14 வயதுடைய கருப்பின மாணவனிடம் அத்துமீறி சோதனை செய்த போலீசார் : கேள்வி எழுப்பிய மக்கள் விரட்டியடிப்பு

லண்டனில் கொள்ளை வழக்கு ஒன்றில் கருப்பினத்தை சேர்ந்த 14 வயதுடைய மாணவனிடம் போலீசார் அத்துமீறி சோதனை நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது. குரோய்டன் நகரில் பள்ளி வகுப்பை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த அந்த மாணவனை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து கேள்வி எழுப்பிய மக்களையும் போலீசார் விரட்டி அடித்த காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.  Source link

உருக்குலைந்த கட்டிடத்தில் சிக்கிக்கொண்ட 7 வயது சிறுமி பத்திரமாக மீட்பு… தாயாரை மீட்க போராட்டம்!

ரஷ்ய தாக்குதலால் உருக்குலைந்த கட்டிடத்தில் சிக்கிக்கொண்ட 7 வயது சிறுமியை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். கடந்த 20 நாட்களாக கீவ் மாநிலத்தில் பெரியளவில் தாக்குதல்கள் நிகழ்த்தப்படாத நிலையில் இன்று அதிகாலை அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க ஷெவ்சென்கிவ்ஸ்கி மாவட்டத்தின் மீது ரஷ்ய வீரர்கள் பீரங்கி தாக்குதல் நிகழ்த்தினர். தீப்பற்றி எரிந்து உருக்குலைந்த 9 மாடி கட்டிடத்தில் இருந்து 7 வயது சிறுமி உள்பட ஏராளமானோர் மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கி அந்த சிறுமியின் தந்தை உயிரிழந்த நிலையில், அவரது … Read more

இலங்கையில் எரிபொருள் விலையேற்ற எதிரொலியால் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

எரிபொருள் விலையேற்ற எதிரொலியால் இலங்கை முழுவதும் உள்ள உணவகங்களில் உணவுப்பொருட்களின் விலை 10 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டின் உணவக உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில், விற்பனையாளர்கள் நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், சிற்றுண்டிகள் முதல் அனைத்து உணவகங்களிலும் விலை உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

ஒரு லிட்டர் சோடாவை 6.8 விநாடிகளில் குடித்து சாதனை படைத்த அமெரிக்க உணவுப் பிரியர்

அமெரிக்காவைச் சேர்ந்த எரிக் ஜேம்ஸ் பேட்லேண்ட்ஸ் ஒரு லிட்டர் சோடாவை ஆறு புள்ளி 8 விநாடிகளில் குடித்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார். சாதனைகள் என்பதே முறியடிக்கப்படுவதற்காகத்தான். அந்த வகையில் மேலும் ஒரு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. உணவுப் பிரியரான எரிக் ஜேம்ஸ், சாப்பிடுவதில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, ஒரு லிட்டர் சோடாவை ஆறு புள்ளி 8 விநாடிகளில் குடித்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.  Source link

கருக்கலைப்பு தடை; அமெரிக்க தெருக்களில் வலுக்கும் மக்கள் போராட்டம்

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் மக்கள் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர். இந்த முடிவுக்கு சமூக அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பெரும்பாலான அமைப்புகள் மற்றும் சமூக சேவையாளர்கள் இந்த முடிவை பழமைவாத முடிவு என எதிர்க்கின்றனர்.  தெருக்களில் மக்கள் போராட்டம் அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான அரசியலமைப்பு உரிமை பறிக்கப்பட்டதை அடுத்து, மனித உரிமைகள் உணர்வுள்ள மக்கள், ஆர்வலர்கள் மற்றும் தலைவர்கள் வீதியில் இறங்கி  போராடி வருகின்றனர். நீதிமன்றத்தின் இந்த முடிவு … Read more

உணவு பொருட்களை சாப்பிடச் சென்ற கரடி : காருக்குள் சிக்கிக்கொண்டு வெப்பம் தாங்காமல் உயிரிழந்த சோகம்

அமெரிக்காவில், காருக்குள் சிக்கி கொண்ட கரடி வெப்பம் தாங்காமல் உயிரிழந்தது. டென்னிசி மாநிலத்தில் சரியாக பூட்டப்படாத காருக்குள் உணவு பொருட்கள் இருப்பதை கவனித்த கரடி பற்களால் கதவை திறந்து காருக்குள் புகுந்துள்ளது. கார் கதவு தானாக சாத்தி கொண்டதால் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்ட கரடி, வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்து உள்ளேயே உயிரை விட்டது. காருக்குள் கரடி இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். நாய்களை விட கரடிகளுக்கு மோப்ப சக்தி அதிகம் … Read more

ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி : தங்க ஏற்றுமதிக்கு தடை விதிக்க 4, ஜி-7 நாடுகள் முடிவு

ரஷ்யாவின் தங்க ஏற்றுமதிக்கு தடை விதிக்க ஜி-7 கூட்டமைப்பில் உள்ள 4 நாடுகள் முடிவு செய்துள்ளன. ரஷ்யா மீது பல தடைகள் விதிக்கப்பட்ட நிலையில், பொருளாதார தாக்கத்தை தவிர்க்கும் வகையில் அந்நாட்டைச் சேர்ந்த பலர், தங்கத்தின் மீது முதலீடு செய்தனர். இதனை தடுத்து  ரஷ்யாவிற்கு மேலும் அழுத்தம் தரும் வகையில், அந்நாட்டின் தங்க ஏற்றுமதிக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தடை விதிக்கவுள்ளன. இந்நடவடிக்கையால் ரஷ்யாவிற்கு கடும் நெருக்கடி ஏற்படுமென இங்கிலாந்து பிரதமர் … Read more

துப்பாக்கி கட்டுப்பாடு சட்டம்: அதிபர் ஜோ பைடன் கையெழுத்து!

துப்பாக்கி கலாசாரம் பெருகி வரும் நிலையில், அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கிக் கலாசாரம் தலைதூக்கி வருகிறது. இதனால் அங்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நுழைந்த மர்ம நபர், அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதில், குழந்தைகள் உட்பட ஆசிரியர்கள் பலியாகினர். இந்த சம்பவம் அங்கு கடும் … Read more

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – குடியிருப்பு கட்டிடங்களுக்கு சீல்.. மதுக்கடைகள், திரையரங்குகள், பூங்காக்கள் மூடல்..!

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, சீனாவின் தென் கடற்கரை நகரமான மக்காவ்வில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. அந்நகரில் புதிதாக 39 பேருக்கு கொரோனா உறுதியானதால், அங்குள்ள 12க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு மக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்காவ்வில் தற்போது சுமார் 5 ஆயிரம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், மதுக்கடைகள், திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. மேலும் அந்த நகரத்தில் வசிக்கும் 6 லட்சம் மக்களுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக … Read more

போலீசாரின் விசாரணைக்கு பயந்து தறிகெட்டு ஓடிய கார்.. பாதசாரிகள் மீது மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு..!

அமெரிக்காவில் போலீசாருக்கு பயந்து தறிகெட்டு ஓடிய கார், நடைபாதையில் சென்றவர்கள் மீது மோதிய விபத்தில்  67 வயதுடைய மூதாட்டி உயிரிழந்தார். நியூயார்க் நகரில் வாகன சோதனையில் கார் ஒன்றின் பதிவெண் போலியாக இருப்பதை உறுதி செய்த போலீசார், அந்த காரை துரத்தி பிடிக்க முற்பட்டனர். அதிவேகமாக சென்ற அந்த கார், பாதசாரிகள் மீது அடுத்தடுத்து மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.  Source link