நியூயார்க்கில் தாக்கப்பட்ட சல்மான் ருஷ்டியின் எழுத்தும் பின்புலமும்

எழுத்தாளர், நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி மீது நியூயார்க்கில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலின் விளைவாக அவர் ஒரு கண்ணில் பார்வையை இழக்கக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னர் தற்போது வெண்டிலேட்டர் எனப்படும் உயிர் காக்கும் கருவி பொருத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். சல்மான் ருஷ்டியின் புத்தக முகவரான ஆண்ட்ரூ வில்லி இது தொடர்பாக ஒரு மின்னஞ்சலைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “இது நல்ல செய்தி அல்ல. சல்மான் ஒரு கண் பார்வையை இழக்கும் சூழலில் … Read more

டொனால்டு டிரம்ப் சொகுசு பங்களாவில் ரகசிய ஆவணங்கள் – எஃப்.பி.ஐ தகவல்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் சொகுசு பங்களாவில் ரகசிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக எஃப்.பி.ஐ அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 8 ஆம் தேதி எஃப்.பி.ஐ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அவருக்கு புளோரிடா மாகாணத்தில் மார்-ஏ-லகோ என்ற எஸ்டேட் உள்ளது. கடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்ததை அடுத்து, வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய போது ரகசிய ஆவணங்களை பெட்டியில் … Read more

கத்திக்குத்தில் படுகாயம்..! உயிருக்குப் போராடும் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி

இந்திய வம்சாவளி நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கத்தியால் குத்தப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மும்பையில் பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. 1980களில் Satanic Verses என்ற நாவலை எழுதி மத அடிப்படைவாத அமைப்புகளின் பத்வாவுக்கு ஆளானவர் அவர். 75 வயது நிரம்பிய அவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில், நியுயார்க் மாகாணம் Buffalo பகுதியில் கல்வி மையம் ஒன்றில் … Read more

‘சல்மான் ருஷ்டி’…தலைக்கு 3 மில்லியன் டாலர் அறிவித்த ஈரான்: அப்படி என்னதான் தப்பு செய்தார்?

நியூயார்க் நகரத்தில் ஆண்டுதோறும், கோடைக் கால சமயத்தில் இலக்கிய நிகழ்வுகள் நடைபெறும். இதில் ஆண்டு தோறும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர், நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி (75) கலந்துகொள்வது வழக்கம். அப்படி இந்திய நேரப்படி நேற்று இரவு, இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்ட சல்மான் ருஷ்டி, அதன்பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போதுதான் அடையாளம் தெரியா ஒருவர் கருப்பு நிற ஆடையுடன், முகத்தில் கருப்பு மாஸ்க் அணிந்து வேகமாக மேடையே நோக்கி ஓடினார். கண் இமைக்கும் நேரத்தில் 20 விநாடிகளில் … Read more

Salman Rushdie: ‘சல்மானை கத்தியால் குத்திய’…ஹாதி மாடர் குறித்த 5 முக்கிய தகவல்கள்: தீவிரவாத அமைப்புடன் தொடர்பு?

1988ஆம் ஆண்டில் சல்மான் ருஷ்டி (75) வெளியிட்ட தி சாத்தானிக் வெர்சஸ் (The Satanic verses) என்ற புத்தகத்தில், இஸ்லாமிய மதக்கடவுளின் இறைத்தூதர் மற்றும் இஸ்லாமிய மதப்புத்தக்கத்தை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக கூறி இஸ்லாமிய நாடுகள் அந்த புத்தக்கத்திற்கு தடை விதித்தது. மதச்சார்பற்ற இந்தியாதான் முதல் நாடாக அந்த புத்தகத்தை தடை செய்தது. இப்போதுவரை தடை நீடிக்கிறது. இந்நிலையில், 1989ஆம் ஆண்டில் சல்மான் ருஷ்டியின் தலைக்கு ஈரான் அதிபர் ருஹொலா கெமியோனி 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் … Read more

