மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா பயணம்: உக்ரைனுடன் பேச வலியுறுத்தல்

மாஸ்கோ: மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு சென்றுள்ளார். ரஷ்யாவும், உக்ரைனும் அமைதி பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். உக்ரைன் – ரஷ்யா மோதல் உச்சத்தை எட்டி, அணு ஆயுத போர் மூளும் அபாயம் எழுந்துள்ளது. இந்த சூழலில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு நேற்று சென்றார். அங்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவ்வை அவர் சந்தித்துப் … Read more

அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டி? வரும் 15ல் அறிவிக்கிறார் டிரம்ப்!| Dinamalar

வாஷிங்டன், “மிக முக்கியமான அறிவிப்பை வரும், 15ம் தேதி வெளியிடுவேன்,” என, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருப்பது உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஒஹியோ மாகாணத்தில் தன் ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று பேசினார். அப்போது, ”வரும் 15ம் தேதி முக்கியமான அறிவிப்பை வெளியிடுவேன்,”என்றார்.இது உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 2024ல் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது பற்றி … Read more

அமைதி பேச்சுவார்த்தைக்கு க்ரீன் சிக்னல் காட்டும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி!

அமெரிக்காவில் முக்கியமான  இடைத் தேர்தலுக்கு முன்னதாக, ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சாத்தியம் குறித்து உக்ரைன் அதிபர் சூசகமாக தெரிவித்துள்ளார்.  முன்னதாக அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்த நிலையில், இப்போது தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். வோலோடிமிர் ஜெலென்ஸ்கி திங்கள்கிழமை சர்வதேச சமூகத்திற்கு விடுத்த செய்தியில் “உண்மையான அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவை கட்டாயப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார். மேலும், பேச்சுவார்த்தைக்கான தனது வழக்கமான நிபந்தனைகளை பட்டியலிட்டார். அவை  உக்ரைனின் அனைத்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களையும் திரும்பப் பெறுதல், … Read more

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு சாத்தியம் உள்ளது: நிலைப்பாட்டை மாற்றிய ஜெலன்ஸ்கி

கீவ்(உக்ரைன்): ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த சாத்தியம் உள்ளதாக உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார். ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சாத்தியமே இல்லை என இதுவரை கூறி வந்த ஜெலன்ஸ்கி, தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கிறார். நோட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் முயன்றதை அடுத்து, அதை தடுக்க ரஷ்யா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இது தொடர்பாக அந்நாட்டுடன் ரஷ்யா, பெலாரஸ் மற்றும் துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், கடந்த பிப்ரவரி 24ம் தேதி … Read more

ஆடையின்றி படுத்திருந்த உயர் அதிகாரி… படுக்கையில் அலறிய பெண் – கடைசியில் ட்விஸ்ட்!

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இறைச்சி விற்பனை சார்ந்த நிறுவனத்தின் தலைமை பதவியில் இருக்கும் ஒருவர், நேற்று முன்தினம் (நவ. 6) இரவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  டைசன் ஃபுட்ஸ் என்ற நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியும், அந்த நிறுவனத்தின் நிறுவனரின் கொள்ளுப்பேரனுமான ஜான் ஆர் டைசன் குடிபோதையில், ஒரு பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக கைதுசெய்யப்பட்டார்.  கடந்த ஞாயிறு அன்று அதிகாலையில், ஃபயெட்டெவில்லே போலீசாருக்கு அவசர அழைப்பின்கீழ் புகார் ஒன்று வந்துள்ளது. ஆர்கன்சாஸ் பகுதியில் இருக்கும் பெண் … Read more

எகிப்து சிறையில் ஊசலாடும் ஒரு போராளியின் உயிர் – அலா அப்துல் பத்தாஹை கவனிக்குமா உலக நாடுகள்?

கெய்ரோ: எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் நகரில் ‘சிஓபி27’ என்ற தலைப்பில் அனைத்து உலகப் பருவநிலை மாற்ற மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 18-ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 100-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் ஷர்ம் எல்-ஷேக் நகருக்கு வந்துள்ளனர். ஆனால், இந்த மாநாட்டினைவிட கூடுதல் கவனம் பெற்றிருக்கிறார் எகிப்து நாட்டினைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அலா அப்துல் பத்தாஹ். இவர் தற்போது … Read more

கனடா தேர்தலில் சீனா தலையிட முயன்றதாக ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு..!

கனடா நாட்டு தேர்தலில் சீனா தலையிட முயன்றதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியுள்ளார். 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களுக்கு சீனா தேர்தல் நிதி அளித்ததாகவும், சீன உளவாளிகள் அவர்களுக்கு தேர்தல் ஆலோசகர்களாக செயல்பட்டதாகவும் அந்நாட்டு பத்திரிக்கையில் செய்தி வெளியானது. மேலும், ஆளும் கட்சி, எதிர்கட்சி வட்டங்களில் சீனாவின் செல்வாக்கை நிலைநாட்ட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  Source link

ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற மந்திரம் உலக நலனுக்கு வழிவகுக்கும்: பிரதமர் மோடி

புதுடெல்லி: ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இந்தியாவின் மந்திரம் உலக நலனுக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 கூட்டமைப்பிற்கு வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் இந்தியா தலைமை வகிக்க உள்ளது. இதை முன்னிட்டு, இதற்கான லோகோ, இணையதளம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: “ஜி20 நாடுகளின் கூட்டமைப்புக்கு … Read more

தொடர்ந்து வலுக்கும் ஹிஜாப் போராட்டம்; 'குதிரை' படைகளை நிறுத்தியுள்ள ஈரான் அரசு!

குர்திஷ் வம்சாவளியைச் சேர்ந்த ஈரானியரான அமினி, தெஹ்ரானில் கலாச்சார காவல் துறையினரால், கைது செய்யப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 16 அன்று மர்மமான முறையில் இறந்தார். இதை அடுத்து அங்கே பெரும் போராட்டம் வெடித்தது. ஈரானிய அதிகாரிகள் போராட்டங்களை ஒடுக்கும் முயற்சியில் பலவிதமான தாக்குதல்களை நடத்தினர். வெடிமருந்துகள், குண்டுகள், கண்ணீர்ப்புகை குண்டுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி பாதுகாப்புப் படையினர் எதிர்ப்பாளர்கள் மீது நேரடியாகச் சுட்டனர். மேலும், அரசாங்கம் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பை அணுகுவதைத் தடுப்பது உட்பட இணையக் … Read more

ரஷ்ய எண்ணெய் வாங்குவது இந்தியாவுக்கு சாதகம்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது இந்தியாவுக்கு சாதகம் என, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார். ரஷ்யா – உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். இன்று, தலைநகர் மாஸ்கோவில், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை, அவர் சந்தித்து பேசினார். அப்போது, இரு நாட்டு நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் … Read more