7 இந்திய கலாச்சார கலைப்பொருட்களை திருப்பி அளித்தது இங்கிலாந்து அருங்காட்சியகம்

ஆங்கிலேய ஆட்சியில் கொள்ளையடிக்கப்பட்ட 7 இந்திய கலாச்சார கலைப்பொருட்களை இங்கிலாந்தில் உள்ள அருங்காட்சியகம் திருப்பி அளித்தது. கிளாஸ்கோவில்  நடைபெற்ற நிகழ்வில் 14-ம் நூற்றாண்டின் இந்தோ-பாரசீக வாள் உள்ளிட்ட 7 இந்திய கலைப்பொருட்களை கிளாஸ்கோ லைஃப் அருங்காட்சியகம் திரும்ப அளித்தது. 18 மாதங்களுக்கும் மேலாக நடந்த பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.  Source link

கனடாவில் பேசப்படும் மொழிகளில் பஞ்சாபிக்கு 4-வது இடம்

ஒட்டாவா: கனடாவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் பஞ்சாபி 4-வது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 49 சதவீதம் பஞ்சாபி மொழி வளர்ச்சி அடைந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. வடஅமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள கனடாவில் 3.8 கோடி மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் ஏராளமான வெளிநாட்டினரும் அடங்குவர். இதில் பெரும்பான்மை மக்கள் ஆங்கிலம், பிரெஞ்சு மொழியை பேசுகின்றனர். இதற்கு அடுத்து 3-வது இடத்தில் சீனாவின் மேண்டரின் மொழி உள்ளது. அந்த மொழியை 5.3 லட்சம் பேர் பேசுகின்றனர். … Read more

ட்விட்டரில் வதந்தி பரப்பியதாக சவுதி ஆராய்ச்சி மாணவிக்கு 34 ஆண்டு சிறை தண்டனை

துபாய்: சவுதியைச் சேர்ந்தவர் சல்மா அல்-ஷெகாப். பிரிட்டனில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூரியில் இறுதி யாண்டு முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். சிறுபான்மை ஷியா முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த சல்மா, சவுதியின் சன்னி முஸ்லிம் ராஜ் ஜியத்தில் உள்ள பாகுபாடுகள் பற்றி குறை கூறி வந்தார். இந்நிலையில் சவுதி அரசுக்கு எதிராக ட்விட்டரில் வதந்திகளை பரப்பியதாக சல்மா மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்தாண்டு ஜனவரி மாதம் விடுமுறையில் சல்மா சவுதி வந்தபோது, கைது செய்யப்பட்டார். அவர் … Read more

உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் 775 மில்லியன் டாலர் நிதியுதவி… ஆயுதங்கள், டிரோன்கள், தளவாடங்கள் வாங்க உதவி

ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலை கடந்த 6 மாதங்களாக உக்ரைன் சமாளித்து வரும் நிலையில், அந்நாட்டிற்கு 775 மில்லியன் டாலர் அளவுக்கு கூடுதல் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஆளில்லா கண்காணிப்பு விமானங்கள், கண்ணிவெடி எதிர்ப்பு வாகனங்கள், ஹோவிட்சர் பீரங்கிகள் போன்றவை முதன்முறையாக உக்ரைனுக்கு வழங்கப்பட உள்ளன. உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ரஷ்ய ராணுவம் கண்ணிவெடி வைத்திருப்பதாக கூறப்படுவதால் அங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த ஆயுதங்கள் உக்ரைனுக்கு உதவியாக இருக்கும் … Read more

