அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல்: பிரதிநிதிகள் சபையை கைப்பற்றுகிறது டிரம்ப் கட்சி

வாஷிங்டன், அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் (மேல்சபை) 105 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த 8-ந் தேதி தேர்தல் நடந்தது. 2024-ம் ஆண்டு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் இந்த தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. அதுமட்டுமின்றி ஜனாதிபதி ஜோ பைடனின் 2 ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் அளிக்கிற சான்றிதழாகவும் இந்த தேர்தல் முடிவு அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. … Read more

மாலத்தீவு தலைநகர் மாலேயில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 இந்தியர்கள் மரணம்!

மாலத்தீவு தலைநகர் மாலேயில் உள்ள நெரிசலான தங்குமிடம் ஒன்றில் தீப்பிடித்ததில் 8 இந்தியர்கள் உட்பட குறைந்தது 10 பேர் வியாழக்கிழமை கொல்லப்பட்டதாக இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியது. தீ விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. மாலத்தீவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மாலத்தீவு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், அவர்களை  +9607361452 ; +9607790701  ஆகிய எண்களில்  தொடர்பு கொள்ளலாம எனவும் ட்வீட் மூலம் தகவல் அளித்துள்ளார். “மாலேயில் ஏற்பட்ட பயங்கர தீ  … Read more

உக்ரைன் – ரஷ்யா போரில் இதுவரை 2 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: அமெரிக்கா

வாஷிங்டன்: ரஷ்யா – உக்ரைன் போரில் இரு நாட்டு தரப்பில் இதுவரை 2 லட்சம் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க மூத்த ராணுவ அதிகாரி ஜென் மார்க் கூறும்போது, “இதுவரை ரஷ்யா – உக்ரைன் போரில் 40,000 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இரு நாட்டு தரப்பிலும் 2 லட்சம் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளன” என்று தெரிவித்தார். சமீப நாட்களாகவே போர் தொடர்பாக ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட உக்ரைன் ஆர்வம் காட்டி வருகிறது. மேலும், … Read more

இங்கிலாந்து அரசர் சார்லஸ் – ராணி கமிலா மீது முட்டை வீச்சு…!

லண்டன், இங்கிலாந்து அரசர் சார்லஸ் அவரது மனைவி ராணி கமிலா இன்று அந்நாட்டின் யார்க்‌ஷெரி மாகாணத்திற்கு அரசு முறை பயணமாக சென்றனர். அம்மாகாணத்தின் மிக்லிகெட் பார் பகுதியில் சார்லஸ் – கமிலா வந்தனர். அவர்களை வரவேற்க அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு நபர் சார்லஸ் – கமிலா மீது முட்டையை வீசி தாக்குதல் நடத்தினார். இந்த முட்டை வீச்சு தாக்குதலில் முட்டை சார்லஸ் மீது விழாமல் தரையில் விழுந்தது. முட்டை வீசியபோது … Read more

பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை… நெருங்கும் ஆராய்ச்சியாளர்கள்..!

கிளியோபாட்ரா இந்த பெயரை கேட்டதும் பலருக்கும் பேரழகி; எகிப்து அரசி, சக்திவாய்ந்த பெண், கண்களால் அனைவரையும் கவரும் திறன் படைத்தவர், அழகால் ஒரு சாம்ரஜ்ஜியத்தையே அழித்த பேரரசி இப்படி பல விஷயங்கள் கண் முன் வந்து போகும். எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி என தன்னை கூறிக் கொண்ட கிளியோபாட்ரா, 18 வயதிலேயே அரசியாகி சிறப்பாக ஆட்சி செய்தவர். சிறுவயதிலேயே அவருக்கு அரசாட்சி, தலைமைத்துவம் பற்றி கற்றுக் கொடுத்திருந்தார் அவரது தந்தையும் அரசருமான 12ஆம் தாலமி. எகிப்திய … Read more

ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை ஈட்டும் முதல் இந்திய நிறுவனமாக உருவெடுத்துள்ளது ஜோஹோ

ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை ஈட்டும் முதல் இந்திய நிறுவனமாக ஸ்ரீதர் வேம்புவின் ஜோஹோ நிறுவனம் உருவெடுத்துள்ளது. சென்னையைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் மென்பொருள் நிறுவனமான ஜோஹோ, உலகளாவிய வருவாயில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது என்றாலும், நடப்பு ஆண்டில் அதன் வளர்ச்சி குறையும் என்று நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார். பயனர்களுக்கு அதிவேக நெட்வொர்க்குகளை வழங்க அடுத்த 5 ஆண்டுகளில், உலகம் முழுவதும் 100 … Read more

"ரஷியாவின் தாக்குதலால் உக்ரைனில் 50 லட்சம் ஏக்கர் காடுகள் அழிப்பு" – ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

கெய்ரோ, உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தாக்குதலை தொடங்கியது. தற்போது வரை தொடர்ந்து நீடித்து வரும் இந்த போரில், இருதரப்பிலும் அதிக உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷிய படைகள் வசம் சென்றுள்ளன. இந்த நிலையில் எகிப்தில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச உச்சி மாநாட்டில் காணொலி வாயிலாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், காலநிலை மாற்றத்துக்கு எதிராக … Read more

போலி கணக்குகளுக்கும் ப்ளூ டிக்: அதிருப்தியில் ட்விட்டர் பயனர்கள்

கலிஃபோர்னியா: போலிச் செய்திகளைப் பரப்புவோரும் ட்விட்டரில் ப்ளூ டிக் பெறுவதை பயனாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிகாரபூர்வ பக்கங்கள் என்பதற்கான அடையாளமாக முன்பு ட்விட்டரில் ப்ளூ டிக் பெறுவதற்கு வழிமுறைகள் சற்று கடினமாக இருந்தது. பத்திரிகையாளர்களும், செய்தி நிறுவனங்களும், பிரபலங்களும் நம்பகத்தன்மையின் அடிப்படையில் ப்ளூ டிக் பெற்று வந்தனர். இந்த நிலையில், எலான் மஸ்க் வகுத்துள்ள புதிய விதிமுறையால் பொய்ச் செய்திகளை பரப்பும் பல போலிக் கணக்குகளும் ப்ளூ டிக் பெற்று வருகின்றன. இந்த முறையினால் போலிச் … Read more

லாலுவுக்கு சிறுநீரகத்தை தானம் அளிக்கும் மகள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிங்கப்பூர் சிட்டி: உடல் நலக்குறைவால் அவதிப்படும் ராஷ்ட்ரிர ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத்துக்கு அவரது மகள் ரோகிணி ஆச்சார்யா சிறுநீரகம் தானம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கால்நடை தீவன ஊழல் வழக்கில் கைதாகி சிறை சென்ற, பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்(74), உடல் நலக்குறைவு காரணமாக ஜாமினில் வெளியே வந்துள்ளார். டில்லி மற்றும் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற அவர், நீதிமன்றம் … Read more

உக்ரைனின் கெர்சன் நகரில் இருந்து தனது இராணுவத்தை வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவு

உக்ரைனின் கெர்சன் நகரில் இருந்து தனது இராணுவத்தை வெளியேறுமாறு ரஷியா உத்தரவிட்டுள்ளது , உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷியப் படைகள் வசம் சென்றுள்ளன. உக்ரைன் தெற்கு பகுதி நகரமான கெர்சனுக்குள் புகுந்த ரஷிய ராணுவத்தினர், அங்குள்ள வீடுகளை ஆக்ரமித்துடன் பொருட்களை கொள்ளை அடிப்பதாகவும், பொதுமக்களை காலி செய்யுமாறு உத்தரவிட்டு வருவதாகவும் உக்ரைன் குற்றம் சாட்டி இருந்தது. அந்த நகரத்தில் 3 லட்சம் … Read more