ட்ரோன் மூலமாக உக்ரைனில் தாக்குதல் நடத்திய ரஷ்யா

உக்ரைனின் குடியிருப்பு பகுதிகளில் ரஷ்யா, ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.  உக்ரைன் தலைநகர் கீவ்விலும், சுமியின் கிழக்குப் பகுதியிலும் தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் ஈரானில் தயாரிக்கப்பட்டவை என கூறப்படுகிறது. ஆளில்லா விமானத் தாக்குதல்களில் 6 பேரும், ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 3 பேரும் கொல்லப்பட்டனர். குடியிருப்புப் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொதுமக்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர்.  Source link

இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய நாவலுக்கு புக்கர் பரிசு!

லண்டன், இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசை புனைகதைக்கான பிரிவில் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக வென்றுள்ளார். எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கவுரவம் மிக்க விருதாக ‘சர்வதேச புக்கர் பரிசு’ கருதப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் அதன் பிராந்திய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நாவலுக்கு ஆண்டுதோறும் இந்த புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கு, உலகம் முழுவதிலும் இருந்து 169 நாவல்கள் விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இலங்கை எழுத்தாளர் … Read more

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்றுக் கொள்ளவில்லை: முடிவை மாற்றிய ஆஸ்திரேலியா

சிட்னி: இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்த முடிவை ஆஸ்திரேலியா மாற்றியது. இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை ஏற்றுக் கொள்வதுஎன்ற முக்கியமான விஷயத்தை அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் தெரிவித்தார். மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கப்போவதில்லை என்று தெரிவித்த ஆஸ்திரேலியா, முந்தைய பழமைவாத அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய முடிவை மாற்றி அமைத்தது. இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்கள் மூலம் நகரின் நிலை தீர்மானிக்கப்பட வேண்டும், ஒருதலைப்பட்சமான முடிவுகளால் அல்ல … Read more

உலகில் அதிக விலையுள்ள மிகப்பெரிய வைரம் துபாயில் அறிமுகம்..!

உலகில் அதிக விலையுள்ள மிகப்பெரிய வைரம் துபாயில் சோத்பை நிறுவனம் நடத்திய கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.  303.1 கேரட் எடை கொண்ட மஞ்சள் நிற கோல்டன் கேனரி வைரம், வெட்டப்பட்ட வைரங்களில் உலகிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். காங்கோ ஜனநாயகக் குடியரசில் 1980 களில் கண்டுபிடிக்கப்பட்ட இதன் மதிப்பு சுமார் 15 மில்லியன் அமெரிக்க டாலர் எனவும், டிசம்பர் 7-ம் தேதி நியூயார்க்கில் ஏலம் விடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.  Source link

மூளை அறுவை சிகிச்சையின் போது இசைக்கருவி வாசித்த நோயாளி..!

இத்தாலியில் மூளை அறுவை சிகிச்சையின்போது நோயாளி ஒருவர்  இசைக்கருவி வாசித்தார். 35 வயதான இளைஞர் ஒருவருக்கு மருத்துவமனையில் 9 மணி நேரம் மூளை அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஒருபக்கம் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போதே மறுபுறம் அவர் இசைக்கருவியை வாசித்துக்கொண்டு இருந்தார். Source link

கோவிடிலும் தில்லுமுல்லு செய்த டிரம்ப்! கிடுக்கிப்பிடி விசாரணையில் அமெரிக்க முன்னாள் அதிபர்

American Congress vs Trump: கொரோனா தொற்றுநோயை கையாள்வது தொடர்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கடுமையான விமர்சனங்கள் இருந்த நிலையில், திங்களன்று (அக்டோபர் 17) வெளியிடப்பட்ட அமெரிக்க காங்கிரஸின் அறிக்கை, டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், கோவிட்-19 பற்றிய துல்லியமான தகவல்களை சுகாதார அதிகாரிகளை வழங்குவதைத் தடுத்தது என்று கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் தொடர்பான டிரம்பின் நம்பிக்கையை ஆதரிக்கும் வகையில் அரசு நிர்வாகம் செயல்பட்டதாக இந்த அறிக்கை கூறுகிறது. டிரம்ப் உதவியாளர்கள் கோவிட் … Read more

கம்யூனிஸ்ட் மாநாட்டில் கல்வான் மோதல் வீடியோ வெளியீடு – பகையை தூண்டுவதாக சீனா மீது புகார்

பெய்ஜிங்: சீனாவில் ஒரு கட்சி ஆட்சி நடைபெறுகிறது. அந்த நாட்டை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டு, அவரே அதிபராகவும் பதவியேற்பார். தற்போதைய சீன அதிபர் ஜி ஜின்பிங் தற்போது 2-வது முறையாக அதிபராக பதவி வகித்து வருகிறார். இந்த பின்னணியில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. அதில் அதிபர் ஜி ஜின்பிங் 3-வது … Read more

பாரீசில் பல மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் எலும்புக்கூடு ஏலம்..!

பல மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் எலும்புக்கூடு, பாரீசில் வரும் 20ஆம் தேதியன்று ஏலம் விடப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கொலோரேடோவில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் தற்போது பிரான்சின் பாரீசில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பாரீசில் நடைபெற உள்ள ஏலத்தில் சுமார் 4 லட்சம் யூரோ வரை டைனோசர் எலும்புகள் ஏலம் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  Source link

நைஜீரியாவில் வெள்ளம் பலி 600 ஆக உயர்வு| Dinamalar

அபுஜா, நைஜீரியாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கன மழை பெய்து வருகிறது. கடலோர பகுதிகளில் வசித்தவர்கள் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் உள்ள 36 மாகாணங்களில், 33 மாகாணங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை இரண்டு லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். 82 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 603 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகளும் முடுக்கி … Read more

தலிபான் தண்டனையில் இருந்து தப்பிக்க இளம்பெண் தற்கொலை| Dinamalar

காபூல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பொது இடத்தில் கல்லெறிந்து கொல்ல திட்டமிட்டு இருந்ததை அறிந்த இளம்பெண், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து, பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்தனர். உயர் கல்வி கற்க, பொது இடங்களில் தனியாக நடமாட, வேலைக்குச் செல்ல, காதல் திருமணம் செய்ய தடை விதித்தனர்.இதனால் லட்சக்கணக்கான பெண்கள் உயர் கல்வியை இழந்தனர். ஏராளமானோர் வேலையை இழந்து தவிக்கின்றனர். வேலை இழந்த 1.8 … Read more