லெபனானில் கடும் நெருக்கடி – சொந்த பணத்தை எடுக்க வங்கியை சிறைபிடித்த வாடிக்கையாளர்

பெய்ரூட்: மேற்கு ஆசியாவில் லெபனான் நாடு அமைந்துள்ளது. கரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்களால் அந்த நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதன் காரணமாக வங்கி கணக்குகளில் இருந்து பொதுமக்கள் பணம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள வங்கியில் அல்ஷேக் ஹூசைன் (40) என்பவர் நேற்று முன்தினம் துப்பாக்கியுடன் நுழைந்தார். வங்கி ஊழியர்கள் உட்பட 10 பேரை சிறைபிடித்தார். தன் வங்கிக் கணக்கில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் ரூ.1.60 … Read more

Salman Rushdie: சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து.. வெண்டிலேட்டரில் சிகிச்சை – ஒரு கண்ணை இழக்கும் அபாயம்!

அமெரிக்காவில் மர்ம நபர் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்துள்ள பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், சல்மான் ருஷ்டி, 75. பிரபலமான எழுத்தாளராகிய இவர் எழுதிய, “சாத்தானின் வேதங்கள்” என்ற நூல், சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், இஸ்லாமுக்கு எதிரான விஷயங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறி, அவருக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து, எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு … Read more

சல்மான் ருஷ்டி தாக்குதல் | 20 விநாடிகளில் 15 கத்திக்குத்து.. நடந்ததை விளக்கிய நிருபர்

எழுத்தாளர், நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி மீது வன்முறைத் தாக்குதல் நடந்துள்ள நிலையில், அங்கிருந்து செய்தியாளர் ஒருவர் தான் கண்ட காட்சிகளை விவரித்துள்ளார். நியூயார்க்கில் சல்மானின் நிகழ்ச்சி நடந்த அரங்கில் இருந்த அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளர் ஒருவர் கூறுகையில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது கருப்பு நிற ஆடையுடன் முகத்தில் கருப்பு மாஸ்க் அணிந்திருந்த நபர் ஒருவர் வேகமாக மேடையை நோக்கி ஓடினார். அவர் திடீரென சல்மான் மீது பாய்ந்தார். முதலில் இது சல்மானுக்கு இருக்கும் அச்சுறுத்தலை எடுத்துரைக்க நடத்தப்படும் … Read more

75-வது சுதந்திர தினம்: விண்வெளியில் இருந்து இந்தியாவுக்கு வாழ்த்துச் செய்தி

ஐஎஸ்எஸ்: நாடு 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த வேளையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இந்தியாவுக்கு வாழ்த்துச் செய்தி வந்துள்ளது. இத்தாலிய விண்வெளி வீராங்கணை சமந்தா கிறிஸ்டஃப்ரோட்டி விண்வெளியில் இருந்து ஒரு வாழ்த்து வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில் இத்தாலிய விண்வெளி முகமை (ஐஎஸ்ஏ), அமெரிக்க விண்வெளி மையம் நாசா இன்னும் பல சர்வதேச கூட்டாளிகள் சார்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவுக்கு வாழ்த்து … Read more

அரபிக் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து 9 இந்திய மாலுமிகளை மீட்ட பாகிஸ்தான் கடற்படை

கராச்சி: இந்தியாவைச் சேர்ந்த ஜம்னா சாகர் என்ற கப்பல் 10 மாலுமிகளுடன் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் கடல் பகுதியில் பயணம் மேற்கொண்டிருந்தது. கடந்த 9-ம் தேதி இந்தக் கப்பல் குவாடர் பகுதி அருகே வந்த போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மூழ்க ஆரம்பித்தது. இதையடுத்து இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் வந்ததும், அவர்களை மீட்க உதவுமாறு பாகிஸ்தானின் கடல்சார் தகவல் மையத்துக்கு கோரிக்கை விடப்பட்டது. உடனடியாக விரைந்து செயலாற்றிய பாகிஸ்தான் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடத்துக்கு பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகளை … Read more