மத்திய தரைக்கடலில் குடிநீர் கூட இல்லாமல் தத்தளித்துக்கொண்டிருந்த 428 பேர் மீட்பு..!

மத்திய தரைக்கடலில் படகில் தத்தளித்துக்கொண்டிருந்த புலம்பெயர்ந்தவர்கள் 428 பேரை ஜெர்மன் தொண்டு நிறுவனமான சீ-வாட்ச் மீட்டது. அதிக அளவிலான எண்ணிக்கையில் குடிநீர் கூட இல்லாமல் கடும் வெயிலில் இருந்த அவர்களை உளவு விமானம் கண்டறிந்து சீ-வாட்ச் தொண்டு நிறுவனம் நடத்தும் மீட்பு கப்பலுக்கு தகவல் தெரிவித்தது. இதனையடுத்து நான்கு வெவ்வேறு மீட்பு நடவடிக்கைகள் மூலம் மூன்று கப்பல்களில் அவர்கள் மீட்கப்பட்டனர்.  Source link

பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கி சூடு – என்ன நடந்தது?

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் காயமடைந்தனர். க்யூசான் நகரில் உள்ள Ateneo de Manila பல்கலைக்கழகத்தின் வாயிலில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக மெட்ரோ மணிலா மேம்பாட்டு ஆணையம் செய்தியை உறுதிப்படுத்தியது. “ஒரு காவலர் கொல்லப்பட்டார்,” என்று கியூசான் நகர காவல்துறை மாவட்ட இயக்குனர் ரெமுஸ் மெடினா கூறியதை மேற்கோள் காட்டி சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் … Read more

செஸ் விளையாட்டில் சிறுவனின் விரலை உடைத்த ரோபோ – என்ன நடந்தது?

சமீபத்தில் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்த போட்டியின் போது செஸ் விளையாடும் ரோபோவால் ஏழு வயது சிறுவனின் விரல் உடைந்தது. ஜூலை 19 அன்று மாஸ்கோ செஸ் ஓபன் போட்டியில் இந்த சம்பவம் நடந்தது. ரஷ்யாவின் செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் செர்ஜி ஸ்மாகின், நியூஸ் வீக் படி, இயந்திரம் அதன் செயல்பாட்டை முடிக்க தேவையான நேரத்தைக் காத்திருக்காமல் குழந்தை வேகமாக நகர்த்தும்போது ரோபோ சிறுவனின் விரலை உடைத்ததாக தெரிவித்தார். மைதானத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது … Read more

”நமக்குள்ளும் ஹீரோ உண்டு” – 5-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள டாங்சியாங் என்ற நகரில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 5-வது மாடியில் இருந்து 2 வயது பெண் குழந்தை தவறி விழுந்தது. அப்போது, கீழே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் செல்போனைத் தூக்கி எறிந்து விட்டு குழந்தையைப் பத்திரமாகப் பிடித்துக் காப்பாற்றினார். அந்த இளைஞரின் பெயர் ஷென் டோங் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் படிக்க | Breaking: டெல்லியில் குரங்கம்மை பாதிப்பு! விரைந்து பரவும் நோய்த்தொற்று? Heroes among … Read more

உக்ரைன் ராணுவ வீரர்களுடன் பயிற்சியில் போரிஸ் ஜான்சன்

உக்ரைன் ராணுவ வீரர்களுடன் போரிஸ் ஜான்சன் ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்றார். போரிஸ் பதவி யேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகள் அவரை சுற்ற தொடங்கின. இதில், கரோனா விதிமுறைகளை மீறி பிறந்த நாள் கொண்டாடினார் என்ற குற்றச்சாட்டு சொந்தக் கட்சிக்குள்ளயே எழுப்பப்பட்டது. இதற்காக போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டார். எனினும், அவரை சுற்றிய சர்ச்சைகள் அடங்கவில்லை. ரிஷி … Read more

திவால் நிலையில் பாகிஸ்தான்… அரசு சொத்துக்களை விற்க முடிவு

பாகிஸ்தானை திவால் நிலையில் இருந்து காப்பாற்ற அரசின் சொத்துக்கள் விற்கப்படும் என அந்நாட்டு அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது. பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. மேலும் பணப்பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. நெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் தனது தேசிய சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில், நாட்டில் பண வீக்கம் மக்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டுக் கடன் உச்ச … Read more

இலங்கை அதிபர் மாளிகையிலிருந்து 1000 + கலைப் பொருட்கள் மாயம்

கொழும்பு: இலங்கையில் அதிபர் மாளிகை, பிரதமர் இல்லத்திலிருந்து 1000க்கும் அதிகமான கலை பொருட்கள் மாயமாகி இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். இதையடுத்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சவும் கடந்த வாரம் பதவி விலக நேரிட்டது. முன்னதாக, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை நியமித்த அவர், மாலத்தீவுக்கும், பின்னர் சிங்கப்பூருக்கும் தப்பிச் … Read more

இஸ்ரேல் உளவாளிகளை கைது செய்து விட்டோம்: ஈரான் அதிரடி அறிவிப்பு!

தங்கள் நாட்டில் நுழைந்த இஸ்ரேலின் ‘மொசாட்’ உளவாளிகள் அனைவரையும் கைது செய்து விட்டதாக ஈரான் தெரிவித்து உள்ளது. மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலின் உளவு அமைப்பு ‘மொசாட்’. உலகின் மிகவும் சக்தி வாய்ந்த உளவு அமைப்புகளில் முதன்மையானதாக ‘மொசாட்’ உள்ளது. இந்த உளவு அமைப்பு ஈரான், ஈராக், சிரியா, எகிப்து, லெபனான் உட்பட பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளில் ராணுவ ரகசியங்களை சேகரித்தல், தாக்குதலில் ஈடுபடுதல் உட்பட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் … Read more

உக்ரைனில் துறைமுக தாக்குதலில் தங்களுக்கு தொடர்பில்லை என ரஷியா அறிவிப்பு; துருக்கி தகவல்

இஸ்தான்புல், உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்டுள்ள போரானது இன்றுடன் 5 மாதங்களை எட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி 24ந்தேதி ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது போர் தொடங்கப்பட்டது. ஐ.நா. அமைப்பு, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் கேட்டு கொண்டும் ரஷிய படைகள் பின்வாங்கவில்லை. இது நீண்டகால போராக இருக்க கூடும் என அமெரிக்கா பின்னர் தெரிவித்தது. எனினும், உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்கள், தளவாடங்களை அமெரிக்கா அளித்து வருகிறது. இதனால், இருதரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்து உள்ளன. … Read more

ஈரானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

டெஹ்ரான், பருவநிலை மாற்றம் சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதன்காரணமாக உலகின் பல நாடுகளில் பருவம் தவறிய மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஈரானில் பல ஆண்டுகளாக வறட்சியை சந்தித்து வந்த தெற்கு பராஸ் மாகாணத்தில் பருவ நிலை மாற்றத்தின் விளைவால் நேற்று முன்தினம் திடீரென கனமழை கொட்டித்தீர்த்தது. கரைபுரண்டோடும் வெள்ளம் அந்த மாகாணத்தின் எஸ்தாபன் நகரில் இடைவிடாமல் கொட்டிய கனமழையால் அங்குள்ள நீர்நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு … Read more