எகிப்து தேவாலய தீ விபத்தில் 41 பேர் உயிரிழப்பு; 55 பேர் படுகாயம்

கெய்ரோ: எகிப்தின் கிசா பகுதி தேவாலயத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். 55 பேர் படுகாயம் அடைந்தனர். எகிப்து மக்கள் தொகையில் சுமார் 90 சதவீதம் பேர் முஸ்லிம்கள் ஆவர். சுமார் 10 சதவீதம் அளவுக்கு கிறிஸ்தவர்கள் வசிக்கின்றனர். எகிப்தின் கிசா பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ளனர். அங்குள்ள தேவாலயத்தில் நேற்று ஆராதனை நடைபெற்றது. இதில் 5,000 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆராதனை நடைபெற்று கொண்டிருந்தபோது மின் கசிவு காரணமாக தீ விபத்து … Read more

முதல் உலகப்போரில் காணாமல் போன அமெரிக்க போர் கப்பல் கண்டுபிடிப்பு.!

முதல் உலகப் போரின் போது காணாமல் போன அமெரிக்க கடற்படையின் போர் கப்பல் சிதைவை பிரிட்டின் ஆழ்கடல் நீச்சல் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். கார்னிஷ் செல்டிக் கடல் தீவு கடற்கரையில் இருந்து 40 மைல் தொலைவில் கடலுக்குள் மூழ்கி இருந்த ஜேக்கப் ஜோன்ஸ் கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதல் உலகப் போரின் போது, அமெரிக்கா இந்த பெரிய போர் கப்பலை பயன்படுத்தி வந்தது. 1917-ஆம் ஆண்டு இந்த கப்பல் மீது மேற்கொண்ட தாக்குதலில் கப்பல் மூழ்கியதுடன், அதில் இருந்த … Read more

டாய்சே வங்கியின் மாஜி அதிகாரிஅனுஷ் ஜெயின் காலமானார்| Dinamalar

நியூயார்க் : டாய்சே வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியும், இந்தியருமான அனுஷ் ஜெயின், 59, புற்றுநோயால் காலமானார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பிறந்தவர் அனுஷ் ஜெயின். டில்லி பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை ஹானர்ஸ் பட்டம் பெற்றவர், அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலையில் எம்.பி.ஏ., பட்டம் பெற்றார். பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய அனுஷ் ஜெயின், ஐரோப்பிய நாடான ஜெர்மனியை தலைமையிடமாக உடைய டாய்சே வங்கியில் 1995ல் சேர்ந்தார். கடந்த, 2012 – 15 வரையில், அந்நிறுவனத்தின் இரண்டு தலைமை … Read more

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – புதிதாக 2,604 பேருக்கு தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இருப்பினும் தொற்று எண்ணிக்கை குறைவாக … Read more

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உடல்நிலை முன்னேற்றம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க் : அமெரிக்காவில் கத்திக் குத்தில் பலத்த காயம் அடைந்த, எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு, ‘வென்டிலேட்டர்’ அகற்றப்பட்டது. பேசும் நிலைக்கு அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தியாவில் மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் பிறந்தவர், பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, 75. இவர் எழுதிய, ‘த சட்டானிக் வெர்ஸஸ்’ என்ற புத்தகம், முஸ்லிம்களின் மனதை புண்படுத்துவதாக கூறி, உலகின் பல இடங்களிலும் போராட்டங்கள் நடந்தன.இந்தப் புத்தகம் 1988ல் ஈரானில் தடை … Read more

எகிப்தில் கிறிஸ்தவ ஆலயத்தில் திடீர் தீ விபத்து; 41 பேர் உயிரிழப்பு

கெய்ரோ, எகிப்து தலைநகர் கெய்ரோவின் வடமேற்கில் இம்பாபா மாவட்டத்தில் அபு சிபைன் என்ற கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது. இந்நிலையில், திடீரென இந்த ஆலயத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். இதற்கான காரணம் எதுவும் உடனடியாக தெரியவரவில்லை. இதனை தொடர்ந்து, அனைத்து நிர்வாக சேவைகளும் முடுக்கி விடப்பட்டு, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என அதிபர் அப்துல் பதா அல்-சிசி தனது பேஸ்புக் பக்கத்தில் … Read more

சீன உளவு கப்பல் வருகை… இந்தியாவுக்காக வெளியுறவு கொள்கையை மாற்ற முடியாது..! இலங்கை அதிரடி அறிவிப்பு

கொழும்பு, சீனாவின் உளவு கப்பல் யுவான் வாங்-5 நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) இலங்கை கொழும்பு அருகே உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர இருக்கிறது. இந்த உளவு கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கருதப்படுகிறது. இந்த கப்பல் இலங்கைக்கு வருவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே அனைத்துக்கட்சி தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியா-சீனா இரு நாடுகளின் கருத்துக்களை பரிசீலித்தனர். இறுதியில் சீன கப்பலுக்கு அனுமதி அளிப்பதென்று முடிவு … Read more

வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரின் வீடியோவை வெளியிட்டு இந்தியாவை பாராட்டிய இம்ரான் கான்

இஸ்லாமாபாத், இந்தியாவின் வெளியுறவு கொள்கையை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரின் வீடியோவை லாகூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் காண்பித்து பேசியுள்ளார். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. இத்தகைய பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதற்கு பாகிஸ்தானின் தவறான வெளியுறவுக்கொள்கைகளே காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் இது தொடர்பாக லாகூரில் நடைபெற்ற … Read more

ரஷியாவுடனான உறவில் விரிசல் – இஸ்ரோவின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்!

லண்டன், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்(இஎஸ்ஏ) தனது விண்வெளி பணிகளைத் தொடங்க புதிய கூட்டணிகளை தேட ஆரம்பித்துள்ளது. உக்ரைன் போர் தொடர்பான உறவுகளில் ஏற்பட்ட முறிவைத் தொடர்ந்து ரஷிய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் அதன் ஐரோப்பிய விண்வெளி உறவுகளை முடித்துக்கொண்டது. மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது விதித்துள்ள பொருளாதார நடவடிக்கைகளால் ரஷியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்காரணமாக, ரஷியாவுடனான செவ்வாய் கிரக கூட்டுத் திட்டம் உட்பட பல பணிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் ரஷியாவின் விண்கலமான சோயுஸ் … Read more

ஜெய்சங்கர் வீடியோவை காட்டி இந்தியாவை புகழும் இம்ரான் கான்| Dinamalar

லாகூர்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவு கொள்கையை, மாநாடு ஒன்றில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் புகழ்ந்து பேசியுள்ளார். கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் பேட்டியையும் காண்பித்தார். லாகூரில் நடந்த கூட்டம் ஒன்றில் இம்ரான் கான் பேசியதாவது: பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற காலத்தில் தான் இந்தியாவும் சுதந்திரம் பெற்றது. புதுடில்லி, தனது மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப சுதந்திரமான வெளியுறவு கொள்கையை வரையறை செய்துள்ளது. … Read more