கிழக்கு உக்ரைனில் பெரும்பகுதியை கைப்பற்றிய ரஷ்யப் படைகள்.. ஆயிரக்கணக்கானோர் சிக்கி தவிப்பு..!

கிழக்கு உக்ரைனின் சிவிரோடொனெட்ஸ்க் நகரத்தின் பெரும்பகுதியை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கித் தவித்து வருவதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய ஐ.நா.செய்தித் தொடர்பாளர், டான்பாஸை கைப்பற்ற சிவிரோடொனெட்ஸ்கில் தொடர் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், அனைத்து பாலங்களையும் தகர்த்து அந்நகரை சுற்றி வளைத்துள்ளதாகவும், அங்குள்ள அசோட் தொழிற்சாலையில் தஞ்சமடைந்துள்ள 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்தார். Source link

'தலிபான் ஆட்சியில் ஒரு பத்திரிகையாளரின் நிலைமை' – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்த பின்னர் ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படாததால் அங்குள்ள மக்கள் வறுமையில் சிக்கியுள்ளனர். அதற்கு சாட்சியாக இணையத்தில் வெளியாகியுள்ளது ஒரு புகைப்படம். அதில், ஆப்கன் தொலைக்காட்சிகளில் செய்தியாளராக, செய்தி வாசிப்பாளராக இருந்த நபர் வறுமையின் காரணமாக தற்போது தெருவோரத்தில் உணவுப் பண்டங்களை விற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ள நிலையில், அன்றாடம் அதன் கோர முகத்தைக் காண்பதாகக் கூறுகின்றனர் அந்நாட்டு மக்கள். சாலைகளில் பொதுமக்கள் கொலை செய்யப்படுகின்றனர். தலிபான்களின் … Read more

பெருவில் வரலாறு காணாத அளவில் வெப்பநிலை… மைனஸ் 21 டிகிரி செல்சியசாகப் பதிவு!

தென் அமெரிக்க நாடான பெருவில் வரலாறு காணாத அளவிற்கு வெப்பநிலை மைனஸ் 21 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. பல பகுதிகளில் கடுமையான பனிப் பொழிவு நிலவுகிறது. பலமாக வீசும் குளிர் காற்றால் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பூஜ்யத்துக்கும் குறைவான அளவிலான வெப்பநிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடும் குளிர் நிலவி வருவதால், ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இது போன்ற குளிர் காற்றுடன் கூடிய … Read more

கொரோனா பரவலுக்கு இடையே புதிய நோய்.. பரிசோதனைகளை தீவிரப்படுத்த உத்தரவு..!

வடகொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது கூடுதலாக குடல் தொற்று நோய்யும் பரவத் தொடங்கி உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஹெஜு நகரில் உள்ள மக்கள் கடுமையான குடல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. கடுமையான குடல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஹேஜுவு-க்கு மருந்துகளை அனுப்பி வைத்து, பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி தொற்று நோய் பரிசோதனைகளை தீவிரப்படுத்த அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் வலியுறுத்தியுள்ளார் Source … Read more

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியைப் பிடிக்க வட்டமிட்ட 8 அமெரிக்க ஹெலிகாப்டர்கள்.. துப்பாக்கி சண்டைக்குப் பின் தீவிரவாதி கைது!

சிரியாவின் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவனான ஹனி அகமது அல்குர்தியைப் பிடிக்க எட்டு அமெரிக்க ஹெலிகாப்டர்கள் வீட்டின் மேல் பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரமாக வட்டமிட்டன. அமெரிக்காவால் சிரியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ் தலைவன் வெடிகுண்டுகள் தயாரிப்பதில் நிபுணன் என்று கூறப்படுகிறது. வடமேற்கு சிரியாவின் ஒரு தனி வீட்டில் அவன் இருப்பதை அறிந்த அமெரிக்க விமானப்படை ஹெலிகாப்டர்கள் அந்த வீட்டின் மேல் தாழப்பறந்து முற்றுகையிட்டன. இரண்டு ஹெலிகாப்டர்கள் சில நிமிடங்கள் மட்டும் தரையைத் தொட்டதாகவும் … Read more

ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு சப்ளை செய்யும் குழாயில் வெடிவிபத்து… விண்ணை முட்டும் அளவுக்கு வெளியேறிய தீ..!

ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு சப்ளை செய்யும் குழாயில் ஏற்பட்ட வெடி விபத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு தீ வெளியேறியது. Urengoyskoye பகுதியில் உள்ள எரிவாயு குழாயில் வெடி விபத்து ஏற்பட்டதாக கேஸ்ப்ரோம் நிறுவனம் தெரிவித்துள்ளது. தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். Source link

ஹிந்து சகோதரிகள் பலாத்காரம்: பாக்., முஸ்லிம்கள் அட்டூழியம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லாகூர் : பாகிஸ்தானில், ஹிந்து மதத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் பலாத்காரம் செய்யப்பட்டனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்நகரில் வசிக்கும் ஹிந்து மதத்தைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய சகோதரிகள், காலைக்கடன் கழிக்க வீட்டுக்கு அருகில் உள்ள வயல்வெளிக்கு சென்றனர். அப்போது, எதிரில் வந்த இருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி இருவரையும் தூக்கிச் சென்று, பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடினர். சிறுமியரின் … Read more

Epidemic in North Korea: வடகொரியாவை வாட்டி வதைக்கும் மற்றொரு வைரஸ் தொற்று

சியோல்: கோவிட் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வட கொரியாவில் மற்றொரு நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.  நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ள ஹெஜு நகரில் ஒரு தீவிர குடல் தொற்றுநோய் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நோய் பரவல் தொடர்பாக வியாழக்கிழமையன்று வட கொரியா தெரிவித்தது. தற்போதைய கோவிட்-19 வெடிப்புக்கு கூடுதலாக மற்றொரு தொற்று நோய் வெடித்துள்ளதாக அறிவித்த வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன் புதிய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது தனிப்பட்ட மருந்துகளை நன்கொடையாக வழங்கியதாகக் கூறினார். புதிய தொற்றுநோய் எவ்வளவு தீவிரமானது … Read more

2 படகுகளில் இருந்து 1347 கிலோ கோகைன் போதைப்பொருள் பறிமுதல்

மெக்சிகோ நாட்டில் Oaxaca மாகாணத்தில் 2 படகுகளில் இருந்து ஆயிரத்து 347 கிலோ கோகைன் போதைப்பொருளை அந்நாட்டின் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். Huatulco  கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 படகுகளை கடற்படையினர் சோதனையிட்ட போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடற்படையினர் பின்தொடர்வதை அறிந்த போதை கும்பல் தங்கள் வாகனத்தை கப்பலில் ஏற்றி Chacahua ஏரி வழியாக சென்றது. இதனை அடுத்து கடற்படையினர் ஹெலிகாப்டரில் சென்ற போது அந்த கும்பல் வாகனத்தை அப்படியே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டது. … Read more

அமெரிக்க ராணுவ உயர் பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் பரிந்துரை| Dinamalar

வாஷிங்டன்:அமெரிக்க ராணுவ தலைமையகமான ‘பென்டகனில்’ உள்ள உயர் பதவி ஒன்றுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ராதா அய்யங்கார் பிளம்ப்பை, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ராதா அய்யங்கார் பிளம்ப். இவர், அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பல்கலையில், பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், பிரின்ஸ்டன் பல்கலையில், பொருளாதாரத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டமும் பெற்றார்.பின் லண்டன் பொருளாதார பள்ளியில் துணை பேராசிரியராக பணியாற்றினார். அமெரிக்க அரசு பணியில் சேருவதற்கு முன், ‘கூகுள் மற்றும் பேஸ்புக்’ நிறுவனங்களின் கொள்கைப் … Read more