இங்கிலாந்தில் ரூ.395 கோடி மதிப்பிலான பிரமாண்ட சார்ஜிங் ஸ்டேஷன் திறப்பு..!

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் நகரில், நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான மின்சார கார்களை சார்ஜ் செய்யக்கூடிய பிரமாண்ட சார்ஜிங் ஸ்டேஷன் திறக்கப்பட்டுள்ளது. மக்களிடையே மின்சார வாகன பயன்பாட்டை மேலும் ஊக்குவிக்கும் விதமாக, ஒரே சமயத்தில் 42 கார்களை சார்ஜ் செய்யும் வகையில், 395 கோடி ரூபாய் மதிப்பில் Energy Superhub Oxford என்ற பிரமாண்ட சார்ஜிங் ஸ்டேஷன் திறக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சாரத்தை சேமிப்பதற்காக  லித்தியம் மற்றும் வனடியத்தால் உருவாக்கப்பட்ட 50-megawatt ஹைபிரிட் பேட்டரியும் இதில் நிறுவப்பட்டுள்ளது.  Source link

“நான் பார்த்த பயங்கரமான வெள்ளம்” – சிட்னியிலிருந்து பாதுகாப்புக்காக வெளியேற்றப்படும் மக்கள்

சிட்னி: மிக கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வரலாற்றில் இல்லாத இயற்கைப் பேரிடருக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் உள்ளாகியிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் தலைநகர் சிட்னியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ந்து வருகிறது. இதனால் நகரின் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளப் பெருக்கு காரணமாக சுமார் 50,000 பேர் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். சிட்னியின் தென் பகுதியில் உள்ள வாரகம்பா அணை நிரம்பி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இப்பகுதியில் சுமார் 200 மிமீ … Read more

இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து..!

பர்மிங்காம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட போட்டியில், 378 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து, ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 2க்கு 2என சமனில் முடிவடைந்துள்ளது. Source link

Aliens Search: ஏலியன்களை தேட யூரோபாவில் களமிறங்கும் நீச்சல் ரோபோக்கள்

ஏலியன்களைத் தேடும் முயற்சிகள் அறிவியல் உலகில் முக்கியமான ஒன்றாக மாறிவிட்ட்ட காலம் இது. அதுமட்டுமல்லாமல், வேற்றுகிரகவாசிகளைத் தேடுவது மனித குலத்தின் விருப்பமான பொழுதுபோக்காகவும் மாறிவிட்டது. பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு காரணம், நமது கிரகத்தின் பெரும்பகுதியில் தண்ணீர் இருப்பதுதான். எனவேதான், பிற கிரகங்களில் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை ஆராயும்போது நீர் இருக்கிறதா என்பதை தேடுவது முக்கியமான விஷயமாக இருக்கிறது. அதனால்தான், பிற கிரகங்களில் உயிரினங்கள் அதாவது குறிப்பாக வேற்றுகிரகவாசிகள் (ஏலியன்கள்) இருக்கிறார்களா என்று தேடும் போதும், ​​தண்ணீர் இருப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ச்சியாளர்கள் முக்கியமானதாக … Read more

மர்மலாடா சிகரத்தில் பனிப்பாறை சரிந்து விபத்து – 7 பேர் பலி..!

இத்தாலி ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிப்பாறை சரிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்த நிலையில் மாயமான 13 மலையேற்ற வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மர்மலாடா சிகரத்தில் பனிப்பாறை இன்னும் நிலையாக இல்லாத சூழலில் மாயமானவர்களின் செல்ஃபோன் சிக்னலை வைத்து டிரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். விபத்து நிகழ்ந்து 36 மணி நேரமாகியும் மாயமானவர்களை மீட்கமுடியாமல் இருப்பதால் அவர்களது நிலை குறித்த கவலை அதிகரித்துள்ளது.  Source link

ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கோனி தீவு பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டியின் ஆடவர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜோய் செஸ்ட்நட் வெற்றி பெற்றார். அவர் 10 நிமிடங்களில் 63 ஹாட் டாக் பன்கள் சாப்பிட்டு முதலிடம் பிடித்தார். மகளிர் பிரிவில் மிக்கு சூடோ என்பவர் 10 நிமிடங்களில் 40 ஹாட் டாக் பன்கள் சாப்பிட்டு சாம்பியன் பட்டம் வென்றார். Source link

பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்.. வீட்டு சிறையில் இருந்து ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் விடுதலை.!

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் பால் ஹக்கிசை இத்தாலி நீதிமன்றம் விடுவித்துள்ளது. கடந்த மாதம் 19ம் தேதி இத்தாலியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்க சென்ற அவர், இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி இரண்டு நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டபட்டதை அடுத்து நட்சத்திர விடுதியிலேயே சிறை வைக்கப்பட்டார்.  Source link

“என்னால் இலங்கையின் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்ற முடியும்” – ரணில் நம்பிக்கை

கொழும்பு: “என்னால் இலங்கையின் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்ற முடியும்” என்று அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் அவர் அளித்த நேர்காணலில், “போராட்டங்கள் நடக்கும்போது இலங்கையில் இரண்டு நாட்கள் அரசு செயல்பட முடியாமல் போனது. உண்மையில், அப்போது அரசே இல்லை. எதுவுமே எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாமல் போனது. நான் பதவியேற்றபோது நிலைமை மிகவும் மோசமாக இருந்ததை நன்கு உணர்ந்தேன். நான் வெற்றி பெறுவேனா என்று உறுதியாகத் தெரியாது. ஆனால், … Read more

நெருங்கும் பக்ரீத் பண்டிகை – வறுமை அதிகரித்ததால் ஆப்கானிஸ்தானில் கால்நடைகளை வாங்க முடியாமல் தவிக்கும் மக்கள்..!

ஆப்கானிஸ்தானில் வறுமை அதிகரித்துள்ளதால் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கால்நடைகளை வாங்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இஸ்லாமியர்களின் இரண்டு முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்கள் ஆப்கனில் வருகின்ற 9ம் தேதி தொடங்குகிறது. வழக்கமாக பண்டிகையையொட்டி கால்நடை விற்பனை அதிகரிக்கும் நிலையில், தற்போது மக்கள் பலர் வறுமையால் வாடுவதால் சந்தைகளில் கால்நடைகள் விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். Source link

உலகின் வாழத்தகுந்த சிறந்த நகரங்களின் பட்டியலில் சென்னை எத்தனையாவது இடம் தெரியுமா?

எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் (EIU) உலகின் வாழக்கூடிய சிறந்த நகரங்களின் வருடாந்திர தரவரிசையை வெளியிட்டுள்ளது. மேலும் 2022 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வாழ்வாதாரக் குறியீடு முந்தைய ஆண்டிற்கான உலகளாவிய வாழ்வாதாரக் குறியீட்டிலிருந்து சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுள்ளது.  உள்கட்டமைப்பு, பசுமை திறந்த வெளி, அரசியல் ஸ்திரத்தன்மை, குற்ற விகிதங்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் 173 நகரங்களை EIU வரிசைப்படுத்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் 10 உலகின் வாழக்கூடிய சிறந்த நகரங்களின் … Read more