எத்தியோப்பியாவில் மழலையர் பள்ளிக்கூடம் மீது வான்தாக்குதலில் 7 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் ஒரு போராளி அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்புக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சுமார் 2 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். டைக்ரே போராளி அமைப்பை ஒடுக்குவதற்கு அந்த நாட்டின் பிரதமர் அபி அகமது உத்தரவின்பேரில் ராணுவம் நடத்துகிற தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் … Read more

மிஸ் இங்கிலாந்து போட்டியில் முதல் முறையாக ஒப்பனை இல்லாமல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய அழகி..!

லண்டன், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ‘மிஸ் இங்கிலாந்து 2022’ அழகிப் போட்டியில், லண்டன் நகரத்தைச் சேர்ந்த 20 வயது மெலிசா ராவ்ஃப், இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். கல்லூரியில் அரசியல் படித்து வரும் மாணவியான இவர், ஒப்பனை எதுவும் இல்லாமலேயே மிஸ் இங்கிலாந்து அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று வரை முன்னேறியுள்ளார். மிஸ் இங்கிலாந்து போட்டியின் 94 வருட வரலாற்றில், அழகி ஒருவர் முதல் முறையாக ஒப்பனை இல்லாமல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தனது இயற்கையான உள்ளார்ந்த அழகை … Read more

பாகிஸ்தான் கைதி மரணம் விசாரிக்க வலியுறுத்தல்| Dinamalar

இஸ்லாமாபாத்-‘காஷ்மீரில் பாகிஸ்தான் கைதி மரணமடைந்தது குறித்து, உரிய விசாரணை நடத்த வேண்டும்’ என, அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது அலி உசேன், ஜம்மு – காஷ்மீருக்குள் நுழைந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயன்றபோது, 2006ல் கைது செய்யப்பட்டு காஷ்மீரில் உள்ள கோட் பல்வால் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சமீபத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இந்திய சிறையில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த … Read more

பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது

இஸ்லாமாபாத், 3.30 கோடி மக்கள் பாதிப்பு பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்கிய நிலையில் கடந்த 3 மாதங்களாக அங்கு கனமழை, வெளுத்து வாங்குகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத இந்த மழைப்பொழிவால் பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. வெள்ளத்தில் சிக்கி 6 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. கனமழை, வெள்ளத்தால் நாடு முழுவதும் சுமார் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் அதிகம் பாதித்த 110 … Read more

மீட்பு பணியில் இறங்குது ராணுவம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்,-மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக ராணுவத்தை அழைக்க பாக்., அரசு முடிவெடுத்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் இருந்து கனமழை பெய்து வருகிறது. மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 982 பேர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்த 1,456 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுதும் மூன்று கோடி பேருக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். ஆங்காங்கே நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 149 பாலங்கள் … Read more

பள்ளியில் பயிலும் தன் வருங்கால மனைவி தேர்வில் தோல்வியடைவார் என அஞ்சி பள்ளிக்கு தீ வைத்த இளைஞன்!

கெய்ரோ, எகிப்து நாட்டின் கர்பியா மாகாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், பள்ளி கட்டிடத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பியோடிய நபரை தலைநகர் கெய்ரோவின் வடக்கே உள்ள மெனோபியா மாகாணத்தில் போலீசார் கைது செய்தனர். பள்ளி கட்டுப்பாட்டு அறைக்கு தீ வைத்த பின்னர், அந்த இளைஞன் தனது சொந்த கிராமத்தில் ஒளிந்து கொள்வதற்காக சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனை பார்த்த சிலர் அந்த நபர் பற்றிய அடையாளங்களை … Read more

பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் சென்ற பயணிகள் படகு திடீரென தீப்பற்றி எரிந்து விபத்து..!

பிலிப்பைன்ஸ் நாட்டில் இயந்திர கோளாறு காராணமாக நடுக்கடலில் சென்ற படகு தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. 48 பயணிகள் மற்றும் 34 பணியாளர்களை ஏற்றிச் சென்ற படகு மணிலாவின் தெற்கே உள்ள துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது படகின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு தீ பிடித்து, படகு முழுவதும் தீ பரவியது. பலர் உயிர் தப்பிப்பதற்காக கடலில் குதித்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் படகில் இருந்தவர்களை மற்றொரு படகு முலம் மீட்டு கரைக்கு கொண்டு … Read more

இலங்கை பள்ளி குழந்தைகளுக்கு 3,000 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை வழங்கிய அமெரிக்கா..!

இலங்கை பள்ளி குழந்தைகளுக்கு 3,000 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பள்ளி குழந்தைகளின் கல்வி, பசியால் தடைப்பட கூடாது என்பதை கருத்தில் கொண்டு அமெரிக்க மக்களால் இந்த நன்கொடையை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் கூறியுள்ளார். Source link

இரு நாள் பயணமாக ஐ.நா. பொதுச்சபை தலைவர் இந்தியா வருகை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஐ.நா.: இரு நாள் பயணமாக ஐக்கிய நாடுகள் சபை தலைவர் ஷாகித் அப்துல்லா நாளை (ஆக்.28) இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவராக மாலத்தீவுகள் நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகித் உள்ளார். இந்நிலையில் இருநாள் அரசு முறைப்பயணமாக நாளை (ஆக்.28 ) ஷாகித் அப்துல்லா இந்தியா வருகை தர உள்ளார்.இந்த வருகையின் போது ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் … Read more

அமெரிக்காவில் ஆதரவற்றோர் இல்லத்தில் துப்பாக்கிச் சூடு.. 2 பேர் உயிரிழப்பு – 4 பேர் படுகாயம்..!

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் ஆதரவற்றோர் இல்லத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். வியாழக்கிழமை இரவு ஏழரை மணியளவில் ஹென்டர்சன் நகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், வெள்ளை நிற டொயோட்டா ப்ரியஸ் காரில் தப்பியுள்ளார். இதனையடுத்து தேடுதல் வேட்டையை தொடங்கிய போலீசார், அன்றிரவே துப்பாக்கிச் சூடு நடத்திய கென்னத் ஆர் கிப்ஸ் என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். … Read more