பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கு: நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட இம்ரான் கான்

பெண் நீதிபதியை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகி முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மன்னிப்பு கோரினார். அண்டை நாடான பாகிஸ்தானில் பிரதமராக இருந்த இம்ரான் கான், பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட நெருக்கடிகளால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. இதை அடுத்து, பாகிஸ்தான் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சகோதர் ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்றார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத இம்ரான் கான், தனது அரசு கவிழ்ப்பில், … Read more

Russia – Ukraine War: உக்ரைன் பிராந்தியங்களை இணைப்பதா..? – ரஷ்யாவுக்கு ஐ.நா கண்டனம்!

உக்ரைன் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பது ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தை மீறும் நடவடிக்கை என, ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, உக்ரைன் நாடு விருப்பம் தெரிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த அண்டை நாடான ரஷ்யா, அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. சுமார் 7 மாதங்களாக நடைபெற்று வரும் போர் இதுவரை முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே, உக்ரைனில் … Read more

ஆப்கனில் தற்கொலைப் படை தாக்குதல்: 19 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 19 பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். ஆப்கானிதானின் தலைநகர் காபூலில் மேற்குப் பகுதியில் கல்வி நிறுவனம் அருகே வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 19 பேர் பலியாகினர். 20-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். தேர்வுக்காக மாணவர்கள் படித்து கொண்டிருந்தபோது இந்தக் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. பலியானவர்களில் பலரும் மாணவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்தத் தற்கொலைப் படை தாக்குதல் நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். … Read more

புளோரிடாவை தாக்கிய இயான் புயலால் மாகாணம் முழுவதும் கடுமையான பாதிப்பு..!

அமெரிக்காவின் புளோரிடாவை தாக்கிய இயான் புயலால் மாகாணம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சுவதாக  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இயான் புயல் நேற்று முன்தினம் புளோரிடாவை தாக்கியது இதனால் நகர் முழுவதும்  வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது மேலும் மின்சாரம் தடைபட்டுள்ளதால் இருளில் முழ்கியுள்ளது . புயல் மீட்புப் பணிகளில் 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக புளோரிடா மாகாண கவர்னர் ரான் … Read more

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

யாங்கூன், மியான்மரில் இன்று காலை 3.52 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் பதிவானது. பர்மாவின் வடமேற்கே 162 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் லேசாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. தினத்தந்தி Related Tags : மியான்மர் … Read more

பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம்: இந்தியா மீண்டும் வலியுறுத்தல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ‘ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்த நடவடிக்கையை நீண்ட காலத்துக்கு தள்ளிப்போடக் கூடாது; உடனடியாக துவங்க வேண்டும்’ என, இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. உலக நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா., சபையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாகும். சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து, இந்த அமைப்பே முடிவு செய்கிறது. இந்த கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.20 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியே 21 லட்சத்து 85 ஆயிரத்து 241 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே … Read more

புளோரிடாவை புரட்டி போட்ட இயன் சூறாவளி.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

அமெரிக்காவின் மோசமான சூறாவளிகளில் ஒன்றாக கருதப்படும் இயன் சூறாவளி மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி புளோரிடாவை புரட்டி போட்டுள்ளது. பல அடி உயரத்துக்கு எழுந்த அலைகளால் கரையோர நகரங்களுக்குள் கடல்நீர் புகுந்தது. தொடர்ந்து சூறைக்காற்று வீசியதால் ஏராளமான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன. புயல் காரணமாக சுமார் 25 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காற்றினால் கரையோர நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் நகரங்களுக்குள் இழுத்து வரப்பட்டன. Source link

உக்ரைனில் ரஷியா கைப்பற்றிய பிராந்தியங்களை சுதந்திர பிரதேசங்களாக அங்கீகரிக்கும் ஆணையில் அதிபர் புதின் கையெழுத்து!

மாஸ்கோ, உக்ரைனில் ரஷிய படைகள் வசம் உள்ள கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய இரண்டு பிராந்தியங்களையும் சுதந்திர பிரதேசங்களாக அங்கீகரிக்கும் அதிகாரபூர்வமான ஆணையில் அதிபர் புதின் நேற்று கையெழுத்திட்டார். தெற்கு உக்ரைனில் அமைந்துள்ள ஜபோரிஜியா மற்றும் கெர்சன் பகுதிகளின் மாநில இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை அங்கீகரிக்க நான் உத்தரவிடுகிறேன், என்று அதிபர் புதின் ஆணையில் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் ரஷிய படைகள் வசம் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களை அதிகாரபூர்வமாக தன்னுடன் … Read more

பிரிட்டனில் புதிய சகாப்தம் தொடங்கியது: நாணயங்களில் ஏற்படும் மாற்றம்

Coin Of Britain: இனி இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் நாணயங்களில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் உத்தியோகபூர்வமான உருவமும் பொறிக்கபடும்… புதிய சகாப்தம் தொடங்கியது என்பதை குறிக்கும் குறியீடாக இது பார்க்கப்படுகிறது. 70 ஆண்டுகளாக பிரிட்டனின் மகாராணியாக மகுடம் சூடிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு, நாட்டில் ஏற்படும் மாற்றங்களின் புதிய உத்தியோகபூர்வ வெளிப்பாடு இது. பிரிட்டன் அரசராக ஆல்ஃபிரட் தி கிரேட் இருந்த காலத்தில் இருந்து, அரச குடும்பத்தின் உருவங்களைக் கொண்ட நாணயங்களைத் தயாரிக்கும் பொறுப்பை ராயல் மிண்ட் நிறுவனம் … Read more