“மின்கட்டமைப்பை சீரமைக்க 800 மில்லியன் யூரோ தேவை” – உக்ரைன் வேண்டுகோள்
ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு வரும் உக்ரைனில் சேதமடைந்த மின்கட்டமைப்பை சீரமைக்க 800 மில்லியன் யூரோ தேவைப்படுவதாக ஐரோப்பிய யூனியனுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைனுக்கு உதவுவதற்காக பாரிஸில் நடந்த சர்வதேச மாநாட்டில் இக்கோரிக்கையை முன்வைத்த ஜெலன்ஸ்கி, நிதியாக மட்டுமின்றி மின்மாற்றிகள், உயரழுத்த மின்கம்பிகள், ஜெனரேட்டர்கள் போன்றவற்றையும் வழங்க வேண்டும் என்றார். மின்சார கட்டமைப்புகள் சேதப்படுத்தப்பட்டதால் வரும் குளிர் காலத்தை சமாளிக்கும் வகையில் சுமார் இரண்டு பில்லியன் கன மீட்டர் கூடுதல் எரிவாயுவை வழங்க வேண்டுமென … Read more