நைட்ரஜன் ஹிபோக்சியா வாயிலாகமரண தண்டனை நிறைவேற்ற முடிவு| Dinamalar

மான்ட்கோமெரி:கைதி ஒருவரின் மரண தண்டனையை, ‘நைட்ரஜன் ஹிபோக்சியா’ என்ற முறையில் நிறைவேற்ற, அமெரிக்காவின் அலபாமா மாகாணம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, விரிவான நடைமுறையை அறிவிப்பதாகவும் கூறியுள்ளது.அமெரிக்காவில், கைதிகளின் மரண தண்டனை, விஷ ஊசியின் வாயிலாகவே நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், நைட்ரஜன் ஹிபோக்சியா என்ற முறையில் தண்டனையை நிறைவேற்ற, ஓக்லஹாமா, மிஸ்சிசிப்பி மாகாணங்களைத் தொடர்ந்து, அலபாமா மாகாணமும் 2018ல் முடிவு செய்தது.ஆனால் இதுவரை இந்த முறையில் எந்த மாகாணத்திலும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இந்த முறையில் தண்டனையை எப்படி … Read more

பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்துபுறப்பட்டது ராணியின் இறுதி ஊர்வலம்| Dinamalar

லண்டன்:மறைந்த பிரிட்டன் ராணியின் உடல் அவர் நீண்ட காலமாக வசித்து வந்த பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து புறப்பட்டது. இறுதிச் சடங்கு நடக்கும் வரை லண்டனில் உள்ள வெஸ்மினிஸ்டர் ஹாலில் உடல் வைக்கப்பட்டிருக்கும். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், 96, வயது மூப்பு காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார். அவருடைய மகன் மூன்றாம் சார்லஸ் நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார்.ஸ்காட்லாந்தில் உயிரிழந்த ராணியின் உடல், அரச வழக்கப்படி பல இடங்களில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் … Read more

‛நைட்ரஜன் ஹிபோக்சியா வாயிலாக மரண தண்டனை நிறைவேற்ற முடிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மான்ட்கோமெரி-கைதி ஒருவரின் மரண தண்டனையை, ‘நைட்ரஜன் ஹிபோக்சியா’ என்ற முறையில் நிறைவேற்ற, அமெரிக்காவின் அலபாமா மாகாணம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, விரிவான நடைமுறையை அறிவிப்பதாகவும் கூறியுள்ளது.அமெரிக்காவில், கைதிகளின் மரண தண்டனை, விஷ ஊசியின் வாயிலாகவே நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், நைட்ரஜன் ஹிபோக்சியா என்ற முறையில் தண்டனையை நிறைவேற்ற, ஓக்லஹாமா, மிஸ்சிசிப்பி மாகாணங்களைத் தொடர்ந்து, அலபாமா மாகாணமும், 2018ல் முடிவு செய்தது.ஆனால், இதுவரை இந்த முறையில் எந்த மாகாணத்திலும் தண்டனை … Read more

பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து புறப்பட்டது ராணியின் இறுதி ஊர்வலம்| Dinamalar

லண்டன், :மறைந்த பிரிட்டன் ராணியின் உடல், அவர் நீண்ட காலமாக வசித்து வந்த பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து நேற்று புறப்பட்டது. இறுதிச் சடங்கு நடக்கும் வரை, லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் உடல் வைக்கப்பட்டிருக்கும்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், 96, வயது மூப்பு காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார். அவருடைய மகன் மூன்றாம் சார்லஸ், நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார்.ஸ்காட்லாந்தில் உயிரிழந்த ராணியின் உடல், அரச வழக்கப்படி, பல இடங்களில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. … Read more

வங்கியின் தவறால் கோடீஸ்வரியாகி ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்த அதிர்ஷ்டகாரர்!

