பிலிப்பைன்ஸ் வியட்நாம் கடற்பகுதியில் விபத்து! 300 பேர் பயணித்த கப்பல் கவிழ்ந்தது

சென்னை: பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெறியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலளார் வைகோ எம்.பி. அவர்கள் இன்று ( 08.11.2022 ) கடிதம் எழுதியுள்ளார். அதில், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன் என்று திரு வைகோ தெரிவித்துள்ளார். விபத்தில் சிக்கிய கப்பலில் 306 இலங்கை அகதிகள் … Read more

வந்ததும் போச்சு ரூ.10 கோடி| Dinamalar

கராச்சி : பாகிஸ்தான் கராச்சி நகரில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை அதிகாரியாக பணிபுரிபவர் ஆமீர் கோபங். இவரது வங்கி கணக்கில் சம்பளத்துடன் அடையாளம் தெரியாத வழியில் ரூ.10 கோடி விழுந்து உள்ளது. இதுகுறித்து அவர் அறியவில்லை. திடீரென வங்கியில் இருந்து டெலிபோன் மூலம் வங்கி கணக்கில் ரூ.10 கோடி விழுந்துள்ளது என அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆமீர் கோபங் மகிழ்ச்சியில் திக்கு முக்காடினார். கோபங் கூறியதாவது: இவ்வளவு பணம் எனக்கு கிடைத்தது அறிந்து அதிர்ச்சியுற்றேன். … Read more

பாகிஸ்தானில் இந்து சமூகத்தினரின் நிலை என்ன? இந்துக்களின் கலாச்சாரமும் உரிமைகளும்

இன்றைய பாகிஸ்தானில் உள்ள பெரும்பாலான இந்துக்கள் ஓரங்கட்டப்பட்டவர்கள் என்பதும், அதிக துன்புறுத்தல் அனுபவிப்பவர்கள் என்பதும் உலகம் அறிந்த உண்மை. பாகிஸ்தானில் சுமார் 4 மில்லியன் இந்துக்கள் வாழ்கின்றனர், இது மொத்த மக்கள் தொகையில் 1.9 சதவீதமாகும். இவர்களில் 14 லட்சம் இந்துக்கள் சிந்துவில் வாழ்கின்றனர். பாகிஸ்தானில் இந்துக்கள் வழிபட தடை இல்லை, ஆனால் இந்துக்கள் முறையாக வழிபட முடியவில்லை என்று வெளிப்படையாகவே புகார் கூறுகிறார்கள். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல தசாப்தங்களாக நீடித்து வரும் பிரச்சனை, அங்கு … Read more

பருவநிலை மாற்ற உச்சி மாநாடு தொடக்கம் – 100-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் எகிப்தில் குவிந்தனர்

ஷர்ம் எல்-ஷேக் (எகிப்து): எகிப்தில் நடைபெற்று வரும் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 100-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் ஷர்ம் எல்-ஷேக் நகருக்கு வந்துள்ளனர். எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் நகரில் சிஓபி27 என்ற தலைப்பில் அனைத்து உகப் பருவநிலை மாற்ற மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. நவம்பர் 18-ம் தேதி வரை மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் எகிப்துக்கு வருகை தந்துள்ளனர். நேற்று நடைபெற்ற உச்சி … Read more

பைனலில் இந்தியா- பாகிஸ்தான் மோதல்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிட்னி: ”உலக கோப்பை பைனலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத வேண்டும்,” என ஷேன் வாட்சன் தெரிவித்தார்.ஆஸ்திரேலியாவில் ‘டி-20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. அரையிறுதியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் (நாளை), இந்தியா-இங்கிலாந்து (நவ. 10) அணிகள் மோத உள்ளன. இதில் வெல்லும் அணிகள் நவ. 13ல் மெல்போர்னில் நடக்கவுள்ள பைனலில் பலப்பரீட்சை நடத்தும். இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி முன்னாள் ‘ஆல் ரவுண்டர்’ ஷேன் வாட்சன் கூறுகையில்,”டி-20′ உலக கோப்பை தொடரின் … Read more

இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு: 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்ய பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பேரணி நடத்தியபோது இம்ரான் கான் (70) துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தில் 24 மணி நேரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு போலீஸாருக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் கூறி இம்ரான் கானின் தெக்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி பஞ்சாப் மாகாணத்திலிருந்து தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி கடந்த 4-ம் தேதி பேரணி நடத்தியது. இதில் கலந்து கொண்ட இம்ரான் … Read more

சிறந்த வீரர் கோஹ்லி: ஐ.சி.சி., அறிவிப்பு| Dinamalar

துபாய்: ஐ.சி.சி., சார்பில் அக்டோபர் மாதத்தின் சிறந்த வீரராக இந்தியாவின் கோஹ்லி தேர்வு செய்யப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் சிறப்பாக செயல்பட்ட ‘டாப்-3’ வீரர், வீராங்கனைகளுக்கான பரிந்துரை பட்டியலை ஐ.சி.சி., வெளியிட்டது. சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் விராத் கோஹ்லி, தென் ஆப்ரிக்காவின் டேவிட் மில்லர், ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராஜா பரிந்துரைக்கப்பட்டனர். இதில் கோஹ்லி, சிறந்த வீரராக … Read more

40 பயணிகளை ஏற்றிச்சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக ஏரிக்குள் விழுந்து விபத்து..!

கிழக்காப்ரிக்க நாடான தான்சானியாவில் 40 பயணிகளை ஏற்றிச்சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. டாரஸ் சலாம் நகரிலிருந்து புறப்பட்ட அந்த சிறிய ரக பயணிகள் விமானம், புகோபா நகர விமான நிலையத்தை நெருங்கியபோது, 328 அடி உயரத்தில், மழை மற்றும் மோசமான வானிலையால் எஞ்சின் பழுதடைந்து ஏரிக்குள் பாய்ந்தது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. Source link

”Parody என குறிப்பிடாமல், பிறரின் பெயர்களில் இயங்கும் கணக்குகள் முடக்கப்படும் – சி.இ.ஓ. எலான் மஸ்க்..!

டிவிட்டரில் parody என குறிப்பிடாமல், பிறரின் பெயர்களில் ஆள்மாறாட்டம் செய்யும் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். டிவிட்டரில் பொதுவாக கணக்குகளை முடக்கும் முன் பயனர்களுக்கு அது குறித்து எச்சரிக்கப்பட்டு வந்த நிலையில், இனி ‘பரோடி’ என குறிப்பிடாத கணக்குகளை எச்சரிக்காமல் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். எலான் மஸ்க் என தங்களது கணக்கின் பெயரை மாற்றி, அவரை கேலி செய்து பதிவிட்டு வந்த பல … Read more