இலங்கை அதிபர் கோத்தபயா தப்பியோட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டம் நடத்தி வருபவர்கள், அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதனையடுத்து, அதிபர் கோத்தபயா ராஜபக்சே தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில், கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், எரிபொருள், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. டீசல், பெட்ரோல் வாங்க பல கி.மீ., தூரம் மக்கள் வரிசையாக காத்து கிடந்தனர். இதனையடுத்து அதிபர் மற்றும் … Read more

விசித்திரமான நகரம்: மொபைல் தொலைகாட்சி ரேடியோ மற்றும் பொம்மைகளுக்கும் தடை

இன்றைய உலகில், மொபைலுக்கு தடை, தொலைகாட்சி கிடையாது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? அதிலும் பக்கத்து ஊரில் இந்த வசதிகள் இருக்கும், ஆனால் அடுத்தத் தெருவில் உள்ள உங்கள் வீட்டில் இருந்து மொபைல் பயன்படுத்தக்கூடாது, டிவி இருக்கக்கூடாது என்று சொன்னால் எப்படி இருக்கும்? இது மட்டுமல்ல, உலகில் இந்த ஒரே நகரத்தில் மட்டும், குழந்தைகளின் பொம்மைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறதா? நம்ப முடியாவிட்டாலும் இது நிதர்சனமான உண்மை. மொபைல், டிவி, ரேடியோ … Read more

ரஷ்யாவிலிருந்து கேஸ் இறக்குமதி குறைவு, ஜெர்மனியில் ஹீட்டர்களுக்கு கட்டுப்பாடு

ரஷ்யாவிலிருந்து கேஸ் இறக்குமதி குறைந்ததால் ஜெர்மனியில் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஹீட்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சம் அபார்ட்மெண்ட்களை வாடகைக்கு விட்டுள்ள வனோவியா நிறுவனம், இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஹீட்டர்களின் வெப்ப அளவை 17 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே பராமரிக்க வேண்டும் என்றும், இந்த கட்டுப்பாடுகள் இலையுதிர் காலம் தொடங்கும் செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ளது. ஹீட்டர்களுக்கு 55 சகிவிகிதம் வரை கேஸ் பயன்படுத்தப்படும் நிலையில் … Read more

3 மாதத்தில் ரூ.5.15 லட்சம் கோடியை இழந்த எலான் மஸ்க்

டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்து முதல், அவரது சொத்து மதிப்பு 65 பில்லியன் டாலர் அதாவது 5 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சரிவடைந்துள்ளது. டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி எலான் மஸ்க் அறிவித்தபோது, அவரது கார் நிறுவனமான டெஸ்லாவின் ஒரு பங்கு மதிப்பு 998 அமெரிக்க டாலராக இருந்தது. நேற்று டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதை கைவிடுவதாக மஸ்க் அறிவித்த நிலையில், டெஸ்லாவின் பங்கு மதிப்பு … Read more

இலங்கையில் மீண்டும் போராட்டம்: அதிபர் மாளிகையை முற்றுகையிட குவிந்த மக்கள்

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவை பதவி விலக வலியுறுத்தி கொழும்புவில் உள்ள அவரது இல்லம் அருகே ஏராளமானோர் திரண்டுள்ளனர். அவர்கள் அதிபர் மாளிகைக்குள் உள்ளே நுழைய முற்பட்ட நிலையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்து போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் விரட்டியடித்தனர். இலங்கை 1948-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரைக் கண்டிராத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. மக்கள் புரட்சியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் … Read more

3,352 கி.மீ தூரத்தை 43 நாட்களில் கடந்து மூதாட்டி கின்னஸ் சாதனை

வட மற்றும் தென் அமெரிக்கா பசிபிக் கடற்கரையொட்டிய 3 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளில் கடந்து 72 வயது மூதாட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமைதி கருத்தை நிலைநிறுத்தி மூதாட்டி Lynnea Salvo, சைக்கிள் பயணம் மேற்கொண்டார். 3 ஆயித்து 352 கிலோ மீட்டர் தூர சாகச பயணத்தை மூதாட்டி Lynnea Salvo 43 நாட்களில் கடந்து இறுதியாக கலிபோர்னியாவில் பயணத்தை நிறைவு செய்தார். மூதாட்டின் சைக்கிள் பயணத்தை கின்னஸ் சாதனை புத்தகம் அங்கீகரித்துள்ளது. … Read more

எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்த ட்விட்டர் நிறுவனம்! காரணம் இதான்

உலக பணக்காரர்களில் ஒருவரான  எலான் மஸ்க் சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தை $44 பில்லியனுக்கு வாங்க இருப்பதாக அறிவித்து இருந்தார், இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.  ஆனால் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த முழு விவரங்களை அறிந்த பின்னரே இந்நிறுவனத்தை தான் வாங்கப்போவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று எலான் மஸ்க், $44 பில்லியனுக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முயற்சியை … Read more

அபே, பூட்டோ, கடாஃபி: இந்த நூற்றாண்டின் அரசியல் படுகொலைகள்; ஒரு பார்வை

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நேற்று படுகொலை செய்யப்பட்டார். அவரது அகால மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அபேவின் கொள்கைகள் பிடிக்காததால் அவரை கொலை செய்ததாகக் கூறிய இளைஞர் ஒருவர் கூறியுள்ளார். ஜப்பானில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே இது போன்ற அரசியல் படுகொலைகள் நடந்துள்ளன. 1914 ஆம் ஆண்டு ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாண்டும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது சுட்டுக் கொல்லப்பட்டது தான் முதலாம் உலகப் … Read more

ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து எலான் மஸ்க் விலகல்

போலி கணக்குகள் குறித்த தகவல்களை தராததை அடுத்து 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை 54 புள்ளி 20 டாலர் கொடுத்து வாங்க எலான் மஸ்க் ஒப்புக் கொண்ட நிலையில், பங்குச் சந்தையில், ட்விட்டரின் பங்கு மதிப்பு 7 சதவீதம் வரை சரிந்தன. ட்விட்டரை வாங்கும் முடிவில் இருந்து எலான் மஸ்க் விலகினால் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக … Read more

டுவிட்டரை வாங்கும் முடிவை கைவிட்டார் எலான் மஸ்க்| Dinamalar

வாஷிங்டன்: டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக, டெஸ்லா நிறுவனரும், உலக பணக்காரருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை, ரூ.3.34 லட்சம் கோடிக்கு வாங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மொத்த டுவிட்டர் பயன்பாட்டாளர்களில் 4 சதவீதத்திற்கும் குறைவாகவே போலி கணக்குகள் உள்ளதாக அந்த நிறுவனம் கூறியிருந்தது. இதனையடுத்து, போலி கணக்குகள் குறித்து தகவல் திரட்டுவதற்கு அவகாசம் தேவைப்படுவதாகவும், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் என எலான் … Read more