இந்தோனேசியாவில் வெடித்துச்சிதறிய எரிமலை: 2 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு
ஜகார்த்தா, இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள லுமாஜாங் நகரில் அந்நாட்டின் மிகப்பெரிய எரிமலையான செமேரு உள்ளது. சுமார் 12 ஆயிரம் அடி உயரம் கொண்ட செமேரு எரிமலை திடீரென்று வெடித்து சிதறியது. கன மழை காரணமாக செமேரு எரிமலையின் குவி மாடம் சரிந்தது. இதனால் எரிமலையில் நெருப்பு குழும்பு வெளியேற தொடங்கியது. எரிமலையில் இருந்து சாம்பல் புகை மற்றும் நெருப்பு குழம்பு வெளியாகி வருகிறது. 5 ஆயிரம் அடி உயரத்துக்கு சாம்பல் புகை மேலே எழும்பியுள்ளது. … Read more