பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு: இந்திய வம்சாவளியான ரிஷிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை

லண்டன்: பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்குக்கு பெரும்பான்மை கிடைக்காததால் பிரதமராகும் வாய்ப்பை இழந்தார். கடந்த 2019-ம் ஆண்டில் பிரிட்டனில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்த கட்சியின் தலைவர் போரிஸ் ஜான்சன், பிரதமராக பதவியேற்றார். மூன்று ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு பிரதமருக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி … Read more

சீனாவில் நிலநடுக்கம்: 46 பேர் பலி| Dinamalar

பீஜிங் : சீனாவின் சிசுவான் மாகாணத்தில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், 46 பேர் உயிரிழந்தனர். நம் அண்டை நாடான சீனாவின் சிசுவான் மாகாணத்தின் லுாடிங் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்து, 46 பேர் உயிரிழந்துள்ளனர்; பல கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்து உள்ளன. சேத மதிப்பு வெளியிடப்படவில்லை. சிசுவான் மாகாணம், திபெத்துக்கு அருகில் உள்ளது. இங்கு நிலநடுக்கம் … Read more

அர்ஜெண்டினா துணை அதிபரை சுட்டுக்கொல்ல முயற்சித்த நபரின் காதலி அதிரடி கைது

புவ்னொஸ் ஏரிஸ், தென் அமெரிக்க நாடுகளில் அர்ஜெண்டினாவும் ஒன்று. அந்நாட்டின் துணை அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டோஸ் டி கிரிச்னர். இவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதனிடையே, ஊழல் வழக்கு தொடர்பான கடந்த வியாழக்கிழமை கிறிஸ்டினா கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜரானார். அதன் பின் புவெனோஸ் அய்ரோஸ் நகரில் உள்ள் அதனது வீட்டிற்கு கிறிஸ்டினா வந்தார். அப்போது, அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் கிறிஸ்டினாவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். அப்போது, அந்த கூட்டத்திற்குள் திடீரென புகுந்த … Read more

ஆப்கனில் ரஷ்ய தூதரகத்தில் தற்கொலை படை தாக்குதல்| Dinamalar

காபூல் : ஆப்கானிஸ்தானில் உள்ள ரஷ்ய துாதரகத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில், இரண்டு ஊழியர்கள் உயிரிழந்தனர். ‘விசா’வுக்காக காத்திருந்த ஆப்கானிஸ்தானியர் ஒருவரும் கொல்லப்பட்டார். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாத அமைப்பின் நிர்வாகம் அமைந்துள்ளது. தலைநகர் காபூலில் உள்ள ரஷ்ய துாதரகத்தில், விசா பெறுவதற்காக பலர் நேற்று காத்திருந்தனர்.அப்போது, விசா கிடைத்துள்ளோரின் பெயர்களை, அங்கிருந்த ஊழியர் அழைத்துள்ளார். அந்த நேரத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் இரண்டு ஊழியர்கள் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானியர் ஒருவரும் உயிரிழந்தார்; 10க்கும் … Read more

தமிழ்நாட்டில் வசித்து வரும் தமிழ் அகதிகளை இலங்கையில் மீண்டும் குடியமர்த்த குழு அமைத்தது இலங்கை அரசு

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 1983-ம் ஆண்டு உள்நாட்டு போர் வெடித்தது. அப்போது முதல், இலங்கையில் இருந்து ஏராளமான தமிழர்கள், தமிழ்நாட்டுக்கு வந்து தஞ்சம் அடைந்தனர். தற்போது ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இலங்ைக தமிழர்கள், தமிழ்நாட்டில் தங்கி இருப்பதாக தெரிகிறது. அவர்களில் சுமார் 68 ஆயிரம் பேர், நூற்றுக்கு மேற்பட்ட அரசு முகாம்களில் தங்கி உள்ளனர். இதற்கிடையே, போர் முடிந்து விட்டதால், இந்தியாவில் வசித்து வரும் இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு … Read more

