பழனிசாமி, பன்னீர் மீதானஅவதுாறு வழக்கு தள்ளுபடி| Dinamalar
புதுடில்லி,:அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, பன்னீர் செல்வம் ஆகியோர் மீதான அவதுாறு வழக்கில், மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளராக இருந்த பெங்களூரைச் சேர்ந்த வி.புகழேந்தி 2021ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் மீது, சென்னை உயர் நீதிமன்றத்தில் புகழேந்தி அவதுாறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இதை … Read more