
லண்டனில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்பின்போது நிகழ்ந்த கார் விபத்தில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ பிளின்டாஃப் காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆண்ட்ரூ பிளின்டாஃப் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவிற்கு காயம் ஏற்படவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக பிரிட்டிஷ் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Source link