ஆப்கானிஸ்தானில் ரஷ்ய தூதரகத்திற்கு அருகே குண்டுவெடிப்பு.. அதிகாரிகள் உட்பட 20 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு அருகே நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் தூதரக அதிகாரிகள் இருவர் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர். Darulaman சாலையில் உள்ள தூதரகத்திற்கு வெளியே விசா பெற பலர் காத்திருந்த நிலையில், தூதரக அதிகாரி ஒருவர் விண்ணப்பதாரர்களின் பெயர்களை கூற வெளியே வந்த போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தூதரகத்தின் நுழைவாயில் அருகே தற்கொலைப்படை தாக்குதல் நடத்த வந்த பயங்கரவாதி குண்டுகளை வெடிக்கச் செய்ததாவும், அந்த நபர் நுழைவாயிலை நெருங்கிய போது ஆயுதமேந்திய காவலர்களால் … Read more

குரல் பதிவு மூலம் கொரோனாவை துல்லியமாக கண்டறியும் செல்போன் செயலி; விஞ்ஞானிகள் சாதனை

செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் இந்த செயலி நோயாளிகளின் குரல் பதிவு மூலம் தொற்றை உறுதி செய்யும். அதாவது குறிப்பிட்ட நபரின் மருத்துவ வரலாறு, புகைபிடிக்கும் நிலை போன்ற சில அடிப்படை தகவல்களை பதிவு செய்து, பின்னர் அவர்களின் சில சுவாச ஒலிகளையும் பதிவு செய்ய வேண்டும். அதன்படி மூன்று முறை இருமல், மூன்று முதல் ஐந்து முறை வாய் வழியாக ஆழமாக சுவாசித்தல் மற்றும் திரையில் ஒரு சிறிய வாக்கியத்தை மூன்று முறை வாசிப்பது ஆகியவை … Read more

பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை, வெள்ளம்; பலி எண்ணிக்கை 1,325 ஆக உயர்வு

லாகூர், பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூலை தொடங்கிய பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதேபோல், இமயமலையில் பனிப்பாறை உருகி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் பல்வேறு நகரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 3-ல் 1 பங்கு தண்ணீரில் மூழ்கியுள்ளதாக பாகிஸ்தான் பருவநிலைமாற்ற மந்திரி தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,325 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளம், கனமழை காரணமாக … Read more

கொளுந்து விட்டு எரிந்த உணவகத்தில் சிக்கிக்கொண்ட பூனைக்குட்டியை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்!

ரஷ்ய வான் தாக்குதலால் கொளுந்து விட்டு எரிந்த உணவகத்தில் சிக்கிக்கொண்ட பூனைக்குட்டியை உக்ரைன் நாட்டு தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ரஷ்ய படைகள் ராக்கெட் ஏவுகணை வீசி தாக்கியதில் கார்கீவ் நகரில் சுமார் 24,000 சதுரடி பரப்பளவிலான கட்டிடங்கள் தீக்கிரையாகின. அங்குள்ள உணவகத்தில், நெருப்புக்கு அஞ்சி இரும்பு சேர்களுக்கு அடியில் பதுங்கி கொண்ட பூனை குட்டியை தீயணைப்புத்துறையினர் மீட்டு தண்ணீரில் குளிப்பாட்டினர். Source link

பிரிட்டன் உள்துறை செயலர் ப்ரீத்தி பட்டேல் விலகல்| Dinamalar

லண்டன்: பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு பெற்றதையடுத்து அந்நாட்டு உள்துறை செயலர் ப்ரீத்தி பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், பல்வேறு புகார்களுக்கு பின் பதவி விலகினார். அந்நாட்டு பிரதமராக வருபவர் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். இதற்காக நடந்த தேர்தலில் இந்திய வம்சாவளியின் ரிஷி சுனாக்கும், லிஸ் டிரஸ்சும் போட்டியிட்டனர்.இதில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்று பிரிட்டன் பிரதமராக தேர்வு பெற்றார். … Read more