சந்திர கிரகணம் – வானில் தோன்றிய அதிசயம்

உலகின் பல்வேறு இடங்களில் இந்தாண்டின் கடைசி சந்திர கிரகணம் தென்பட்டது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.39 மணி முதல் மாலை 6.19 மணி வரை நிகழ்ந்த சந்திர கிரகணம், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென்பட்டது. அதேபோல், இந்தியாவில் பாட்னா, கவுகாத்தி உள்ளிட்ட இடங்களிலும் சந்திர கிரகணத்தை மக்கள் கண்டு வியந்தனர். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களில் சந்திர கிரகணம் தென்படாத நிலையில், பருவமழையால் மழை பெய்ததால் கிரகணத்தை சரியாக … Read more

புகழ்பெற்ற carry on அடல்ட் காமெடி படவரிசையில் நடித்த பிரபல நடிகர் லெஸ்லி பிலிப்ஸ் காலமானார்.!

புகழ்பெற்ற carry on அடல்ட் காமெடி படவரிசையில் நடித்த பிரிட்டன் நடிகர் லெஸ்லி பிலிப்ஸ் அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 98.அண்மைக்காலத்தில் ஹாரிபாட்டர் தொடர்களிலும் அவர் நடித்திருந்தார். 80 ஆண்டுக்கால திரையுலக வாழ்க்கையில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் லெஸ்லி பிலிப்ஸ் நடித்துள்ளார். தனது தனித்த குரல் வளத்தால் அவர் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் மிகவும் புகழ் பெற்று BAFTA உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார். Source link

நேபாளம் நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை என்ன?

நேபாளத்தில் இன்று (நவம்பர் 9) அதிகாலை 2 மணியளவில் 6.3 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்துக்கு 6 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கம் டெல்லி உள்ளிட்ட வட மாவட்டங்களில் உணரப்பட்டன. Breaking: ‘டெல்லியில்’…உணரப்பட்ட நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி! நேபாள எல்லையை ஒட்டிய உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகருக்கு தென்கிழக்கே 30 கி.மீ தொலைவில் நிலநடுக்கத்தின் தோற்றம் … Read more

நேபாளம் டூ டெல்லி… ஒரே இரவில் நடந்த 6 சம்பவங்கள்- நிலநடுக்கமும், மக்கள் பீதியும்!

வட இந்தியாவிற்கு இன்று (நவம்பர் 9) காலை மிகவும் பதற்றமான பொழுதாக விடிந்திருக்கிறது. அதற்கு காரணம் தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட நில அதிர்வு. இது மிகவும் லேசாகத் தான் உணரப்பட்டுள்ளது. இதனால் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் நில அதிர்வை உணர்ந்த மக்கள் அச்சத்துடன் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர். வெறும் 10 வினாடிகளே நில அதிர்வு உணரப்பட்டாலும், அதன்பிறகு தூக்கமே போச்சு என திக் திக் இரவாக தொடர்ந்துள்ளது. இந்த … Read more

இம்ரான் கானைக் கொல்ல 2 மாதங்களுக்கு முன்பே சதித்திட்டம் தீட்டப்பட்டதா? பகீர் புகார்

Imran Khan: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானின் குஜ்ரன்வாலாவில் பேரணியில் கலந்துக் கொண்டபோது, திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரது காலில் இருந்து 3 தோட்டாக்களை எடுத்ததாகவும், தன்னைக் கொல்வதற்காக 2 மாதங்களுக்கு முன்பே சதி திட்டம் தீட்டப்பட்டது என்று இம்ரான் கான் தெரிவித்திருப்பது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சமீபத்தில் அளித்த பேட்டியில், தனக்கு எதிரான தாக்குதல் … Read more

உலகின் மிகக் காரமான மிளகாய்களைத் தின்று கின்னஸ் சாதனை..!

உலகின் மிகக் காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை 33 வினாடிகளில் சாப்பிட்டு இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த கிரிகோரி ஃபோஸ்டர், 10 காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை 33.15 வினாடிகளில் முழுவதுமாக சாப்பிட்டு, தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். நாம் உணவில் எடுத்துக் கொள்ளும் காரத்தை ஸ்கோவில் ஹீட் யூனிட்கள் என்ற அலகில் மதிப்பிடுவார்கள். அதன்படி, கரோலினா ரீப்பர் மிளகாய் ஒன்றில் உள்ள காரத்தின் அளவு 16 லட்சத்து 41 ஆயிரத்து 184 … Read more

கடலில் தத்தளித்த 317 அகதிகளை மீட்டது சிங்கப்பூர் கடற்படை| Dinamalar

கொழும்பு: பிலிப்பைன்ஸ் நாட்டு கடல் பகுதியில் பழுதடைந்த கப்பலில் சிக்கித் தவித்த, 317 பேரை சிங்கப்பூர் கடற்படையினர் மீட்டனர். நம் அண்டை நாடான இலங்கையில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல், தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பழுது அடைந்தது. அந்த கப்பலில் இருந்த 300க்கும் மேற்பட்டோர் நடுக்கடலில் சிக்கித் தவித்தனர். தகவல் அறிந்த, தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் கடற்படை விரைந்து சென்று அனைவரையும் மீட்டது. இதுகுறித்து, … Read more

9,842 அடி உயரத்திலிருந்து குதித்து ‘ஸ்கை டைவிங்’ சாகசம்..!

பிரேசில் நாட்டு ஸ்கேட்போர்டிங் வீராங்கனை லெட்டிசியா பஃபோனி , சுமார் 10,000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து குதித்து ஸ்கைடைவிங் சாகசம் நிகழ்த்தினார். மிஷன் இம்பாசிபிள் பால் அவுட்  திரைப்படத்தில், நடிகர் டாம் குரூஸ் விமானத்திலிருந்து குதிக்கும்போது அவருடன் சேர்ந்து குதித்து அதனை படம்பிடித்த ஒளிப்பதிவாளர் கிரெய்க் ஒ பிரைன் இந்த காட்சியையும் படம் பிடித்துள்ளார். Source link

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா பயணம்: உக்ரைனுடன் பேச வலியுறுத்தல்

மாஸ்கோ: மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு சென்றுள்ளார். ரஷ்யாவும், உக்ரைனும் அமைதி பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். உக்ரைன் – ரஷ்யா மோதல் உச்சத்தை எட்டி, அணு ஆயுத போர் மூளும் அபாயம் எழுந்துள்ளது. இந்த சூழலில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு நேற்று சென்றார். அங்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவ்வை அவர் சந்தித்துப் … Read more