ரஷ்யாவுக்கு எதிராக கில்லர் மூவ்: எலக்ட்ரிக் பைக்குகளை பயன்படுத்தும் உக்ரைன்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனின் ஏராளமான இலக்குகளை குறி வைத்தும், அந்நாட்டின் நகரங்கள் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு ஆயுதங்களை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வழங்கி வருகின்றன. உக்ரைனில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் போர்ட்டபிள் ஏவுகணையான லைட் ஆண்டி டேங்க் வெப்பன் ஏவுகணையை ஜனவரியிலேயே இங்கிலாந்து வழங்கியது. போருக்கு முன்பே சுமார் 2,000 ஏவுகணைகளை வழங்கிய பிரிட்டன், மேலும் பல ஆயுதங்களை … Read more

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு 40,000 டன் டீசலை அனுப்பியது இந்தியா

கொழும்பு: இலங்கைக்கு, கடனுதவி திட்டத் தின் கீழ், மேலும் 40,000 மெட்ரிக் டன் டீசலை இந்தியா நேற்று வழங்கியது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, எரிபொருள் இறக்குமதி செய்ய, இந்தியா கடந்த மாதம் 50 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனுதவியை வழங்கியது. இலங்கை திவால் நிலையில் உள்ளதாக, அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் அறிவித்தார். இந்நிலையில் இலங்கைக்கு கடனுதவி திட்டத்தின் கீழ், மேலும் 40,000 மெட்ரிக் டன் டீசலை அனுப்புவதாக இலங்கையில் உள்ள … Read more

மேற்கத்திய நாடுகளை குறிவைக்கும் குரங்கு காய்ச்சல்- உலக சுகாதார அமைப்பு ஆலோசனை

ஜூரிச்: உலக நாடுகளில் கொரோனா தொற்று ஆதிக்கம் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிற நிலையில், மேற்கத்திய நாடுகளில் புதிதாக ‘மங்கி பாக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் பரவல் அதிர்வலைகளை ஏற்படுத்து வருகிறது. இதுபற்றி உலக சுகாதார அமைப்பு ஆலோசனை நடத்துகிறது. இதையொட்டி உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் டாரிக் ஜசரேவிக் கூறுகையில், “37 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளது. 71 பேருக்கு இந்த நோயின் அறிகுறிகள் கண்டறியப்பட்டு, விசாரணை நடத்தப்படுகிறது” என தெரிவித்தார். உலக … Read more

மாஜி பெண் அமைச்சரை அடித்து இழுத்துச் சென்ற பாக்., போலீசார்| Dinamalar

இஸ்லாமாபாத் : பாக்., முன்னாள் அமைச்சர் ஷிரின் மசாரியை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அடித்து இழுத்துச் சென்று காவலில் வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தவர், ஷிரின் மசாரி. ‘இம்ரான் கான் ஆட்சி கவிழ, ராணுவமும், அமெரிக்காவும் தான் காரணம்’ என, அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.இந்நிலையில், ஷிரின் மசாரியை லாகூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அடித்து இழுத்துச் சென்றதாக அவரது மகள், … Read more

கனடா நாடாளுமன்றத்தில் கன்னடத்தில் பேசிய எம்.பி.: சமூக வலைதளங்களில் வைரலான‌ வீடியோ

பெங்களூரு: கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட சந்திரா ஆர்யா, கனடா நாடாளுமன்ற‌ அவையில் முதல் முறையாக கன்னடத்தில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. கர்நாடகாவின் துமக்கூரு மாவட்டம், சிரா தாலுகா துவகூரு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா ஆர்யா (59). எம்பிஏ படித்த இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு பணி நிமித்தமாக கனடாவில் குடியேறினார். கடந்த 2019-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் ஒன்டாரியோவில் உள்ள நேப்பியன் தொகுதியில் போட்டியிட்டு கனடாவின் கீழ் சபைக்கு தேர்வு ஆனார். சந்திரா … Read more

அமெரிக்காவில் 140மைல் வேகத்தில் வீசிய கடும் சூறாவளி.. 2 பேர் உயிரிழப்பு – 44 பேர் காயம்..!

அமெரிக்காவின்  Michigan மாகாணத்தில் Gaylord பகுதியில் சூறாவளி தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். 44பேர் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியில் சூறாவளிக்குப் பிறகு எடுக்கப்பட்ட வீடியோவில் மரங்கள் தீப்பிடித்து எரியும் காட்சி பதிவாகி உள்ளது. மணிக்கு 140மைல் வேகத்தில் சூறாவளி வீசியதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  Source link

ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றவே ரணில் பிரதமராக பதவியேற்பு: இலங்கை எம்பி குற்றச்சாட்டு

பெரம்பலூர்: இலங்கை நுவரெலியா தொகுதி எம்பி ராதாகிருஷ்ணன் பெரம்பலூர் மாவட்டம் துறை மங்கலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: இலங்கையில் தற்போது பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு, சீரற்ற அரசியல் நிலை காணப்படுகிறது. இந்நிலையில், ராஜபக்ச குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகவே ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்று உள்ளார். ரணில் விக்ரமசிங்கவை ராஜபக்ச விலைக்கு வாங்கியுள்ளார். இப்போது, ரணில் விக்ரமசிங்க, மக்களை விலைக்கு வாங்க முயற்சித்து வருகிறார். கச்சத்தீவு குறித்து இந்திய அரசியல்வாதிகள் பேசினாலும்கூட இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறுவார்களா? … Read more

12 நாடுகளில் 80 பேருக்கு குரங்கு அம்மை தொற்று பாதிப்பு

ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவி வரும் குரங்கு அம்மை நோய்த் தொற்று சின்னம்மை போல இருப்பினும்  பாதிப்பு குறைவாகவே உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டிய உலக சுகாதார அமைப்பு அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட  12 நாடுகளில் 80 பேருக்கு குரங்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தொற்று வேகமாகப் பரவலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. … Read more

மெஹுல் சோக்சி வழக்கு வாபஸ் : டொமினிகன் அரசு முடிவு| Dinamalar

ரோசாவ் : வங்கி கடன் மோசடியில் தலைமறைவான நகை கடை அதிபர் மெஹுல் சோக்சி மீது சட்ட விரோதமாக டொமினிகன் நாட்டில் நுழைந்தது தொடர்பான வழக்கை திரும்பப் பெறுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.மும்பையைச் சேர்ந்த நகை கடை அதிபர்கள் மெஹுல் சோக்சி, நிரவ் மோடி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் மோசடி செய்து, இந்தியாவில் இருந்து தப்பியோடினர். இதில், நிரவ் மோடி லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு … Read more

பிரான்சில் சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழப்பு

லியோன், தென்கிழக்கு பிரான்சில் உள்ள கிரெனோபில் அருகே உள்ள வெர்சௌட் விமானநிலையத்தில் இருந்து நேற்று பிற்பகலில் சுற்றுலா விமானம் ஒன்று 5 பேருடன் புறப்பது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. விபத்தை நேரில் பார்த்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சுமார் 60 தீயணைப்பு வீரர்கள் விரைவாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விமானத்தின் எரிந்த இடிபாடுகளுக்குள் நான்கு பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தையின் உடல்களை கண்டுபிடித்தனர். … Read more