பாகிஸ்தானில் இரவு 10 மணிக்கு மேல் திருமண நிகழ்ச்சிக்கு தடை: மின் பற்றாக்குறையை சமாளிக்க புதிய நடவடிக்கை

இஸ்லாமாபாத்: பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தான் நிலவும் மின்பற்றாக்குறையை சமாளிக்க, இரவு 10 மணிக்கு மேல் திருமண நிகழ்ச்சிகள் நடத்த தடைவிதித்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான மின்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. மின்பற்றாக்குறை நாட்டின் பொருளாதாரத்தை பாதித்துள்ள நிலையில் மின்சாரத்தை சேமிக்கவும், மின் பயன்பாட்டை குறைக்கவும், சனிக்கிழமையும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிகப்படியான மின்சார பயன்பாட்டை குறைக்கும் வகையில், தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரவு 10 மணிக்கு மேல் திருமணநிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. … Read more

இந்தியா – எமிரேட்ஸ் இடையே தொழில்நுட்பத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே தொழில்துறை மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முதலீடுகள், தொழில்நுட்ப பரிமாற்றம், தொழில் நிறுவனங்களில் முக்கிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இரு நாடுகளின் தொழில்துறைகளை வலுப்படுத்தி மேம்படுத்துவது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இது வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் உதவும். இந்த ஒப்பந்தம் அமலாகும் போது, பரஸ்பர ஒத்துழைப்புள்ள … Read more

ரஷ்யாவை விட்டு வெளியேறுவதாக ஐபிஎம் அறிவிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த கணினி நிறுவனம் ஐபிஎம் ரஷ்யாவில் தனது தொழிலைவிட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து ரஷ்யாவில் மார்ச் முதல் தனது செயல்பாட்டை நிறுத்தி வைத்திருந்தது. அதேநேரத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கி வந்தது. இந்நிலையில் ஐபிஎம் தலைமைச் செயல் அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா விடுத்துள்ள செய்தியில், ரஷ்யாவில் தங்கள் செயல்பாட்டை முடித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். போரால் நிலையற்ற சூழல் நீடிப்பதால் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.  Source link

புற்றுநோயை 100% குணப்படுத்தும் அரிய மருந்து – அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் வரலாற்று சாதனை

மனிதர்களை தாக்கும் நோய்களில் குணப்படுத்தவே முடியாத முக்கிய நோய்களில் ஒன்றாக உள்ளது  புற்றுநோய். ரத்த புற்று, எலும்பு புற்று, நுரையீரல் புற்று, குடல், கல்லீரல் என இதில் பல்வேறு வகைகள் உள்ளன. இவை நமது உடலின் எந்த பகுதியையும் தாக்கும் அபாயம் உள்ளது. புற்றுநோய் பாதிப்பை விட அது மேலும் பரவாமல் இருக்க மெற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் மிகவும் வலி மிகுந்தவை. இதற்காக தற்போதுவரை கீமோதெரபி எனும் சிகிச்சை முறை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  புற்றுநோயை குணப்படுத்தும் … Read more

தொழுவத்தில் இருந்து தப்பித்து கட்டுக்கடங்காமல் நெடுஞ்சாலையில் ஓடிய மாடு : குதிரையில் சென்று பிடித்த மீட்புக்குழு

அமெரிக்காவின் ஓக்லஹாமா நகரத்தில் தொழுவத்தில் இருந்து தப்பித்த மாடு ஒன்று நெடுஞ்சாலை வழியாக ஓட்டம் பிடித்தது. ஓக்லஹாமா – பென்சில்வேனியா நெடுஞ்சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். அந்த சாலை வழியே வாகனங்களுக்கு மத்தியில் கட்டுக்கடங்காமல் அந்த மாடு வேகமாக ஓடிக்கொண்டே இருந்தது. தகவல் கிடைத்ததன் பேரில் குதிரையில் சென்ற மீட்புக்குழுவினர் மாட்டை தொடர்ந்து துரத்திச்சென்றனர். ஒரு கட்டத்தில் பென்சில்வேனியா அருகே அந்த மாடு பிடிபட்டது. வழக்கத்தை விட அது சவாலான பணியாக இருந்ததாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். … Read more

முழுமையாக மாயமான புற்றுநோய் – புதிய மருந்து பரிசோதனை முடிவால் ஆச்சரியத்தில் மருத்துவர்கள்

நியூயார்க்: மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தோஸ்டார்லிமாப் எனும் புதிய மருந்தை தொடர்ந்து ஆறு மாதம் எடுத்துக் கொண்ட பிறகு முற்றிலுமாக குணமடைந்த நிகழ்வு மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கின் மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டரில் நடத்தப்பட்ட பரிசோதனையில்தான் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன. ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டரில் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு தோஸ்டார்லிமாப் மருந்து தொடர்ந்து ஆறு மாதம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் முடிவில் புற்றுநோய் முழுவதுமாக குணமானது தெரிய வந்திருக்கிறது. … Read more

புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் மருந்து: மருத்துவ வரலாற்றில் புதிய மைல்கல்!

மருத்துவ உலகில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி விஞ்ஞானிகள், மருத்துவர்கள் சாதனை நிகழ்த்தி வருகின்றனர். அந்த வகையில், புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் மருந்து சோதனை அடிப்படையில் அமெரிக்காவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இதனை வரலாற்றில் முதன்முறை எனவும், மருத்துவ வரலாற்றில் புதிய மைல்கல் எனவும் மருத்துவ உலகம் கொண்டாடி வருகிறது. அமெரிக்காவின் மேன்ஹாட்டனில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையம் மற்றும் … Read more

ஆஸ்திரேலியாவில் இருந்து 3 ராக்கெட்டுகளை ஏவுகிறது நாசா

ஆஸ்திரேலியாவின் தனியார் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து  இம்மாதம் 26 தேதியும், ஜீலை மாதம் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 3 ராக்கெட்டுகளை அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் விண்ணில் செலுத்த உள்ளது. சூரிய இயற்பியல், வானியல் இயற்பியல், கிரக அறிவியல் போன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இந்த ராக்கெட்டுகளை நாசா விண்ணில் செலுத்துகிறது. ஆஸ்திரேலியாவில் நேரடியாக நாசா மேற்கொள்ளும் இந்த அற்புதமான திட்டம், ஒவ்வொரு ஆஸ்திரேலிய குடிமகனுக்கும் பெருமையளிக்கும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பெனீஸ் தெரிவித்துள்ளார்.  Source … Read more

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து – குழந்தை உட்பட 22 பேர் பலி!

பாகிஸ்தான் நாட்டில், பயணியர் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டின் மலைப்பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. ஜோப் தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. பிறகு, கில்லா சைஃபுல்லா பகுதிக்கு அருகே மலை உச்சியில் இருந்து சுமார் நூற்றுக்கணக்கான அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் … Read more