அன்லிமிடெட் ஓவர் டிராஃப்ட் என்ற சொற்றொடரை நீங்கள் திரைப்படங்களில் அல்லது வேறு வகையில் பலமுறை கேட்டிருக்க கூடும். ஆனால், மலேசியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நிஜமாகவே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. அவரது கணக்கில் திடீரென கோடிக்கணக்கான ரூபாய் வர வைக்கப்பட்டு சில நொடிகளில் கோடீஸ்வரரானார். அதன்பிறகு அந்த பெண் சுமார் ஒரு வருடத்திற்கு கண் மூடித்தனமாக பணம் செலவழித்துள்ளார். இந்த ஆச்சரியமான தற்செயல் நிகழ்வினால் கிறிஸ்டின் ஜியாக்சின் லீ என்ற பெண் கன் இமைக்கும் நேரத்தில் … Read more

என்ன கொடுமை சார் இது? $72 மில்லியன் அபராதமா? அதிருப்தி அடையும் கூகுள் மற்றும் மெட்டா

சியோல்: கூகுள் மற்றும் மெட்டா நிறுவனங்களுக்கு தென் கொரியா அபராதம் விதித்துள்ளது. தனியுரிமையை இந்த இரு நிறுவனங்களும் மீறியதாக கூறி விதிக்கப்பட்ட அபராதம் அதிர்ச்சி அளிப்பதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.  தாங்கள் எப்போதும் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாகவும், வாடிக்கையாளர்களுடன் சட்டப்பூர்வமாக இணக்கமான முறையில் பணியாற்றுவதாகவும் தெரிவித்த கூகுளும், மெட்டாவும், தங்களுக்கு $72 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது நியாயமான செயல் இல்லை என்று அதிருதியை வெளிப்படுத்தியுள்ளன. நாட்டின் தனியுரிமை சட்டத்தை மீறியதற்காக ஆல்பாபெட்டின் கூகுள் மற்றும் மெட்டா பிளாட்ஃபார்ம்களுக்கு தென் … Read more

ராணி எலிசபெத் இறுதி சடங்கு: பீஸ்ட்டில் செல்லும் ஜோ பைடன்; புடினுக்கு நோ என்ட்ரி!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் (96) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 8ஆம் தேதி காலமானார். ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் அவர் உயிர் பிரிந்ததாக, பக்கிங்ஹம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ராணி எலிசபெத் மறைவையடுத்து, அவரது மூத்த மகன் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக முடிசூடிக் கொண்டுள்ளார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்தால் அடுத்த நடக்க வேண்டிய திட்டங்கள் அனைத்தும் ஏற்கனவே … Read more

Blue Origin நிறுவன ராக்கெட்டை விண்ணில் ஏவும் திட்டம் தோல்வி.. எஞ்சின் எரிந்து சேதமடைந்ததால் விழுந்து நொறுங்கிய ராக்கெட்..!

அமெரிக்காவில், ஜெப் பெசோசின் Blue Origin நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டை விண்ணில் ஏவும் திட்டம் தோல்வியில் முடிந்தது. மேற்கு டெக்சாஸில் உள்ள Blue Origin நிறுவன ஏவு தளத்திலிருந்து விண்வெளி வீரர்கள் இல்லாமல் ஏவப்பட்ட நியூ ஷெப்பர்ட் ராக்கெட், விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில், அதன் பூஸ்டர் எஞ்சின்கள் எதிர்பாராத விதமாக எரிந்ததால் தடை செய்யப்பட்ட பகுதியில் விழுந்து நொறுங்கியது. நாசாவின் சோதனைகளுக்கும், விண்வெளிக்கு பொருட்களை கொண்டு செல்லும் நோக்கில் ராக்கெட் அனுப்பப்பட்ட நிலையில், அதன் … Read more

எலான் மஸ்கிற்கு கிரீன் சிக்னல் கொடுத்த டிவிட்டர் பங்குதாரர்கள்; அடுத்தது என்ன!

சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை கைப்பற்றுவதற்காக உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தொடர்ந்து முயற்சித்து வந்தார். ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை முதலில் வாங்கிய உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், பின்னர் அனைத்து பங்குகளையும் வாங்க முன்வந்தார். ஒரு பங்கு 54.2 அமெரிக்க டாலர் என ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும், 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்க எலான் மஸ்க் பேச்சு வார்த்தைஇந்திய ரூபாயில் இதன் மதிப்பு, ரூ.3.37 லட்சம் கோடி … Read more