சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்- 4 பேர் பலி

பெய்ஜிங்: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பீஜிங், தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க மையம் தெரித்தது. பெய்ஜிங் நேரப்படி நேற்று மாலை 5 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகி உள்ளது. 17 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம் 30.37 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 102.94 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் கண்காணிக்கப்பட்டது. … Read more

டென்மார்க்கிற்கு எரிவாயு கட் : ரஷ்யா அதிரடி நடவடிக்கை| Dinamalar

கோபன்ஹேகன் : பின்லாந்து, போலந்து, பல்கேரியாவைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டிற்கும் இயற்கை எரிவாயு சப்ளையை ரஷ்யா நிறுத்தியுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அதனால், டாலருக்கு பதிலாக, ரஷ்யா அதன் ரூபிள் கரன்சி வாயிலாக பரிவர்த்தனைகளை மேற்கொள்வதில் தீவிரமாக உள்ளது. இதையடுத்து, ‘ஐரோப்பிய நாடுகள் இயற்கை எரிவாயு இறக்குமதிக்கான தொகையை, ரூபிள் கரன்சியில் செலுத்த வேண்டும்’ என, ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார்.ஐரோப்பிய நாடுகள், … Read more

அமெரிக்கா மருத்துவமனையில் நடத்திய துப்பாக்கிச் சூடு – 4 பேர் பலி.. கொலையாளியை சுட்டு வீழ்த்திய போலீசார்..!

அமெரிக்கா ஒக்லஹோமா மாகாணத்தில் மருத்துவமனையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.  5 மாடி கட்டிட மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர், கண்ணில் பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் கொலையாளி கொல்லப்பட்டார். தம்பதி உள்பட 4 பேர் சடலங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மருத்துவமனையின் ஒவ்வொரு அறையிலும் சோதனையில் ஈடுபடும் போலீசார் வேறேதும் கொலையாளிகள் உள்ளனரா என்றும் காயமடைந்தவர்களை மீட்டும் வருகின்றனர். Source … Read more

அதிபரின் அதிகாரத்தை மாற்றும் மசோதாஇலங்கை எம்.பி.,க்கள் திடீர் எதிர்ப்பு| Dinamalar

கொழும்பு:இலங்கையில் அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் வகையிலான, அரசியல் சாசனத்தின் 21வது சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளும் கூட்டணி எம்.பி.,க்கள் திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.நம் அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல் கூட வாங்க முடியாத அளவுக்கு அந்த நாடு திணறுகிறது.இதற்கு பொறுப்பேற்று அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே வெளியேற வலியுறுத்தி பொதுமக்கள் நடத்தும் போராட்டம், 50 நாட்களைத் தாண்டியுள்ளது. இதற்கிடையே, பிரதமர் பதவியில் இருந்து … Read more

ஜானி டெப் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆதரவாக தீர்ப்பு.. ஆம்பர் ஹேர்ட்டு இழப்பீடு வழங்க நடுவர்கள் உத்தரவு..!

அவதூறு வழக்கில் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட் மீது காதல் வயப்பட்டு 2015-ல் அவரை கரம்பிடித்த ஜானி டெப், 15 மாதங்களில் விவாகரத்து பெற்றனர். இதன்பின் 2018-ல் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் ஆம்பர் ஹேர்ட் எழுதிய கட்டுரையால் பல படங்கள் ஜானி டெப்பின்  கையை விட்டுச் சென்றன. இதனால் அவதூறாக 380 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஜானி டெப் ஆம்பர் மீது வழக்குத் தொடுத்தார். இந்த … Read more

அமெரிக்காவில் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

ஓக்லஹோமா: அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.  டெக்சாஸில் உள்ள  ஒரு தொடக்கப்பள்ளியில் கடந்த வாரம் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில்  ஓக்லஹோமா நகரில் உள்ள துல்சா மருத்துவமனை வளாகத்தில் நேற்று புகுந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். தகவல் அறிந்து அந்த பகுதிக்கு விரைந்த ஆயுதப்படை போலீசார் மருத்துவமனை வளாகத்தை சுற்றி வளைத்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 … Read more

சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நிலநடுக்கம்.. ரிக்டர் அளவு கோலில் அதிகபட்சமாக 6 புள்ளி 1 ஆக பதிவு.!

சீனா சிஸ்வான் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. ரிக்டர் அளவு கோலில் அதிகபட்சமாக 6 புள்ளி 1 ஆக நில நடுக்கம் பதிவானது. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். அண்டை நகரங்களிலும் அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.         Source link

உக்ரைனுக்கு நவீன ராக்கெட்அமெரிக்கா வழங்க ஒப்புதல்| Dinamalar

வாஷிங்டன்:ரஷ்ய படைகளை சமாளிக்க உக்ரைனுக்கு நவீன தொழில்நுட்பத்திலான நடுத்தர ராக்கெட்டுகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய படைகளை சமாளிக்க உக்ரைனுக்கு 4,900 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெலிகாப்டர்கள், பீரங்கி எதிர்ப்பு தளவாடங்கள் உள்ளிட்டவற்றை வழங்க அமெரிக்க பார்லி., ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் உக்ரைனின் மிக முக்கியமான டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற ரஷ்யா தீவிரமாக ஏவுகணை தாக்குதல் … Read more

உரம் கொடுத்து உதவ வேண்டும்- இந்தியாவிற்கு கோரிக்கை விடுக்கும் இலங்கை

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவு பொருள் உற்பத்தி மற்றும் விநியோகத்தை சீரமைக்க புதிதாக பொறுப்பேற்று ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று இலங்கை விவசாயத்துறை அமைச்சர்  மகிந்த அமரவீரா, இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லேவை சந்தித்து பேசினார்.  அப்போது உணவுப் பாதுகாப்பு மற்றம்  சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா-இலங்கை இடையிலான ஒத்துழைப்பின் அவசியம் குறித்து இருவரும் விவாதித்ததாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.  இலங்கைக்கு கடன் … Read more