அதிபர் ஜோ பைடனின் மனைவி, மகள் உட்பட மேலும் 25 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை.!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி, மகள் உட்பட மேலும் 25 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து விரிவடைவதன் எதிரொலியாக, ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் மேலும் 25 அமெரிக்கர்கள் சேர்க்கப்படுவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.   Source link

நேபாளத்தில் பானி பூரி விற்பனைக்கு தடை; காரணம் என்ன தெரியுமா

நேபாளத்தின் காட்மண்டுவில் பானி பூரி விற்பனையை தடை செய்ய மாநாகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை முடிவு செய்தனர். பானி பூரியில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் காலரா பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது. நேபாளத்தின் சுகாதாரம் மற்றும் மக்கள்தொகை அமைச்சகம் இது குறித்து கூறுகையில், காத்மாண்டு பள்ளத்தாக்கில் புதிதாக மேலும் ஏழு பேர் காலரா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. காத்மாண்டு பெருநகரத்திலும், சந்திரகிரி நகராட்சி மற்றும் புத்தனில்கந்தா நகராட்சியிலும் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக, சுகாதார அமைச்சகத்தின், தொற்றுநோயியல் மற்றும் நோய் … Read more

கொளுத்தும் கோடையில் மின் தட்டுப்பாட்டால் தவிக்கும் ஜப்பான்: விளக்கை அணைத்து ஒத்துழைப்பு அளித்த மக்கள்

டோக்கியோ: ஜப்பானில் கொளுத்தும் கோடை காரணமாக அனல் காற்று வீசி வரும் நிலையில் இதுவரை இல்லாத அளவு மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விளக்குகளை அணைக்குமாறு ஜப்பான் அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று மக்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். ஜப்பானில் தற்போது மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கியிருக்கிறது. ஆனால் கோடை தொடக்கத்திலேயே இதுவரை இல்லாத வகையில் வெப்பம் அதிகரித்துள்ளது. கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கே வெயில் வாட்டி வதைக்கிறது. கடந்த நான்கு நாட்களாகவே அங்கு மிகக் … Read more

பானி பூரி தண்ணீரால் காலரா – பானி பூரி விற்க அதிரடி தடை!

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் பானி பூரியில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் காலரா பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, பானிபூரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நேபாள சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் 7 பேருக்கு காலரா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இது தவிர காத்மாண்டு நகரில் 5 பேருக்கும், சந்திரகிரி, புத்தனில்காந்த பகுதியில் தலா ஒருவருக்கு காலரா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தற்போது நேபாளம் முழுவதும் காலரா … Read more

உலகின் அழகற்ற தோற்றம் கொண்ட நாய்களுக்கான போட்டியில் பட்டத்தை தட்டிச்சென்ற மிஸ்டர் ஹேப்பி பேஸ் நாய்..!

அமெரிக்காவில் நடைபெற்ற, உலகின் அழகற்ற தோற்றம் கொண்ட நாய்களுக்கான போட்டியில் மிஸ்டர் ஹேப்பி பேஸ் என்று பெயரிடப்பட்டிருந்த நாய் ஒன்று பட்டத்தை தட்டிச்சென்றது. இந்த வித்தியாசமான போட்டியில், விதவிதமான நாய்கள் பங்கேற்றன. அழகற்ற தோற்றம் கொண்டிருந்தாலும் அவை பராமரிப்பாளர்களின் பாசத்தை பெற்றிருந்தன. Source link

ரஷ்ய தொழிலதிபரின் சூப்பர் சொகுசு படகை சூப்பர் சொகுசு படகை சிறைப்பிடித்த அமெரிக்கா..!

ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான சூப்பர் சொகுசு படகை அமெரிக்கா சிறைப்பிடித்துள்ளது. கடந்த மாதம் மெக்சிகோவில் இருந்து ஃபிஜி நாட்டிற்கு வந்த 350 அடி நீளமுடைய அந்த சொகுசு படகு அமெரிக்க அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு லவுடோவா துறைமுகத்தில் சிறைப்பிடிக்கப்பட்டது. பின்னர் அரசால் அதனை பராமரிக்க இயலாது என்பதால் அதனை அனுப்பிவிட வேண்டும் என அந்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஹவாய் வழியாக அமெரிக்காவிற்கு கொண்டுவரப்பட்ட அந்த படகு தற்போது சான்டியாகோ துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் … Read more

46 பேர் உயிரிழப்புக்கு அமெரிக்க அதிபர்தான் காரணம் – டெக்சாஸ் ஆளுநர்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆள் அரவமற்ற இடத்தில் கண்டெய்னர் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதை திறந்து பார்த்தபோது 50-க்கும் மேற்பட்டோர் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள் கண்டெய்னரில் இருந்தவர்களை பரிசோதித்ததில் 46 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். மேலும் மயக்கமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 4 குழந்தைகள் உள்ளிட்ட 16 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர … Read more

அது நரகம் போல் இருந்தது – உக்ரைன் ஷாப்பிங் மால் மீது ரஷ்யா தாக்குதல்: 16 பேர் பலி

கிரெமென்சுக்: உக்ரைனில் ஷாப்பிங் மால் ஒன்றில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் 16 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். உக்ரைனில் ரஷ்யா மூன்று மாதங்களுக்கு மேலாக போர் நடத்தி வருகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பு, பொருளாதாரத் தடைகள் என அனைத்தையும் மீறி உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனின் கிரெமென்சுக் நகரில் திங்கள்கிழமையன்று பரப்பரப்பான இயங்கிக் கொண்டிருந்த ஷாப்பிங் மால் மீது ரஷ்ய படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலின்போது … Read more

ஜூலை 10 வரை பள்ளிகள் மூடல் – மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், வரும் ஜூலை மாதம் 10 ஆம் தேதி வரை, பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்டை நாடான இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையை பெரிதும் நம்பி உள்ள இலங்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய அளவில் வருவாய் இல்லை. இதன் காரணமாக, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் கேஸ் … Read more

உலக அளவில் கடந்த புதன்கிழமை நிலவரப்படி 3,400-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை பாதிப்பு.!

உலக அளவில் கடந்த புதன்கிழமை நிலவரப்படி 3 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிப்புக்குள்ளானவர்களில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் கூறியுள்ளது. Source link