வெடித்து சிதறிய எரிமலை… 2.5 கி.மீ. தொலைவுக்கு தீப்பிழம்பை கக்கியதால் பொதுமக்கள் பீதி!

தெற்கு ஜப்பானின் ககோஷிமா பகுதியில் உள்ள சகுராஜிமா எரிமலையில் நேற்று நள்ளிரவு திடீரென வெடித்தது. இதில் பாறைகளும் வெடித்து சிதறி தீப்பிழம்புகள் வெளியேறி வருகின்றன. பெரிய எரிமலையில் இருந்து சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு அது தீப்பிழம்புகளை கக்கி வருகிறது. அதேசமயம் இதனால் எழும் புகை சுமார் 250 மீட்டர் உயரத்திற்கு எட்டியுள்ளது. இதன் காரணமாக, சகுராஜிமாவின் எரிமலை பள்ளத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரிமுரா மற்றும் ஃபுருசாடோ நகரங்களின் குடியிருப்புவாசிகள் மிகுந்த … Read more

ஓஸ்லோவில், ஃப்ராக்நெர்கிலென் விரிகுடாவில் சிறிய படகுகளை நீருக்குள் கவிழ்த்த பனிக்கடல் யானை

நார்வே தலைநகர் ஓஸ்லோவில் உள்ள ஃப்ராக்நெர்கிலென் விரிகுடா நார்டிக் கடற்கரை அருகே சுற்றுலாப்பயணிகள் படகுசவாரி மேற்கொண்டிருந்த பகுதியில் பனிக்கடல் யானை ஒன்று நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய படகுகளை நீருக்குள் கவிழ்த்தது. இதனால் சுற்றுலாப்பயணிகள் பலரும் அந்த பனிக்கடல் யானை தங்களது படகுகளையும் கவிழ்த்துவிடுமோ என அச்சத்திற்குள்ளாகினர். பொதுவாகவே படகுகளை கவிழ்ப்பதற்கு பெயர்போன பனிக்கடல் யானைகள் இதற்கு முன்பு வரை டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் தென்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது நார்வேயில் சுமார் 700 கிலோ … Read more

ஆன்லைன் 'லைவ்'வில் முன்னாள் மனைவியை தீ வைத்து எரித்துக்கொன்ற நபர் – தூக்கு தண்டனை நிறைவேற்றம்

பீஜிங், சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்தவர் லமு. இவர் சீனாவின் உள்ள சமூகவலைதள செயலியான டுவ்யுன் என்ற செயலில் மிகவும் பிரபலமானவர். டிக்டாக் போன்ற அம்சங்களை கொண்ட டுவ்யுன் செயலியில் லமு பல்வேறு விதமான வீடியோக்களை வெளியிட்டு லமு பிரபலமடைந்தார். லமுவின் கணவர் தங் லு. இவரும் டுவ்யுன் செயலில் பிரபலமான நபராக இருந்து வந்தார். 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவந்த கணவன் மனைவி இடையே 2020-ம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. லுமுவை அவரது கணவர் … Read more

உலகின் உயரமான கட்டடத்தை அமைக்க சவுதி அரேபிய அரசு திட்டம்.!

ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உலகின் உயரமான கட்டடத்தை அமைக்க சவுதி அரேபிய அரசு திட்டமிட்டுள்ளது. சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ஜீரோ கார்பன் நகரம் கனவுத் திட்டத்தில், தபூக் மாகாணத்தில் அமைந்துள்ள நியோம் என்ற இடத்தில் இரு கட்டடங்கள் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆயிரத்து 600 அடி உயரத்தில், 75 மைல் தூரத்திற்கு இணையாக இரு கட்டடங்களும் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய உலகின் பெரிய கட்டடமான புர்ஜ் … Read more

கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவியுடன் எலான் மாஸ்க் தொடர்பில் உள்ளாரா…?

வாஷிங்டன் உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பவரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க்கிற்கு தற்போது 50 வயது ஆகிறது. இவர் கடந்த 2000-ம் ஆண்டு ஜஸ்டின் வில்சன்என்பவரை திருமணம் செய்துகொண்டார். 8 ஆண்டுகள் நீடித்த இவர்களது உறவு கடந்த 2008-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு டலுலா ரிலே என்ற நடிகையை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார் எலான் மஸ்க். கடந்த 2012-ம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை … Read more

மின்சார வாகனங்களுக்காக டிஜிட்டல் வரைபடத்துக்கு தயாராகி வரும் துபாய் நகரம்.!

மின்சார வாகனங்களுக்காக துபாய் நகரம் டிஜிட்டல் வரைபடத்துக்கு தயாராகி வருகிறது. இதனால் முதல் ஆளில்லாத டாக்ஸிக்கான வழிபிறக்க உள்ளது. இரண்டு செவரலட் போல்ட்டின் மின்சார வாகனங்கள் சென்சர் மற்றும் கேமராக்களழுடன் அடுத்த ஆண்டில் அறிமுகமாக உள்ளன. முதல் முறையாக குரூஸ் நிறுவனம் அமெரிக்காவை விட்டு வெளிநாட்டில் துபாயில் சர்வதேச ரோபோ டாக்ஸி சேவையை தொடங்க ஒப்புதல் அளித்துள்ளது. Source link

லாஸ் ஏஞ்சல்சில் பூங்காவில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி; 5 பேர் காயம்

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவில் துப்பாக்கி சூடு கலாசாரம் பெருகி வரும் சூழலில் அதற்கு எதிரான நடவடிக்கையை எடுக்க அதிபர் பைடன் தலைமையிலான அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெக் பூங்கா பகுதியில் நடந்து வந்த கார் கண்காட்சி ஒன்றில் மக்கள் அதிக அளவில் கூடியிருந்தனர். இந்த சூழலில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி லாஸ் ஏஞ்சல்ஸ் நகர போலீசார் கூறும்போது, லாஸ் ஏஞ்சல்சின் சான் பெட்ரோ … Read more

கலிபோர்னியாவை வதைக்கும் காட்டுத் தீ: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத் தீ வேகமாக பரவி வருவதால் அங்கு 6,000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். கலிபோர்னியாவில் யோசெமிட்டி தேசிய பூங்காவிற்கு அருகே ஞாயிற்றுக்கிழமை முதல் கட்டுப்பாட்டை மீறி காட்டுத் தீ எரிந்து வருகிறது. இது இந்த ஆண்டில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட மிகப் பெரிய காட்டுத் தீயாக மாறி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைவரை காட்டுத் தீயானது 22 சதுர மைல்களுக்கு (56 சதுர. கிமீ) காட்டை எரித்துவிட்டது. எந்த கட்டுப்பாடும் இல்லாமல் தீ எரிந்து வருகிறது. மேலும் … Read more

போர் குற்றம்; இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய புகார்

சிங்கப்பூர், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் நடத்திய தீவிர போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 9ந்தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்தனர். இதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். எனினும், போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி விட்டார். அவர் எங்கிருக்கிறார் என … Read more

சிங்கப்பூருக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்த இந்தியா.!

சிங்கப்பூருக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டின் 6 மாதங்களில் 2 லட்சத்து 19 ஆயிரம் இந்தியர்கள் சிங்கப்பூர் வந்துள்ளதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தோனேஷியா முதலிடத்தையும், மலேசியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து 56 சதவீதத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் சிங்கப்பூருக்கு சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link