ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தங்கள் போக்கை மாற்ற வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் தலிபான்கள் தங்கள் போக்கை மாற்ற வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. கடந்த ஓராண்டில் மனிதாபிமான நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார். பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். Source link

இலங்கை வந்தது சீன உளவுக்கப்பல்: ஒரு வாரம் துறைமுகத்தில் நிற்க போகிறது: இந்தியா உஷார்| Dinamalar

கொழும்பு: சீனாவின், ‘யுவான் வாங் 5’ என்ற உளவுக் கப்பல்,நம் அண்டை நாடான இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகம் வந்தடைந்தது. இக்கப்பல் வரும் 22ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட உள்ளது. அப்போது, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ‘இஸ்ரோ’வின் ராக்கெட் ஏவுதளம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அணு மின் நிலையம் மற்றும் நம் நாட்டு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் அந்த உளவுக் கப்பல் சேகரித்துச் செல்லக் கூடிய அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்டை … Read more

உக்ரைன் போர் : ரஷ்யாவுக்கு ஆதரவாகக் களமிறங்குகிறதா வடகொரியா?

வடகொரிய விடுதலை தினத்தை ஒட்டி, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு ரஷ்ய அதிபர் புடின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கமான கொரிய தீபகற்பம் மற்றும் வடகிழக்கு ஆசியப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தவும், இரு தரப்பினரின் நலனுக்கும் உதவும் எனக் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை விரிவுபடுத்த ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் புடின் கூறியுள்ளதாக வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு பதிலளிக்கும் வகையில் கிம் ஜாங் உன்னும் … Read more

ஊழல் வழக்குகளில் மியான்மர் முன்னாள் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகிக்கு 6 ஆண்டு சிறை

யாங்கூன்: ஊழல் வழக்குகளில் மியான்மர் முன்னாள் அரசு ஆலோசகர்ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. அரசின் ஆலோசகராக சூகி பொறுப்பு வகித்தார். எனினும், தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு … Read more

சர்வதேச தட்டுப்பாட்டை சமாளிக்க உக்ரைனில் இருந்து கோதுமை ஏற்றுமதி தொடக்கம்

கீவ்: கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் 5-வது இடத்தில் உள்ளது. ரஷ்யா, உக்ரைன் போர் காரணமாக கடந்த 5 மாதங்களாக உக்ரைனில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்யப்படவில்லை. இதன் காரணமாக சர்வதேச அளவில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபை சார்பில் ரஷ்யா, உக்ரைன் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு … Read more

இலங்கை கடற்படைக்கு டோர்னியர் கண்காணிப்பு விமானம் – இந்தியா வழங்கியது

கொழும்பு: இந்தியா – இலங்கை இடையிலான பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 2018 ஜனவரியில் நடந்த போது, இலங்கையின் கடல்சார் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக 2 டோர்னியர் உளவு விமானங்களை அந்நாடு கோரியது. இதன் அடிப்படையில் ஒரு டோர்னியர் விமானத்தை இலங்கைக்கு இந்தியா நேற்று வழங்கியது. இதற்கான நிகழ்ச்சி, கொழும்பு விமான நிலையத்தை அடுத்துள்ள கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நடைபெற்றது. இதில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, இந்திய கடற்படை துணைத் தளபதி எஸ்.என்.கோர்மேட், கொழும்பில் உள்ள … Read more

நோபல் பரிசு பெற்ற மியான்மர் நாட்டின் ஆங் சான் சூ கி-க்கு மேலும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு!

நோபல் பரிசு பெற்ற மியான்மர் நாட்டின் ஆங் சான் சூ கி-க்கு ஊழல் வழக்கில் மேலும் 6 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஆங் சான் சூ கி-யை கிளர்ச்சி மூலம் பதவியிழக்கச் செய்த ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.   ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது. ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுதல், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக ஆங் சாங் சூகிக்கு … Read more

இந்திய எதிர்ப்புகளையும் மீறி இலங்கை அம்பன்தோட்டா துறைமுகம் வந்தது சீன உளவுக் கப்பல்

சீனாவின் ஆய்வு கப்பல் யுவான்வாங்-5, இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. சீனாவின் ஆய்வுக் கப்பல் யுவான் வாங் 5-ல் பல நவீன ரேடார்கள், ஆய்வுக் கருவிகள் உள்ளன. இது ராணுவத் தளங்கள், அணுமின்சக்தி நிலையங்கள் போன்றவற்றை கண்காணிக்கும் திறன் படைத்தது. இந்த கப்பல் இலங்கையில் சீனாவால் இயக்கப்படும் அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்துள்ளது. இது ஒருவார காலத்திற்கு அங்கே தங்குகிறது. உளவு அபாயம்; இந்தியா கவலை: சீன கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் … Read more

பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து

புதுடெல்லி: 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்தியாவின் முன்னேற்றத்தில் சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் திங்கள் கிழமை வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் முன்னேற்றம் வேகமெடுத்து வரும் இந்த சூழ்நிலையில், சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் மாற்றத்துக்கு அதிக முன்னுரிமை அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துறைகளில் இந்தியாவின் முன்னேற்றம் உக்கமளிப்பதாக உள்ளது. இந்தப் பயணத்தில் … Read more

தலிபான் ஆட்சியின் ஓராண்டு நிறைவு: துயரத்தின் பிடியில் ஆப்கானிஸ்தான்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்து ஓர் ஆண்டு ஆன நிலையில், அந்நாட்டில் நோயும், பசியும், துயரும் மட்டுமே நிறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ல் ஆப்கனில் ஆட்சியைப் பிடித்த தலிபான்கள், இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அறிவித்தனர். இந்நிலையில், தங்களது ஓராண்டு ஆட்சி நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், துப்பாக்கி ஏந்திய தலிபான்கள் தலைநகர் காபூல் தெருக்களில் மோட்டார் சைக்கிள்களில் நேற்று வலம் வந்தனர். அப்போது, ‘இஸ்லாம் … Read more