காதலி முத்தம்: காதலன் மரணம்| Dinamalar

வாஷிங்டன் : அமெரிக்காவின் டென்னசியில் சிறையில் இருக்கும் காதலனை பார்க்க சென்ற காதலி கொடுத்த முத்தத்தால் காதலன் மரணம் அடைந்தார். போதைப்பொருள் வழக்கில் ஜோசுவா பிரவுன் என்பவருக்கு 2029 வரை 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். போதை பொருள் பயன்படுத்தும் பழக்கத்தால் அவர் சிறையில் போதைபொருள் கிடைக்காமல் தவித்தார். இதுதொடர்பாக தன்னை பார்க்கவந்த காதலி ரேச்சல் டொலார்ட்டிடம் கூறினார். ரேச்சல் டொலார்ட் அடுத்த முறை காதலனை பார்க்க சென்றபோது அவருக்கு நீண்ட … Read more

கிருஷ்ணரின் பிறந்தநாளை முன்னிட்டு லண்டனில் தனது மனைவியுடன் ரிஷி சுனக் வழிபாடு

கிருஷ்ணரின் பிறந்தநாளை முன்னிட்டு இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிரும் ரிஷி சுனக் லண்டனில் கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தார். நாடு முழுவதும்  ஜென்மாஷ்டமி கொண்டாடப்பட்ட நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் லண்டன் பக்திவேதாந்த மேனர் கோயிலுக்கு தனது மனைவி அக்ஷதாவுடன் சென்று வழிபாடு செய்தார். Source link

அமெரிக்காவில் காந்தி சிலை சேதம்| Dinamalar

நியூயார்க்:அமெரிக்காவில் கோவில் வாசலில் இருந்த காந்தி சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஹிந்து கோவில் வாசலில், மஹாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டுள்ளது.கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்த சிலையை மர்ம நபர்கள் சிலர் சமீபத்தில் சேதப்படுத்தினர்.இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகார்படி, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், காந்தி சிலையை சுத்தியலால் உடைத்த மர்மநபர்களை தேடி … Read more

இந்திய போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பிய பிரான்ஸ் விமானம்.!

இந்திய விமானப்படையின் சுகோய் Su-30MKI போர் விமானங்களுக்கு பிரான்ஸ் நாட்டு விமானம் நடுவானில் எரிபொருள் நிரப்பியது. வளர்ந்து வரும் இந்தியா- பிரான்ஸ் உறவுகளின் ஒரு பகுதியாக, பிரான்ஸ் ராணுவத்தின் டேங்கர் விமானம், இந்திய விமானப்படை போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பியது. பிட்ச் பிளாக் 2022 என்ற இராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா நோக்கி சென்ற போது எரிபொருள் நிரப்பியது. இதற்காக பிரான்ஸ் நாட்டு விமானப்படைக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது. Source link

37,000 அடி உயரத்தில் பறந்தவிமானத்தில் துாங்கிய விமானிகள்| Dinamalar

அடிஸ் அபாபா:சூடானில், 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் விமானிகள் துாங்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட ஆப்ரிக்க நாடான சூடானின் கார்ட்டூமில் நகரில் இருந்து, எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு சமீபத்தில் ‘போயிங் 737’ ரக விமானம் சென்றது. அது அடிஸ் அபாபாவை நெருங்கிய போது விமான நிலைய அதிகாரிகள் விமானிகளை தொடர்பு கொண்டபோது அவர்கள் பதிலளிக்கவில்லை. விமானம் தரையிறங்க வேண்டிய நேரம் நெருங்கியும் விமானிகளிடமிருந்து பதிலில்லை. இதையடுத்து, அவசரகால அபாய எச்சரிக்கையை விமான … Read more

பாக்., பிரதமர் ஷெபாஸ் விருப்பம்| Dinamalar

இஸ்லாமாபாத்:”ஜம்மு – காஷ்மீர் பிரச்னையில், சமத்துவம், நீதி மற்றும் பரஸ்பர மரியாதை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில், அமைதியான உறவுக்கு வழிவகுக்க வேண்டும்,” என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, 2019ல் நீக்கப்பட்டது. மாநிலம், ஜம்மு – காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. மத்திய அரசு இதை அறிவித்த பின் பாகிஸ்தானுடனான உறவு மேலும் மோசமடைந்தது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கான ஆஸ்திரேலிய துாதரக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள நீல் … Read more