ஒரே நேரத்தில் 14,299 வீரர், வீராங்கனைகள் குத்துச் சண்டை பயிற்சி.. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நிகழ்வு..!

ஒரே நேரத்தில் 14 ஆயிரத்து 299 வீரர், வீராங்கனைகளை கொண்டு குத்துச் சண்டை பயிற்சி நடத்தி மெக்சிகோ சிட்டி அரசு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. மெக்சிகோ தலைநகரில் நடந்த நிகழ்வில் தேசியக் கொடியின் வர்ணங்களில் உடையணிந்த மக்கள், 30 நிமிடங்கள் பயிற்சி மேற்கொண்டனர். இதற்கு முன் 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகளை கொண்டு ரஷ்யா நிகழ்த்திய சாதனையை தற்போது மெக்சிகோ சிட்டி அரசு மற்றும் உலக குத்துச் சண்டை சம்மேளனம் இணைந்து முறியடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் … Read more

எரிபொருள் பற்றாக்குறை எதிரொலி இலங்கையில் அலுவலகங்கள் மூடல்| Dinamalar

கொழும்பு:பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் அடுத்த வாரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.இங்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உச்சத்தில் உள்ளது.நம் நாட்டில் இருந்து அரிசி, மருந்துகள், மீனவர்களுக்காக டீசல் அனுப்பி உதவப்பட்டு வருகிறது. இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இலங்கையில் தினமும் … Read more

பொது போக்குவரத்து முடங்கியதால் இலங்கையில் அரசு அலுவலகம் பள்ளிகள் 2 வாரம் மூட உத்தரவு

கொழும்பு: இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுப் போக்குவரத்து முடங்கியதால் பள்ளிகள் 2 வாரங்களுக்கு மூடப்படுகிறது. அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்படு கிறது. 1948-ம் ஆண்டு விடுதலைக்கு பிறகு இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்க டாலர் கையிருப்பு குறைந்ததால் கடந்த ஆண்டு இறுதி முதல், உணவுப் பொருட்கள், மருந்துகள், எரிபொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்ய முடியாமல் தவிக்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பல மணி … Read more

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உயிரிழந்த பிரபல சமூக ஆர்வலர்.. ரோமன் ரிதுஷ்னியை நினைவுகூர்ந்து பொதுமக்கள் மரியாதை..!

உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிரான போரில் உயிரிழந்த பிரபல சமூக ஆர்வலர் ரோமன் ரிதுஷ்னியை நினைவு கூர்ந்து தலைநகர் கீவில் உள்ள மெய்டன் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடி மரியாதை செலுத்தினர். உக்ரைன் ஐரோப்பிய யூனியனில் இணைய வேண்டும் என வலியுறுத்தி ரோமன் ரிதுஷ்னி தனது பள்ளிப்பருவத்திலேயே  மெய்டன் சதுக்கத்தில் புரட்சிகரமான போராட்டம் நடத்தி பலரது கவனத்தையும் ஈர்த்தவர். இவர் கடந்த 9-ம் தேதி கார்க்கிவ் மாகாணத்தில் உள்ள இஸியம் நகரத்தில் ரஷ்ய படைகளின் தாக்குதலில் உயிரிழந்தார். Source … Read more

கூகுளுக்கு ரூ.1910 கோடி அபராதம்: மெக்சிகோ நீதிமன்றம் உத்தரவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மெக்சிகோ: அவதுாறு பதிவு வெளியிட்டதற்காக கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 1910 கோடி அபராதம் விதித்து மெக்சிகோ நீதிமன்றம் உத்தரவிட்டது. மெக்சிகோவை சேர்ந்த வழக்கறிஞர், எழுத்தாளரான ரிச்டர் மொராலஸ் மீது போதைப்பொருள் கடத்தல் சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூகுள் 2014ல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இச்செய்தி தன் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், அப்பதிவை நீக்குமாறும் கூகுளுக்கு அவர் கோரிக்கை விடுத்தார். பதிவு நீக்கப்படாததால் 2015ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை … Read more

ஆப்கன் வெங்காயம் ஏற்றுமதி நிறுத்தம்| Dinamalar

காபூல்-தெற்கு ஆசியாவைச் சேர்ந்த ஆப்கனில் இந்தாண்டு வறட்சியால் வேளாண் பொருட்கள் உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. ஆப்கனில், கோடை காலத்தில் வழக்கமாக 1 கிலோ வெங்காயம், 4 ரூபாய் வரை விற்கப்படும். இந்தாண்டு வெங்காய உற்பத்தி குறைந்ததால், 1 கிலோ, 25 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, உள்நாட்டில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த, அதன் ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, வேளாண் மற்றும் கால்நடை கூட்டமைப்பு உறுப்பினர் மிர்வய்ஸ் ஹஜிசாதா தெரிவித்துள்ளார். … Read more

ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோர்டனே : பின்லாந்து சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, தங்கம் வென்றார். இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 24. டோக்கியோ போட்டியில் அசத்திய இவர், சுதந்திரத்துக்குப் பின் ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். ஒலிம்பிக் போட்டி முடிந்து 10 மாதத்துக்குப் பின் மீண்டும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த வாரம் பின்லாந்தில் நடந்த ‘பாவோ நுார்மி … Read more

நிலவில் தண்ணீர்; சீனா உறுதி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்-நிலவில் தண்ணீர் வளம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். நம் அண்டை நாடான சீனா, 2020ல் ‘சாங்கி – 5’ என்ற ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இந்த விண்கலம் நிலவில் இதுவரை யாரும் ஆராய்ந்திராத ‘புயல் கடல்’ என்ற பகுதியில் தரையிறங்கியது. அத்துடன், அங்கிருந்து 1,731 கிராம் மண் மற்றும் கற்களை சேகரித்து பூமிக்கு திரும்பியது. இந்த மண் மாதிரியை சீன விஞ்ஞானிகள் ஆராய்ச்சி … Read more

பாலம் கட்ட சீனா உதவியா: மறுக்கிறது வங்கதேசம்!| Dinamalar

டாக்கா-‘எங்கள் நாட்டில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட பாலம், சீனாவின் சாலை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவில்லை; அதன் நிதி உதவியும் பெறப்படவில்லை’ என, நம் அண்டை நாடான வங்கதேசம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் அந்த நாட்டின் தென் மேற்கே உள்ள, 19 மாவட்டங்களை, நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் பிரமாண்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் வரும், 25ல் திறந்து வைக்கப்பட உள்ளது.இதற்கிடையே, பல நாடுகளை இணைக்கும் வகையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாலை திட்டத்தை சீனா செயல்படுத்தி … Read more

குருத்வாராவில் தாக்குதல் ஆப்கனில் இருவர் பலி: மத்திய அரசு கண்டனம்| Dinamalar

காபூல்:ஆப்கனில் குருத்வாராவில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். தெற்கு ஆசிய நாடான ஆப்கன் தலைநகர் காபூலில், சீக்கியர்களின் வழிபாட்டு தலமான ‘கர்தே பர்வன் குருத்வாரா’ உள்ளது. குண்டு வெடிப்புஇங்கு நேற்று காலை திடீரென அடுத்தடுத்து இரண்டு பயங்கரமான குண்டு வெடிப்பு சத்தம் கேட்டது. இதைத் தொடர்ந்து விரைந்து வந்த தலிபான் ராணுவத்தினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கிச் சண்டையில், பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். படுகாயம் அடைந்த ஏழு பேர் மருத்துவமனையில் … Read more