இந்தியா நடத்தும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியின் நிறைவு விழாவில் பாகிஸ்தான் பங்கேற்க இருப்பதாக தகவல்!

இந்தியா நடத்தும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியின் நிறைவு விழாவில் பாகிஸ்தான் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் நடைபெற்றுவரும் பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுப் பயிற்சியை இந்தியாவின் தேசிய பாதுகாப்புப் படை நடத்துகிறது. இதில் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்றுள்ளன. 2-ம் கட்டமாக கடந்த 8-ம் தேதி தொடங்கிய இப்பயிற்சி நாளை மறுநாள் நிறைவு பெறுகிறது. இந்த நிறைவு விழாவில் கலந்துகொள்ள பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி … Read more

சீக்கிய குடும்பம் கொலைகுற்றவாளி மீது வழக்கு பதிவு| Dinamalar

சான்பிரான்சிஸ்கோ:அமெரிக்காவில் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் கொன்றவர் மீது, நான்கு கொலை வழக்குகள் தனித்தனியாக தொடரப்பட்டுள்ளன. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்புரைச் சேர்ந்த ஒரு சீக்கிய குடும்பம், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மெர்செட் பகுதியில் வசித்து வந்தனர். சமீபத்தில் இந்த குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கடத்தி செல்லப்பட்டனர். ஜஸ்தீப் சிங், 36, அவருடைய மனைவி ஜஸ்லீன் கவுர், 27, எட்டு மாதக் குழந்தை ஆரூஹி தெரி மற்றும் … Read more

இன்று உலக மூட்டுவலி தினம்| Dinamalar

மூட்டுகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக். 12 உலக மூட்டுவலி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மூட்டுவலி என்பது உடலில் எந்த மூட்டிலும் ஏற்படக்கூடியது. இருப்பினும் முழங்கால் மூட்டில் ஏற்படுகிற வலி ‘மூட்டுவலி’ (ஆர்த்ரிடிஸ்) எனப்படுகிறது. இதற்கு உடல்பருமன், முதுமை, அடிபடுதல், மூட்டுச்சவ்வு கிழிதல், கிருமித்தொற்று, காச நோய், யூரிக் அமிலம் மூட்டுகளில் படிவது போன்றவை பொதுவான காரணங்கள். முதியோர் மட்டுமல்லாமல் இளைஞர்களும் பாதிக்கப்படுகின்றனர். பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. முதுமையில் மூட்டுவலி : வயதாகஆக, குருத்தெலும்பு … Read more

பிரிவினைவாத தலைவர் மரணம்| Dinamalar

புதுடில்லி, காஷ்மீர் பிரிவினைவாத தலைவரும், மறைந்த முன்னாள் ஹுரியத் தலைவர் சையது அலி ஷா கீலானியின் மருமகனுமான அல்தாப் அஹமது ஷா, சிறுநீரக புற்றுநோயால் நேற்று உயிரிழந்தார். அல்தாப் அஹமது ஷா, ௬௬, பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை இவரை விசாரித்தது. பின், 2017ல், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இவர் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. புதுடில்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சை அளிக்க, புதுடில்லி உயர் நீதிமன்றம் … Read more

நியூசிலாந்து கடற்கரையில்500 திமிங்கலங்கள் உயிரிழப்பு| Dinamalar

வெலிங்டன், நியூசிலாந்தின் சாத்தம் தீவில் கரை ஒதுங்கிய 500 ‘பைலட்’ திமிங்கலங்கள் உயிரிழந்தன. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கடல் பகுதிகளில், பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன. நியூசிலாந்து நிலப்பரப்பில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள சாத்தம் தீவில் கடந்த 7ம் தேதி 250 பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. மூன்று நாட்களுக்கு பின் அருகே உள்ள பிட் தீவில் 240 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. இவை கரை ஒதுங்குவதற்கான சரியான காரணம் … Read more

சீனாவில் கொரோனா அதிகரிப்பு ஊரடங்கால் பொதுமக்கள் அவதி| Dinamalar

பீஜிங்:சீனாவின் பல்வேறு மாகாணங்களில், தற்போது கொரோனா பரவல் மும்மடங்காக அதிகரித்துள்ளது. இதனால், மீண்டும் ஊடரங்கு மற்றும் பயணக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நம் அண்டை நாடான சீனாவின் ஷான்சி மாகாணத்தில் பென்யாங்க் நகரில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால், அங்கு நேற்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஹோஹாட் நகரில் கடந்த ௧௨ நாட்களில் ௨,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இப்பகுதிக்கு வெளியில் இருந்து வரும் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஜின்ஜியாங் மாகாணம், ஷாங்காய் மற்றும் நாட்டின் தலைநகரான … Read more

ஒரே நாளில் 80க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி ரஷ்யா தாக்குதல் – பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு..!

உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு பகுதிகளில், ஒரே நாளில் 80க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி, ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில், பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. கிரீமியாவை, ரஷ்யாவுடன் இணைக்கும் பாலம் தகர்க்கப்பட்டதற்கு, உக்ரைன் மீது குற்றஞ்சாட்டிய ரஷ்யா, அதற்கு பதிலடியாக திங்கட்கிழமை அன்று, அடுத்தடுத்து ஏவுகணைகளை ஏவி, பயங்கர தாக்குதல் நடத்தியது. அன்றைய தினமே 11 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் … Read more

இளவரசர் ஹாரியும் மேகனும் மீண்டும் அரச குடும்பத்தில் இணைய வேண்டும்: ராணி கமிலா விருப்பம்

லண்டன்: இளவரசர் ஹாரி – மேகன் மார்க்கல் ஆகியோர் அரச குடும்பத்திற்குத் திரும்ப வேண்டும் என்று பிரிட்டன் ராணி கமிலா விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரிட்டீஷ் குடும்ப வரலாற்று ஆசிரியரான லெவின் நேர்காணல் ஒன்றில் கூறும்போது, ”குடும்ப உறுப்பினர்களை கைவிடக்கூடாது என்று கமிலா நம்புகிறார். ஹாரியும், மேகனும் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என கமிலா கருதுகிறார். இளவரசர் ஹாரி – மேகன் மார்க்கல் ஆகியோர் அரச குடும்பத்திற்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் நினைக்கிறார்” என்று … Read more

பாகிஸ்தானில் பள்ளி வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்..!

பாகிஸ்தானில் பள்ளி பேருந்தின் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை கண்டித்து 2,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்வாட் பள்ளத்தாக்கில், பள்ளி வளாகம் ஒன்றின் வெளியே 15க்கும் மேற்பட்ட மாணவ மாணவியரை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்தில் பயணித்த சிறுமி  படுகாயமடைந்தார். Source link

இளவரசர் ஹாரி , மேகன் மெர்க்கல் மீண்டும் அரண்மணைக்கு திரும்புவார்களா?: ராணி கமீலா அழைப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: அரண்மணையை விட்டு வெளியேறிய இளவரசர் ஹாரி, மேகன் மெர்க்கல் தம்பதியினர் மீண்டும் அரண்மணைக்கு திரும்ப வர வேண்டும் என ராணி கன்சார்ட் கமீலா வலியுறுத்தியுள்ளார்.பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து இரண்டாம் எலிசபெத் மகனான சார்லஸ் , பிரிட்டன் மன்னராக பொறுப்பேற்றார். முன்னதாக பிரிட்டன் அரச குடும்பத்தில், 2020ம் ஆண்டு, குழப்பமாக துவங்கியது. மன்னர் சார்லஸ் – டயானா தம்பதியின் இளைய மகன் இளவரசர் … Read more