ஒரே கருவில் இரட்டை குழந்தை.. ஆனால் வெவ்வேறு தந்தை.. இளம்பெண் சொன்ன பகீர் தகவல்!

ஒரே நாளில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தைகள் என கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த விஞ்ஞான வளர்ச்சியில் நம்பித்தான் ஆக வேண்டும். பிரேசிலை சேர்ந்த 19 வயதான பெண்ணுக்கு 6 மாதங்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. குழந்தைகள் பிறந்த சந்தோஷத்தில் குதூகலமாக இருந்த பெண்ணுக்கு கூடவே அதிர்ச்சியையும் கொடுத்தது அந்த தகவல். மருத்துவமனையில் இரண்டு குழந்தைகளின் டிஎன்ஏவும் வெவ்வேறாக இருந்தது. இது, அந்த பெண்ணை மட்டுமல்ல மருத்துவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆச்சரியத்தை அதிகரிக்கும் … Read more

வரலாறு காணாத வெள்ளத்தால் மக்கள் கடும் பாதிப்பு: பாகிஸ்தானில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,343 ஆக உயர்வு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த சிலவாரங்களாக பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பருவநிலை மாறுபாடு காரணமாக பாகிஸ்தான் வடக்கு மலைப் பகுதியில் உள்ள பனியாறுகள் உருகியதும் அதிக அளவு பருவ மழையுமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால் அந்நாட்டில் மூன்றில்ஒரு பகுதிக்கு மேற்பட்ட நிலப்பரப்பு தண்ணீரில் மூழ்கியுள்ளது. 22 கோடி மக்கள் தொகை கொண்டபாகிஸ்தானில் 3 கோடி மக்கள்வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள்வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டுள்ளன. லட்சக்கணக்கான … Read more

பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக பணியாற்றி வருகிறார் – முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்!

பிரதமர் நரேந்திர மோடி மிகச்சிறந்த மனிதர் என்றும், சிறப்பாக அவர் பணியாற்றி வருகிறார் என்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடனும் தனக்கு சிறந்த நட்புறவு இருப்பதாகவும், முன்னாள் அதிபர் ஓபாமா, தற்போதைய அதிபர் ஜோ பைடனை காட்டிலும் தானே இந்தியாவுக்கு  சிறந்த நண்பர்  என்றும் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிட வேண்டுமென்று அனைவரும் விரும்புவதாக குறிப்பிட்டுள்ள டிரம்ப், இதுகுறித்து விரைவில் … Read more

'மோடி சிறந்த நபர்; அசாதாரண சவால்களுக்கு இடையே அபாரமாக பணிபுரிகிறார்' – ட்ரம்ப் புகழாரம்

வாஷிங்டன்: பிரதமர் மோடி சிறந்த மனிதர். அவர் தலைமையில் இந்தியா சிறப்பாக இருக்கிறது. அவர் எனது நல்ல நண்பரும் கூட என்று அடுக்கடுக்காக இந்தியாவுக்கும், மோடிக்கும் பாராட்டுகளைக் குவித்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், “நான் அமெரிக்க அதிபராக இருந்தபோது இந்தியாவுடன் நல்லுறவைப் பேணினேன். பிரதமர் மோடி சிறந்த நபர். அவர் முன் நிறைய சவால்கள் இருந்தும். அவர் இந்தியாவை சிறப்பாக வழிநடத்துகிறார். அவரது பணி … Read more

ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி: ஜோ பைடன் அறிவிப்பு!

கொரோனா பெருந்தொற்றுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை அந்தந்த நாட்டு அரசுகள் முனைப்புடன் செயல்படுத்து வருகிறது. பெரும்பாலான நாடுகளில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்ட பின்னர் பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. அதேசமயம், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ், கொரோனாவின் புதிய திரிபுகளும் உருவாகி அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவில் 12 … Read more

உக்ரைனின் உணவு தானிய ஒப்பந்தத்தால் வளரும் உலக நாடுகள் ஏமாற்றப்பட்டுள்ளன: புதின் குற்றச்சாட்டு

விளாடிவாஸ்டாக்: உக்ரைனின் உணவு தானிய ஒப்பந்தத்தால் வளரும் உலக நாடுகள் ஏமாற்றப்பட்டுள்ளன என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் சிறப்பு ராணுவ செயல்பாடு என்ற பெயரில் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. அங்கு பல்வேறு நகரங்களைக் கைப்பற்றிய ரஷ்யா, தொடர்ந்து உக்ரைன் நகரங்கள் மீது குண்டு வீசிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் உக்ரைனின் உணவு தானிய ஒப்பந்தம் மூலம் உலக நாடுகள் ஏமாற்றப்பட்டுள்ளன என்று … Read more

பாகிஸ்தான் மழை வெள்ளம் | உலக பாரம்பரிய சின்னம் மொகஞ்சதாரோவுக்கு ஆபத்து

சிந்துசமவெளி நாகரிகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான மொகஞ்சதாரோ 1922-ல் கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சிந்து நதிக்கு அருகில் மொஹஞ்சதாரோ உள்ளது. இதனை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இந்நிலையில் புகழ்பெற்ற மொகஞ்சதாரோ இடம் வெள்ளத்தால் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் முதன்மை அதிகாரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “வெள்ளம் மொகஞ்சதாரோவை நேரடியாக பாதிக்கவில்லை. ஆனால் வரலாறு காணாத மழையானது பண்டைய நகருக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பல்வேறு … Read more

இரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து.. கட்டுக்கடங்காத அளவில் கரும்புகை வெளியேற்றம்!

இத்தாலியின் மிலன் நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சான் கியுலியானோ மிலானிஸின் நைட்ரோல்சிமிகா ஆலையில் திடீரென தீப்பிடித்த நிலையில், அது மளமளவென ஆலை முழுவதும் பரவியது. அங்கிருந்த பொருட்கள் வெடித்து சிதறியதுடன், அடர்த்தியான கரும்புகையுடன் தீப்பிழம்பாக காட்சி அளித்தது.. விபத்தின் போது ஆலையில் இருந்த தொழிலாளர்களில் 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலின்பேரில் விரைந்து 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். Source link

Netflix நிறுவனத்தை எச்சரிக்கும் வளைகுடா நாடுகள்… காரணம் என்ன!

OTT தளமான நெட்ஃபிக்ஸ் (Netflix) தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. வளைகுடா நாடுகளில் இந்த சர்ச்சை எழுந்துள்ளது. நெட்ஃபிளிக்ல் தளத்தில் உள்ள ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தை நீக்குமாறு கோரப்பட்டுள்ளது. வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளின் கவுன்சிலில் உள்ள அனைத்து நாடுகளின் உறுப்பினர்களும் கூட்டறிக்கையில், இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய சமூக விழுமியங்களுக்கு எதிரான உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதை நெட்ஃபிக்ஸ் நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். நெட்ஃபிளிக்ஸ் இதனை செய்யவில்லை என்றால், அதற்கு எதிராக கவுன்சில் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். எதிர்ப்பு தெரிவித்த வளைகுடா … Read more

துப்பாக்கிச்சூடு கொள்கை குறித்து யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது – இஸ்ரேல் பிரதமர்

ஜெருசலேம், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், கடந்த மே 11-ம் தேதி மேற்குகரை பகுதியில் உள்ள ஜெனின் நகரில் உள்ள முகாமில் பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு இஸ்ரேலிய படையினர் தேடுதல் … Read more