அமெரிக்காவில் கொலை வழக்கில் இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி விடுதலை

ஹூஸ்டன், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த் நகரில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரவிந்தர் சிங். கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் போர்ட் வொர்த் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே பெண் ஒருவர் மயங்கி கிடப்பதாக வந்த தகவலின் பேரில் அதுபற்றி விசாரிப்பதற்காக ரவிந்தர் சிங் அங்கு சென்றார். புல் தரையில் கிடந்த அந்த பெண் நலமாக இருக்கிராறா என்பதை சோதிக்க ரவிந்தர் சிங் அந்த பெண்ணின் அருகில் … Read more

பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஏற்றிச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து 13 பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஏற்றிச் சென்ற படகு, சிந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். செஹ்வான் நகரில் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் இருந்து 25க்கும் மேற்பட்டோரை நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்ற போது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் 8 பேர் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர் கனமழையால் பாகிஸ்தானின் சிந்து, பலூசிஸ்தான் மாகாணங்களில் பல பகுதிகள் நீரில் மூழ்கிய நிலையில், லட்சக் கணக்கான … Read more

பாகிஸ்தானில் மீட்புப் படகு கவிழ்ந்து விபத்து : 13 பேர் பலியான பரிதாபம்

இஸ்லமாபாத், பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புகளால் அமலான ஊரடங்கால், சரிவடைந்த பொருளாதார சூழலில் இருந்து அந்நாடு இயல்பு நிலைக்கு திரும்பி வராமல் தவித்து வரும் சூழலில், 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகள் தொடர்ந்து, மக்களை மீள முடியாத நிலைக்கு கொண்டு சென்று விட்டுள்ளது. அந்நாட்டில், தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனையடுத்து, நாடு முழுவதும் தேசிய அவசர … Read more

சோவியத் யூனியன் கடைசி தலைவர் மிக்கைல் கோர்பசேவ் காலமானார்| Dinamalar

மாஸ்கோ: சோவியத் யூனியனின் கடைசி தலைவரும், சீர்திருத்தவாதியுமான மிக்கைல் கோர்பசேவ், 91 உடல்நலக்குறைவால் காலமானார்.சிதறுண்ட சோவியன் யூனியனின் முதுபெரும் அரசியல் தலைவரான இவர் சோவியத் யூனியனின் தலைவராக 1985 முதல் 1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் கலைக்கப்படும் வரை தலைவராக இருந்தார். அப்போது மிகப்பெரிய சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். இவரது சிறந்த நிர்வாகத்தில் பனிப்போர் முடிவுக்கு வந்தது. சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து பல்வேறு நாடுகள் குடியரசாயின. 1990ம் ஆண்டு இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில் வயது … Read more

வெள்ளக்காடான பாகிஸ்தான்: நிவாரண பொருட்களுடன் சென்ற ஹெலிகாப்டர்கள் தரையிறங்க இடமில்லை – மந்திரி தகவல்!

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர். பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி … Read more

உண்ணா நோன்பிருந்து 9 கிலோ எடை குறைத்தேன்: எலான் மஸ்க் பகிர்ந்த ட்வீட்

உண்ணா நோன்பிருந்து (Fasting) 9 கிலோ உடல் எடையை குறைத்ததாக உலகின் முதல் பணக்காரர் ஆன எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதனை ட்விட்டர் பயனர் ஒருவருக்கு ரெஸ்பாண்ட் செய்த போது அவர் தெரிவித்துள்ளார். ஸ்பேஸ்X நிறுவனரும், டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியுமான மஸ்க், ட்விட்டர் சமூக வலைதளத்தில் படு ஆக்டிவாக செயல்படுபவர். தன்னை குறித்து ட்வீட் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவரே முன்வந்து பதில் சொல்வார். அப்படி ஒரு சம்பவம் அண்மையில் நடந்துள்ளது. “நல்ல நண்பர் ஒருவரது … Read more

குரங்கம்மைக்கு தடுப்பூசிகளை தயாரிக்க 11 மில்லியன் டாலர் நிதி அறிவித்த அமெரிக்க அரசு..!

குரங்கம்மை நோய்க்கான தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிக்கு 11 மில்லியன் டாலர் நிதி வழங்க உள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. டென்மார்க்கைச் சேர்ந்த பவேரியன் நார்டிக் நிறுவனத்தின் ஜைன்னியோஸ் என்ற தடுப்பூசியை தயாரிக்க நிதி வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக அந்நிறுவனத்திடம் இருந்து 30 லட்சம் டோஸ்களை ஆர்டர் செய்த அமெரிக்கா, ஜூலையில் கூடுதலாக 25 லட்சம் டோஸ்களை கேட்டுள்ளது. உலகளவில் குரங்கம்மை பாதித்தோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 600-ஐ கடந்த நிலையில், அமெரிக்காவில் மட்டும் அந்நோய் பாதிப்பு சுமார் … Read more

தைவானுக்கு 1 பில்லியன் டாலர் மதிப்பில் ஆயுதம் வழங்க அமெரிக்கா முடிவு

வாஷிங்டன்: தைவானுக்கு 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.8,700 கோடி) மதிப்பிலான ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற ஒப்புதலை பைடன் அரசு கோரவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஒப்புதல் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பைடன் அரசு தைவானுக்கு போர் விமானங்கள், கப்பல்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட 1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்க முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதலை நாடாளுமன்றத்தில் பெறுவதற்கு பைடன் அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

அமெரிக்காவில் பெருகும் துப்பாக்கி கலாச்சாரம்..! – விதிகளை கடுமையாக்க கோரிக்கை..!

அமெரிக்காவில் கடந்த சில காலமாக துப்பாக்கி கலாச்சாரத்தால் பொதுமக்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டிற்கான விதிகளை கடுமையாக்க கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் அமெரிக்காவின் 4 வெவ்வேறு பகுதிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. அமெரிக்காவில் ஹூஸ்டனில் கட்டிடம் ஒன்றுக்கு தீ வைத்த நபர் அதிலிருந்து தப்பி ஓடி வந்தவர்களை துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அந்த … Read more

இந்தியா – சீனா LAC குறித்து ஜெர்மன் தூதர் கூறிய கருத்து; கடுப்பில் சீனா!

இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மேன், இந்திய எல்லையில் சீனா அத்துமீறுவது சர்வதேச ஒழுங்கை மீறும் செயல் என்றும் அதை ஏற்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் ஐரோப்பா அடைந்துள்ள கோபத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். ஜேர்மன் தூதர் பிலிப் ஆக்கர்மேன், அருணாச்சல பிரதேசம் மீதான சீனாவின் கருத்துக்கள் “அதிர்ச்சியூட்டுவதாக” விவரித்தார். உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல், கடந்த 70 ஆண்டுகளில் உலகின் மிக மோசமான தாக்குதல் என்று … Read more