புர்கினா பாசோ நாட்டில் 34 பேர் சுட்டுக் கொலை| Dinamalar
ஒகடோகோ : புர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், அப்பாவி மக்கள், 34 பேர் கொல்லப்பட்டனர். மேற்கு ஆப்ரிக்க நாடான புர்கினா பாசோவில், சமீபகாலமாக அல் – குவைதா, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர் அப்பாவி விவசாயிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவது அதிகரித்து உள்ளது. பயங்கரவாதிகள், விவசாயிகளை துரத்திவிட்டு, அவர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கின்றனர். இதையடுத்து, இந்தாண்டு ஜனவரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை நீக்கி விட்டு, ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. எனினும், பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் குறையவில்லை. … Read more