மீண்டும் ரிஷி சுனக்… கருத்துக்கணிப்பில் குவியும் ஆதரவு – பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்?

லண்டன்: பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். வெறும் 45 நாட்கள் மட்டுமே பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்துள்ளார் லிஸ் ட்ரஸ். பிரிட்டனின் பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற லிஸ் ட்ரஸ், பிரிட்டனின் மந்தமான பொருளாதாரத்தை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை ஈடுபட்டார். அந்த வகையில் லிஸ் ட்ரஸ்ஸால் அறிவிக்கப்பட்ட புதிய பட்ஜெட்டில் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், லிஸ் ட்ரஸின் இந்த முடிவு பிரிட்டன் பொருளாதாரத்தை உயர்த்த … Read more

பிரிட்டன் அரசில் மீண்டும் குழப்பம் 45 நாளில் பதவி விலகினார் பிரதமர்| Dinamalar

லண்டன்:பொருளாதாரத்தை மேம்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால், சொந்தக் கட்சியினர் கடும் எதிர்ப்பை அடுத்து, பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ், 45 நாட்களில் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அடுத்த வாரத்துக்குள் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், கடந்த ஜூலையில் தன் பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவரே, பிரதமராக பதவியேற்க முடியும். அதன்படி, கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இதில், முன்னாள் … Read more

பெண்களிடம் அத்துமீறும் ஈரான் அரசு 15 வயது பள்ளி மாணவி அடித்துக் கொலை| Dinamalar

டெஹ்ரான் :ஈரானில், ஆட்சிக்கு ஆதரவான பாடலை பாட மறுத்த 15 வயது பள்ளி மாணவி, பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்காசிய நாடான ஈரானில், பொது இடங்களில் பெண்கள், ‘ஹிஜாப்’ எனப்படும் முகத்தை மறைக்கும் துணியை அணிவது கட்டாய சட்டமாக உள்ளது. இதை மீறும் பெண்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. ஹிஜாப் அணியாமல் சென்றதற்காக சமீபத்தில் கைது செய்யப்பட்ட மாஸா அமினி, 22, என்ற பெண், போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் … Read more

மசூதி தரைமட்டம்.. முஸ்லீம்கள் ஷாக்; பகீர் வீடியோ உள்ளே!

இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் ஜகார்த்தா இஸ்லாமிய மையம் உள்ளது. இங்குள்ள பெரிய மசூதி கட்டிடத்தில் கடந்த புதன்கிழமை புதுப்பித்தல் பணிகள் நடந்து கொண்டு இருந்தது. அப்போது பெரிய மசூதியின் ராட்சத குவிமாடம் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் மசூதியின் குவிமாடம் இடிந்து விழுந்தது. குருவி மாடம் விழுவதற்கு சற்று முன்பு அதில் இருந்து தீப்பிழம்புகள் மற்றும் புகை கிளம்பியதை வெளியான வீடியோ … Read more

சீனாவில் ஷி ஜின்பிங்கிற்கு எதிராக போராட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: கடந்த 16 ம் தேதி ,சீன அதிபராக ஷி ஜின்பிங்கிற்கு எதிராகவும், அவரை பதவியில் இருந்து நீக்கும்படி பீஜிங்கில் உள்ள பாலம் ஒன்றில் பேனர் கட்டி சிலர் போராட்டம் நடத்தி உள்ளனர். கோவிட் காரணமாக அங்கு அமல்படுத்தப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜின்பிங்கிற்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டதாக தெரிகிறது. மேம்பாலத்தில் ஒட்டப்பட்ட பேனரில், ‘ வேலை நிறுத்தத்தில் ஈடுபடுங்கள்! சர்வாதிகாரியும் தேசத் துரோகியுமான ஜி … Read more

பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் ராஜினாமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டன் பிரதமர் லிஸ்டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் முயற்சியில் ஆளும் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகினார். ஆளும் கட்சியின் தலைவராக இருப்பவரே, பிரதமராக முடியும். இதன்படி கட்சித் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ், இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி … Read more

45 நாள்களில் பதவி காலி… லிஸ் ட்ரஸ் ராஜினாமா – இங்கிலாந்தின் அடுத்த பிரமதர் யார்?

இங்கிலாந்தில் பிரதமராக பொறுப்பேற்ற, லிஸ் ட்ரஸ் கொண்டுவந்த பொருளாதார திட்டங்கள், பொருளாதாரத்தை கடும் வீழ்ச்சியடைய செய்தது. சந்தைகளில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த திட்டங்கள், அவருடைய கன்சர்வேடிவ் கட்சியிலும் பிளவை உண்டாக்கியது.  தொடர்ந்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் போர்க்கொடி உயர்த்தினர்.   இந்நிலையில், தான் பதவியேற்ற 45ஆவது நாளில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக லிஸ் ட்ரஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”கன்சர்வேடிவ் கட்சியால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, … Read more

வெறும் 45 நாட்கள்… – பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவி விலகல்

லண்டன்: பட்ஜெட்டில் செல்வந்தர்களுக்கு வரி ரத்து செய்த விவகாரத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். வெறும் 45 நாட்கள் மட்டுமே பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்துள்ளார் லிஸ் ட்ரஸ். இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள டவுனிங் சாலையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் லிஸ் ட்ரஸ் பேசும்போது, “கன்சர்வேடிவ் கட்சித் தலைவராக நான் தேர்தெடுக்கப்பட்டதற்கான நோக்கத்தை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. இதன் காரணமாக நான் கன்சர்வேடிவ் கட்சி … Read more

பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் லிஸ் டிரஸ்… பிரிட்டன் அரசியலில் பரபரப்பு!

பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். லிஸ் டிரஸ். நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரணமாக அவர் பதவி விலகும் முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனதால், இந்த முடிவுக்கு வந்ததாக லிஸ் டிரஸ் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, லி்ஸ் டிரஸ் அமைச்சரவையில் அங்கம்வகித்த உள்துறை அமைச்சர் தமது பதவியை ராஜினாமா செய்திருந்தார். பொருளாதார மந்த … Read more

நடப்பு ஆண்டில் 99 குழந்தைகள் இறப்பு: இந்தோனேசியாவில் இருமல் மருந்துகளுக்குத் தடை

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் நடப்பு ஆண்டில் மட்டும் 99 குழந்தைகள் உயிரிழந்ததன் எதிரொலியாக, அந்நாட்டில் அனைத்து வகையான இருமல் மருந்துகளின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியான நிலையில், இந்திய மருந்து நிறுவனத் தயாரிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. குழந்தைகள் இறப்புக்கு மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் என்ற இந்திய நிறுவனத்தின் தயாரிப்புகள் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. … Read more