வங்கதேசத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு! அரசின் முடிவை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்!

டாக்கா, வங்கதேசத்தில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதையடுத்து, நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.வங்கதேசத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த விலை உயர்வு இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 34 டாக்காவும், ஆக்டேன் லிட்டருக்கு 46 டாக்காவும், பெட்ரோல் லிட்டருக்கு 44 டாக்காவும் உயர்ந்துள்ளது. இதன்மூலம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை 50 சதவீதத்திற்கும் மேலாக … Read more

ஞாயிறு தாண்டியும் போர்ப் பயிற்சி – சீனாவை விமர்சிக்கும் தைவான்

தைபே: எல்லையோரத்தில் ராணுவ பயிற்சியை நீட்டித்த சீனாவை தைவான் கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தனது ஆசிய பயணத்தின் தொடர்ச்சியாக தைவானுக்கு கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்கு பிறகு தைவானுக்குச் சென்ற அமெரிக்க உயர் அதிகாரி என்ற பெருமையை பெற்ற நான்சி மிகப் பெரிய மோதல் போக்கு ஏற்படவும் காரணமாகி இருக்கிறார். காரணம், நான்சியின் இப்பயணத்துக்கு சீனா கடும் அதிருப்தியை தெரிவித்தது. சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா … Read more

கியூபா நாட்டின் முக்கிய எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து.. 100-க்கும் மேற்பட்டோர் காயம்!

கியூபா நாட்டு முக்கிய எண்ணெய் கிடங்கில் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்தை கட்டுப்படுத்த மெக்சிகோ மற்றும் வெனிசூலா நாட்டு தீயணைப்பு வல்லுனர்கள் உதவி வருகின்றனர். வெள்ளிக்கிழமை, மின்னல் தாக்கியதால் மடசனஸ் (Matazanas) நகர எண்ணெய் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. மறுதினம், அருகே உள்ள மற்றொரு எண்ணெய் கிடங்கும் தீ பரவி வெடித்ததில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். தீயைக் கட்டுப்படுத்த மெக்சிகோ, வெனிசுலா நாடுகளில் இருந்து 4 விமானங்களில் தீயணைப்பு ரசாயனங்களுடன் 117 தீயணைப்பு வல்லுனர்கள் வந்துள்ளனர். … Read more

காமன்வெல்த் நிறைவுவிழா : தேசியக்கொடி ஏந்தும் சரத், நிகத்..!

இங்கிலாந்தின் பிர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் தொடர் இன்று முடிவடைய உள்ள நிலையில், நிறைவு விழாவில் இந்திய அணி சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலும், குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீனும் தேசியக் கொடியேந்தி செல்கின்றனர். 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, இங்கிலாந்தில் கடந்த ஜூலை 28ஆம் தேதி முதல் நடைபெற்றது. இதில் நீச்சல், தடகளம், பேட்மிண்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்ளிட்ட 20 விளையாட்டுகளில் சுமார் 280 போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் 72 நாடுகளை … Read more

விந்தணு – கருமுட்டை இல்லாமல் இஸ்ரேல் விஞ்ஞானிகள் உருவாகியுள்ள செயற்கை கரு!

உலகின் முதல் செயற்கை கரு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆன்மாவின் இதயமும் துடிக்க, மூளையும் முழு வடிவம் பெற்றுள்ளது. இஸ்ரேலில் உள்ள வெய்ஸ்மேன் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் கரு முட்டைகளோ, விந்தணுகளோ இல்லாமால் செயற்கை கருவை உருவாக்கியுள்ளனர். குழந்தை பெற முடியாத தம்பதிகளுக்கு இன்-விட்ரோ கருத்தரித்தல், அதாவது IVF நம்பிக்கையாக வந்தது. இந்த நுட்பத்தில், விந்தணு மற்றும் முட்டை மூலம் ஆய்வகத்தில் கரு தயாரிக்கப்படுகிறது. இப்போது தொழில்நுட்பம் இன்னும் ஒரு படி மேலே சென்று விட்டது. இதில், கருவைத் தயாரிக்க … Read more

எகிப்து தலையீட்டால் இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் தற்காலிக நிறுத்தம்

