ரஷ்யா உக்ரைன் போர்; தொடரும் ரஷ்ய தொழிலதிபர்களின் மர்ம மரணங்கள்!

ரஷ்ய தொழிலதிபர்கள் மரணத்தில் மர்மம்: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், இரு நாடுகளின் பொருளாதாரமும் பெரும் பாதிப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதில் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இருந்து, ரஷ்யாவின் குறைந்தது 8 முக்கிய ரஷ்ய  தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்கள்  மர்மமான சூழ்நிலையில் இறந்துள்ளனர். தொழிலதிபர்களின் மரணம் இந்த அனைத்து தொழிலதிபர்களின் மரணத்திற்கும் பொதுவான தொடர்பு உள்ளதா என்பது குறித்து ரஷ்யாவில் இருந்து மேற்கத்திய … Read more

ரஷ்ய தூதரகத்தை குறிவைத்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குண்டு வெடிப்பு!

ஆப்கானிஸ்தான் செய்திகள்: ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து செய்திகள் வெளியாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ரஷ்ய தூதரக வாயிலில் இன்று (திங்கள்கிழமை) தற்கொலை படை தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது, ​​தூதரக ஊழியர்கள் 2 பேர் உட்பட 20 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது தூதரகம் முன்பு விசாவிற்காக மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்: காபூலில் உள்ள ரஷ்ய … Read more

ரஷ்யா – இந்தியா – சீனா ஒத்துழைப்பால் ஸ்திரத்தன்மை: ரஷ்ய தூதர் நம்பிக்கை

மாஸ்கோ: ஆர்ஐசி முத்தரப்பு ஒத்துழைப்புமூலம் ரஷ்யா, இந்தியா, சீனா இடையே ஸ்திரத்தன்மையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிப்போவ் தெரிவித்தார். ரஷ்யா, இந்தியா, சீனா நாடுகள் இடையே பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிக்க ஆர்ஐசிமுத்தரப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ஐசி கூட்டமைப்பின் கீழ், 3 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் முத்தரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகளை விவாதிக்க அவ்வப்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் 3 நாடுகளுக்கு இடையேயான உறவுகளை … Read more

காபூலில் தற்கொலைப்படை தாக்குதல்: ரஷ்ய தூதரக அதிகாரிகள் உட்பட 20 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், ரஷ்ய தூதரக அதிகாரிகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். தெற்கு ஆசிய நாடான, ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான் அமைப்பின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தலைநகர் காபூலில், ரஷ்ய நாட்டின் தூதரகத்தின் நுழைவாயில் அருகே, பயங்கரவாதிகள் இன்று தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில், ரஷ்ய தூதரக அதிகாரிகள் உட்பட 20 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விசா பெற காத்திருந்த பொது … Read more

சீனாவின் தென்மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவின் தென்மேற்கு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சிச்சுவான் மாகாணத் தலைவர் செங்டுவில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லூடிங் நகரில் பூமிக்கடியில் 16 கிலோ மீட்டர் ஆழத்தில் நேரிட்ட இந்நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 8ஆக பதிவாகியுள்ளது.  நிலநடுக்கத்தில் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.  Source link

அடுத்த 18 ஆண்டுகளில் 50 சதவீத தரிசு நிலத்தை சரி செய்ய ஜி-20 நாடுகள் ஒப்புதல்

புதுடெல்லி: அடுத்த 18 ஆண்டுகளில் உலகம்முழுவதும் உள்ள தரிசு நிலங்களை, 50 சதவீதம் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள ஜி-20 நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன. தரிசு நிலத்தை மீட்பதற்கான ஐ.நா அமைப்பு (யுஎன்சிசிடி) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், உலகளவில் உள்ள நிலப்பகுதியில் 40 சதவீதம் தரிசு நிலமாக கிடக்கிறது என தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 50 சதவீத மக்கள் பாதிப்படைகின்றனர். மேலும், இது உலகளாவிய மொத்த உற்பத்தி மதிப்பில்(4.4 லட்சம் கோடி அமெரிக்க டாலர்) சுமார் பாதியளவுக்கு பாதிப்பை … Read more

நெட்பிளிக்ஸில் வெளியான நேஷனல் பார்க் தொடரை தொகுத்து வழங்கிய ஒபாமாவுக்கு எம்மி விருது

லாஸ் ஏஞ்சல்ஸ்: நெட்பிளிக்ஸில் வெளியான நேஷனல் பார்க் தொடரை சிறப்பாக தொகுத்து வழங்கியதற்காக, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு எம்மி விருது வழங்கப்பட்டது. அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும், அவரது மனைவிமிஷேல் ஒபாமாவும் ‘ஹையர் கிரவுண்ட்’என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்துகின்றனர். இந்த நிறுவனம் சார்பில் ‘அவர் கிரேட் நேஷனல் பார்க்ஸ்’ என்ற தலைப்பில் ஆவணப் படம் ஒன்று எடுக்கப்பட்டது. இதில் உலகம் முழுவதும் உள்ள தேசிய பூங்காங்களின் சிறப்பம்சங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. இந்த தொடரை ஒபாமாவே … Read more

Typhoon Hinnamnor: சுழன்றடிக்க காத்திருக்கும் ஹின்னம்னோர் புயல்: நாளை கரையை கடக்கிறது!

நடப்பு ஆண்டின் சக்தி வாய்ந்த புயலாக கருதப்படும் ஹின்னம்னோர், நாளை கரையைக் கடக்க உள்ளது. மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்து உள்ளது. “ஹின்னம்னோர்” என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், ஜப்பான் மற்றும் சீனாவின் கிழக்கு பகுதிகளை கடந்து செல்லும் என கணிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டின் சக்தி வாய்ந்த புயலான ஹின்னம்னோர், வடக்கே நகர்ந்து ஜப்பான், தைவான், சீனாவின் கிழக்கு பகுதி, தென் கொரியா போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் என … Read more

பிறந்த குழந்தைக்கு பக்கோடா என பெயர் சூட்டிய பிரிட்டன் பெற்றோருக்கு குவியும் வாழ்த்துகள்

லண்டன்: பொதுவாக சிலர் தங்கள் குழந்தைகளுக்கு புகழ்பெற்ற ஒருவர் அல்லது இடத்தின் பெயரை சூட்டுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், குழந்தைக்கு தங்களுக்கு பிடித்த உணவுப்பொருளின் பெயரை சூட்டியதாக யாராவது கேள்விப்பட்டிருக்கிறார்களா? ஆம். கேள்விப்பட்டிருக்கிறோம். கேக் மேல் வைக்கப்படும்செர்ரி பழத்தின் பெயரை சிலர் குழந்தைக்கு சூட்டி உள்ளனர். அந்த வகையில், பிரிட்டனின் அயர்லாந்தில் உள்ள நியூடவுனாபே நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற உணவகம், சுவாரஸ்யமான ஒரு செய்தியை சமூக ஊடகங்களில் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதாவது தங்கள் உணவகத்துக்கு அடிக்கடி வரும் … Read more

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – குலுங்கிய வீடுகள், கட்டடங்கள்!

சீன நாட்டில் உள்ள சிச்சுவான் மாகாணத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அண்டை நாடான சீனாவில் உள்ள, சிச்சுவான் மாகாணத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் இன்று காலை 10.20 மணி அளவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோவில் 6.8 ஆக பதிவாகி உள்ளதாக, சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்து உள்ளது. சிச்சுவான் தலைநகர் செங்டுவில் இருந்து தென்மேற்கே சுமார் … Read more