உக்ரைனின் ரயில்வே கட்டமைப்பை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல்.!

உக்ரைனின் ரயில்வே கட்டமைப்புகளை உருக்குலைக்கும் நோக்கில் அவற்றை குறிவைத்து ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு மேற்கு நாடுகள் ஆயுத உதவி வழங்கி வரும் நிலையில், அந்த ராணுவ தளவாடங்கள் ரயில்கள் மூலம் உக்ரைனுக்குள் கொண்டுவரப்படுகின்றன. இந்நிலையில், இந்த ராணுவ தளவாட போக்குவரத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் தொடர்ந்து ரயில் பாதைகள், ரயில் நிலையங்கள், ரயில் போக்குவரத்திற்காக அமைக்கப்பட்ட மின் நிலையங்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்கி வருவதாக உக்ரைனின் … Read more

ரஷிய- உக்ரைன் போரை நிறுத்த முயன்றேன்: பெலாரஸ் அதிபர்

மின்ஸ்க்: உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடங்கி 71-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷியா உக்ரைன் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரில் ரஷியாவுக்கு ஆதரவாக பெலாரஸும் செயல்பட்டு வருவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் ரஷிய உக்ரைன் போரை தான் ஆதரிக்கவில்லை என பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார். இந்த போர் குறித்து பேசிய அவர் கூறியதாவது:- … Read more

விக்கிப்பீடியாவில் பல திருத்தங்கள்… நீங்கள் படித்த பள்ளிதான் எது? – சுந்தர் பிச்சை அளித்த பதில்

கலிபோர்னியா: ‘நீங்கள் படித்த பள்ளி எது?’ என்று விக்கிப்பீடியா திருத்தங்களை மேற்கோள் காட்டி கேட்கப்பட்ட கேள்விக்கு, கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பதிலளித்துள்ளார். தொழில்நுட்ப உலகின் சாம்ராட்டாக இயங்கி வருகிறது கூகுள். அதன் தலைமை செயல் அதிகாரியாக இயங்கி வருகிறார் தமிழ்நாட்டை சேர்ந்த சுந்தர் பிச்சை. 49 வயதான அவர் படித்து, வளர்ந்தது தமிழ்நாட்டில்தான். பள்ளிப் படிப்பை தமிழகத்திலும், பட்டப்படிப்பை கரக்பூர் ஐஐடி-யிலும், மேற்படிப்பை அமெரிக்காவிலும் முடித்தவர். கடந்த 2004-இல் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். … Read more

விண்வெளிக்கு செல்லும் மனிதர்களின் நிர்வாண புகைப்படங்கள்!

பிரபஞ்சத்தில் வேறு இனங்கள் ஏதுவும் உள்ளனவா என்பது பற்றிய பேச்சுகள் நீண்ட காலமாக நிலவி வருகிறது. வேற்றுகிரகவாசிகள் என்று கூறப்படும் ஏலியன்கள் இருக்கின்றனவா அல்லது இல்லையா என்பது பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது சம்மந்தமான திரைப்படங்களும், நாவல்களும் ஏராளமாக வந்துள்ளன. ஏலியன்களை பற்றி பல்வேறு கதைகளும் சொல்லப்படும். விண்வெளியில் அறியப்படாத இடத்தில் இருந்து மின்காந்த அலைகளாக சிக்னல்கள் வரும்போதெல்லாம் அவை ஏலியன்களாக இருக்கக்கூடுமோ என்ற விவாதங்கள் அதிகரிக்கும். unidentified flying object என்று சொல்லப்படும் … Read more

அமெரிக்காவின் ஓக்லஹாமா மாகாணத்தில் சுழன்றடித்த சூறாவளி காற்று.!

அமெரிக்காவின் ஓக்லஹாமா மாகாணத்தில் வலுவான புயல் காற்றுகள் சூறாவளியாக மாறி சுழன்றடித்தன. செமினோல் என்ற இடத்தில் வீசிய சூறாவளிக்காற்று பரவலாக சேதங்களை ஏற்படுத்தியது. ஓக்லஹாமா நகரில் இருந்து 50 மைல்கள் தூரத்தில் உள்ள செமினோலின் மையப்பகுதியில் வான் வழியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில கட்டிடங்கள் தரைமட்டமாகி இருந்த காட்சிகளும், வீதிகளில் குப்பைகள் சிதறிக்கிடந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. மாகாணம் முழுவதும் சூறாவளிக்காற்றால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்திருப்பதுடன், மின்வெட்டு காரணமாக சுமார் 14 ஆயிரம் பேர் இருளில் … Read more

கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் சீனாவில் இளைஞர்கள் தின கொண்டாட்டம்!

சீனாவின் பெய்ஜிங் நகரில் இளைஞர்கள் தின கொண்டாட்டம் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டியது. 1919-ம் ஆண்டு மே மாதம் 4-ம் தேதியன்று, ஏகாதிபத்தியம் மற்றும் நில பிரபுத்துவ முறைக்கு எதிராக இளைஞர்கள் திரண்டெழுந்து போராட்டம் நடத்தி ஜனநாயகத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டதை நினைவுகூறும் வகையில் சீனாவில் ஆண்டு தோறும் மே 4-ம் தேதி இளைஞர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் இளைஞர்கள் அளித்த பங்களிப்பை மையமாக வைத்து நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சியில், மே 4 … Read more

உகாண்டாவில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து – 20 பேர் பரிதாப பலி!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். போர்ட் போர்டல் நகரிலிருந்து அந்நாட்டின் தலைநகர் கம்பாலா-வுக்கு, 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. போர்ட் போர்டல் நகருக்கு அருகே திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் தறிக்கெட்டு ஓடியது. தொடர்ந்து, சாலையோரத்தில் இருந்த தேயிலை தோட்டத்துக்குள் பாய்ந்த பஸ் பலமுறை உருண்டு விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 20 பேர் சம்பவ … Read more

ஜெர்மனியில் 30 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட பிரதமர் மோடியின் புகைப்படம் இணையத்தில் வைரல்

பெர்லின் : கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. உக்ரைன்-ரஷிய போர் காரணமாக ஐரோப்பிய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் அவர் நேற்று முன்தினம் ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றார். அங்கு அவர் அந்த நாட்டின் பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸை சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் ஜெர்மனி பயணத்தை … Read more

கட்டாயப்படுத்தி கொரோனா பரிசோதனை…அதிர்ச்சியூட்டும் காணொலி

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியதை அடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதோடு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீட்டை விட்டு வெளியே வர முடியாததால் ஏராளமானோர் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இன்றித் தவிப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.  ஷாங்காயைப் போல பெய்ஜிங் நகரிலும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெய்ஜிங்கிலும் 40க்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகள், … Read more

காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ்: கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

காங்கோ: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையில் காங்கோ அரசு ஈடுபட்டுள்ளது. காங்கோவில் உள்ள ஈக்வடார் மாகாணத்தில் பண்டகா பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி, ஒருவருக்கு எபோலா வைரஸ் உறுதிச் செய்யப்பட்டுள்ளது. எபோலா தாக்கிய நபர் ஏப்ரல் 21 ஆம் தேதி உயிரிழந்தார். இதனை காங்கோவின் சுகாதாரத் துறை அமைச்சகம் உறுதிச் செய்துள்ளது. எபோலாவால் உயிரிழந்தவருடன் தொடர்பில் இருந்த 267 பேர் … Read more