காசா: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தாக்குதல் நடந்த நிலையில், எகிப்து மத்தியஸ்தம் செய்த பிறகு தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேல் வெள்ளிக்கிழமை முதல் காசா முழுவதும் கடுமையான தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் தாக்குதலில் பல கட்டிடங்கள் தரைமட்ட மாகின. மேலும், பாலஸ்தீனத்தின் அகதிகளின் முகாம்களும் தாக்குதலுக்கு உள்ளானது. பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் குழுவை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. ஆனால், இதில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பாலஸ்தீன பொதுமக்கள். பொதுமக்கள் உயிரிழப்புக்கு … Read more

உக்ரைன் ஆயுதக்கிடங்கு மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்.. நேட்டோ வழங்கிய 45,000 டன் வெடிமருந்து அழிப்பு..!

உக்ரைனுக்கு நேட்டோ அமைப்பால் வழங்கப்பட்ட 45,000 டன் வெடி மருந்தை ஏவுகணை வீசி அழித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மிகோலைவ் நகரில் உள்ள அந்த ஆயுத கிடங்கு மற்றும் டோனட்ஸ்க் பகுதிகளில் உள்ள உக்ரைன் நிலைகள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தின. போர் ஆரம்பித்தது முதல், உக்ரைன் படைகளுக்குச் சொந்தமான 263 போர் விமானங்கள், 4,000 க்கும் மேற்பட்ட பீரங்கிகள், 3,000 க்கும் மேற்பட்ட சிறிய ரக பீரங்கிகளை தகர்த்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. … Read more

காமன்வெல்த் பாட்மின்டன்: தங்கம் வென்றார் பி.வி.சிந்து| Dinamalar

பர்மிங்காம்: காமன்வெல்த்தில் பாட்மின்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கப் பதக்கம் வென்றார். இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. இன்றுடன் (ஆக.,8) முடிவடைய உள்ள இந்த விளையாட்டு போட்டிகளில் இந்தியா இதுவரை 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் பதக்கத்துடன் 5வது இடத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில், பாட்மின்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் பி.வி.சிந்து பதக்கத்தை உறுதி செய்தார். இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கனடாவின் மிச்செல் லி.,யை எதிர்கொண்டார். இதில் … Read more

‘கொலம்பியாவின் முதல் இடதுசாரி அதிபர்’ கஸ்டாவோ பெட்ரோ பதவியேற்பு; மாற்றம் சாத்தியமா?

பொகடா: பலத்த வரவேற்புக்கு இடையில் கொலம்பியாவின் அதிபராக கஸ்டாவோ பெட்ரோ பதவி ஏற்றுக் கொண்டார். ஜூனில் நடந்த கொலம்பிய அதிபர் தேர்தலில் கஸ்டாவோ பெட்ரோ 50%-க்கும் அதிகமான வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இந்த நிலையில், கொலம்பிய அதிபராக கஸ்டாவோ ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார். அவரது பதவியேற்பில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டார்கள். கொம்பியாவின் முதல் இடதுசாரி அதிபர் கஸ்டாவோ பெட்ரோ ஆவார். பதவியேற்பு நிகழ்வில் கஸ்டாவோ பெட்ரோ பேசியது: “எனக்கு இரண்டு நாடுகளும் வேண்டாம், அதேபோல் … Read more

ஜி ஜின்பிங்கின் அடக்குமுறை… வெளிநாடுகளில் தஞ்சம் கோரும் 6,00,000 சீனப் பிரஜைகள்!

பெய்ஜிங்: சீனாவில் ஜி ஜின்பிங் பொறுப்பேற்றதில் இருந்து, சீனா, நாட்டில் பல அடக்குமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அடக்கு முறைக்கு சாதாரண குடிமக்கள் மட்டுமல்லாது, அலிபாபா போன்ற பல தொழில்நுட்ப ஜாம்பவான்களும் அடக்குமுறி காரணமாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். பலரது இருப்பிடம் கூட சரியாக தெரியவில்லை. விதி மீறல்கள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு,  தொடர்ச்சியான விசாரணைகளை எதிர்கொள்கின்றனர். குழந்தைகள் வீடியோ கேம்களை விளையாடுவதற்கு அனுமதிக்கப்படும் மணிநேரங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துதல், பிரபல ரசிகர்களின் கலாச்சாரத்தை முறியடித்தல் மற்றும் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் … Read more