முதன்முறையாக தனது மகளுடன் பொதுவெளியில் தோன்றிய வடகொரிய அதிபர்..!

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், அவருடைய மகளுடன் ஏவுகணை சோதனையை காண வந்த புகைப்படங்களை அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது.  பாதுகாப்பு காரணங்களுக்காக கிம் ஜாங் உன்னின் மகள் யார் என்பது குறித்த விவரத்தை அந்நாட்டு அரசு ரகசியமாக வைத்திருந்தது. இதனால் வெளியுலகுக்கு அவர் குறித்த விவரம் தெரியாமல் இருந்தது. இந்நிலையில்  கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும்  ஏவுகணை சோதனையை  மகளுடன் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டுள்ளார்.   Source link

இந்தியா நிரந்தர உறுப்பினராக பிரான்ஸ், பிரிட்டன் ஆதரவு| Dinamalar

நியூயார்க்-ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினராக இந்தியா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பானை நியமிக்க, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஐ.நா.,வின் மிக உயரிய குழுவான ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், ௧௫ உறுப்பு நாடுகள் உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன. தற்போது பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமில்லாத உறுப்பினராக இந்தியா உள்ளது. இந்த இரண்டாண்டு பதவிக் காலம், அடுத்த மாதத்துடன் முடிகிறது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை … Read more

விமானம் – வாகனம் மோதல் பெரு நாட்டில் இருவர் பலி

லிமா,-பெரு நாட்டில், பயணியர் விமானம் ஒன்று ஓடுதளத்தில் செல்கையில், எதிரே வந்த தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில், தீயணைப்பு வீரர்கள் இருவர் பலியாகினர்; விமான பயணியர் உயிர் தப்பினர் தென் அமெரிக்க நாடான பெரு தலைநகர் லிமாவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, நேற்று முன்தினம் ௬௧ பயணியரை ஏற்றிக்கொண்டு விமானம் புறப்பட்டது. அப்போது, ஓடுதளத்தில் எதிரே வந்த தீயணைப்பு வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி, தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வாகனம் … Read more

ரத்த மாதிரி மூலமாக நோய்களை கண்டறியும் இயந்திர மோசடி – இளம் பெண் தொழிலதிபருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை..!

ரத்த மாதிரியைக் கொண்டு நோய்களை கண்டறியும் பரிசோதனை இயந்திரம் தயாரிப்பு மோசடி தொடர்பாக தெரனோஸ் நிறுவனத்தின் தலைவருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த எலிசபெத் ஆனி ஹோல்மெஸ் தனது 19 ஆவது வயதில் தெரனோஸ் என்ற நிறுவனத்தை 2003 ஆம் ஆண்டு துவங்கி ரத்தப் பரிசோதனை மூலமாக அனைத்து விதமான நோய்களையும் கண்டறியும் இயந்திரம் கண்டுபிடித்து வருவதாக அதிகப்படியான முதலீடுகளை ஈர்த்தார். ஆனால், அந்த இயந்திரம் போலியானது என்ற … Read more

முதல் முறையாக மகளை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்திய வட கொரிய அதிபர்

பியாங்யாங்,-வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், முதல் முறையாக தன் மகளை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளார். ஏவுகணை ஏவும் தளத்திலிருந்து, தன் மகளின் கையைப் பிடித்தபடி அவர் வரும் புகைப்படத்தை, கொரிய செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டது. கிழக்காசிய நாடான வட கொரியா, ஒரு மர்மப் பிரதேசமாகவும், இரும்புத் திரை போர்த்திய நாடாகவும் உள்ளது. இங்கு நடக்கும் எந்த ஒரு விஷயமும் மிகவும் ரகசியமாகவே வைக்கப்படும். பொருளாதார தடை இங்கு, அதிபர் கிம் ஜோங் … Read more

பிரதமராக பதவியேற்ற பின் முதன்முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்திக்க சென்ற ரிஷி சுனக்..!

இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின், முதன்முறையாக உக்ரைன் சென்ற இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கிடையேயான முக்கிய விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணம் குறித்து டிவிட்டரில் பதிவிட்ட ரிஷி சுனக், உக்ரைனுக்கு அனைத்து வழிகளிலும் துணை நிற்பதாக தெரிவித்துள்ளார். Source link

உலக குழந்தைகள் தினம்| Dinamalar

உலக நாடுகள் குழந்தைகள் தினத்தை வெவ்வேறு தேதிகளில் கொண்டாடுகின்றன.இருந்தாலும் சர்வதேச குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20-ந்தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1925-ம் ஆண்டு ஜெனீவாவில், குழந்தைகள் நல்வாழ்வு தொடர்பாக ஒரு சர்வதேச மாநாடு நடைபெற்றது. அதில் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களுக்கான கல்வி உறுதி குறித்து அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. 1954-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி, ஐ.நா.,குழந்தைகளுக்கிடையேயான சகோதரத்துவம் மற்றும் புரிதலை மேம்படுத்தும் வகையிலும் குழந்தைகளின் நலனுக்காக ஐ.நா., சபையின் முயற்சிகளை ஊக்குவிக்கும் … Read more

உக்ரைன் போர்..ஆசிய நாடுகளை கண்டித்த பிரான்ஸ் அதிபர்.!

உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள் மேற்கொண்டதால், உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தாக்குதலை தொடுத்த ரஷ்யா, இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்தது. அதேபோல் பல்வேறு நேட்டோ உறுப்பு நாடுகளும் தாராளமாக ஆயுதங்களை வழங்கின. இதனால் போர் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக, உலகம் முழுவதும் … Read more

மீண்டும் முழு ஊரடங்கு – அரசு அதிரடி அறிவிப்பு.. முடங்கிய மக்கள்..!

சீனாவில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றுக்கு உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்ததை … Read more

சீன அதிபர் ஜீன்பிங், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ் சந்திப்பு

தாய்லாந்து நாட்டில் சீன அதிபர் ஜி ஜீன்பிங்கும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பாங்காக்கில் ஆசிய – பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள சென்ற 2 பேரும், மாநாட்டின் இடையே சந்தித்து பேசினர். அப்போது, வடகொரியா ஏவுகணை சோதனை விவகாரம் உள்ளிட்டவை குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.   Source link