சீனாவில் பயங்கரம் : அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ள நிலையில், 39 பேர் மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சாங்ஷா நகரில் உள்ள 6 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 39 பேர் மாயமானதாகவும், மேலும் 23 பேர் சிக்கியுள்ளதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் … Read more

மகிந்தா ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு-மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, தன் சகோதரர் மகிந்த ராஜபக்சேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில், எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, மின் வெட்டு, அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு என, பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. ‘இதற்குக் காரணம் அதிபர் … Read more

சினிமா பாணியில் உக்ரைன் அதிபரை கொல்ல முயற்சி: அதிர்ச்சி தகவல்!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்ய ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளும் உக்ரைனைத் தாக்கி வருகின்றன. சர்வதேச கண்டனம், எதிர்ப்பு என எதையும் கண்டு கொள்ளாமல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இரு தரப்புக்கும் இடையே இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எவ்வித ஆக்கப்பூர்வமாக முடிவுகளும் எட்டப்படவில்லை. இதனிடையே, மரியுபோல் நகரை கைப்பற்றியுள்ள ரஷ்யா, … Read more

ஜெர்மனியில் புகழ்பெற்ற பியர் திருவிழா கோலாகலத் தொடக்கம்

ஜெர்மனியில் புகழ்பெற்ற பியர் திருவிழா உற்சாக கொண்டாட்டத்துடன் தொடங்கியது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பியர் திருவிழா தடைபட்ட நிலையில், தற்போது மீண்டும் கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய உடை அணிந்த மக்கள் பல்வேறு கலை நிகழ்வுகளில் ஈடுபட்டனர். பியர் திருவிழாவுக்கு பெயர்போன முனிச் நகர மேயர் விழாவைத் தொடங்கி வைத்ததும் முண்டியடித்துக் கொண்டு மதுப் பிரியர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்கத் துவங்கினர். 2ஆண்டுகளுக்கு பிறகு விழா விமரிசையாக நடப்பதால் பல்வேறு நாடுகளில் இருந்து 60 லட்சம் பேர் … Read more

ஏற்பாடுகளை கவனிக்க குழு அமைக்க திட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி :வரும் 2024 லோக்சபா தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க காங். தலைவர்கள் விரைவில் உதய்பூரில் கூடிப்பேச உள்ள நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜ.வும் முன்னேற்பாடுகளை கவனிக்க தீவிரம் காட்டத் துவங்கியுள்ளது. இதற்காக சிறப்புக்குழு ஒன்றை அமைக்க அக்கட்சி தயாராகி வருகிறது.கடந்த சில நாட்களாக டில்லி பா.ஜ. தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைகள் நடந்து வருகின்றன. ஆலோசனை கட்சியின் தேசிய தலைவர் நட்டா அமைப்புச் செயலர் சந்தோஷ் மூத்த தலைவர் முரளிதர் … Read more

இணையத்தில் வைரலாகும் வெள்ளை மயில் வீடியோ.!

இத்தாலியில், சிலை ஒன்றின் மீது இருந்து புல் தரையை நோக்கி வெள்ளை மயில் ஒன்று பறந்து வரும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இத்தாலியின், ஸ்ட்ரெசாவிற்கு அருகில் உள்ள ஐசோலா பெல்லாவின் பூங்கா தோட்டத்தில் உள்ள சிலை ஒன்றின் உச்சியிலிருந்து வெள்ளை மயில் பறந்து வந்து தரையிறங்குவது பதிவாகியுள்ளது. வெள்ளை நிற மயில் உலா வருவது சுற்றுலா பயணிகளிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வகையான வெள்ளை மயில்கள் லூசிசம் மரபணுமாற்றம் பெற்ற நீலமயில்களின் துணை இனமாகும். … Read more

ஸ்வீடனை மிரட்டும் ரஷியா- வான்வெளியில் அத்துமீறி பறந்த போர் விமானம்

ஸ்டாக்ஹோம்: உக்ரைனை தொடர்ந்து ஸ்வீடன் மற்றும் அதன் அண்டை நாடான பின்லாந்து ஆகியவை நேட்டோ அமைப்பில் உறுப்பினராக முயற்சி செய்து வருகின்றன.  இதற்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  இந்த நடவடிக்கை ஐரோப்பிய யூனியன் பகுதியில் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என்று ரஷிய அதிபரின் கிரம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். ஸ்வீடன் நடவடிக்கை கூட்டணி மோதலை நோக்கிய செல்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்க கூடாது என்றும் … Read more

40 ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்திய ‘உக்ரைன் போர் நாயகனுக்கு’ உயரிய விருது: வீர மரணத்துக்கு பிறகு அரசு வழங்கியது

லண்டன்: ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் நாட்டின்பல்வேறு நகரங்கள் உருக்குலைந்துள்ளன. என்றாலும் ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்து வரு கிறது. இந்நிலையில் போரின் முதல்நாளிலேயே ரஷ்யாவின் 10 விமானங்களை உக்ரைன் விமானி ஒருவர் சுட்டு வீழ்த்தினார். இதனால் உலகம் முழுவதும் பிரபலமான அந்த விமானி ‘கோஸ்ட் ஆஃப் கீவ்’ (கீவ் நகரின் பேய்) என அழைக்கப்பட்டார். தொடர்ந்து போரில் மிகவும் … Read more

#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் ராணுவ வீரர்கள் 200 பேர் கொல்லப்பட்டதாக ரஷியா தகவல்

01.05.2022 04.20:   உக்ரைனின் மரியுபோல் பகுதியில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்ற ஐ.நா.வின் முயற்சி குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். இந்த  உரையாடலின் போது, ​​உக்ரைனுக்கு இங்கிலாந்து பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவியை தொடர்ந்து வழங்கும் என்றும் ஜான்சன் உறுதியளித்தாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 02.40:  உக்ரைனின் மூன்றாவது பெரிய நகரமும், முக்கிய துறைமுகமுமான ஒடேசாவில் உள்ள விமான நிலைய ஓடு பாதையை ரஷ்ய படைகள் ஏவுகணை … Read more

உக்ரைனில் இருந்து 10 லட்சம் மக்களை வெளியேற்றியதாக ரஷ்ய அமைச்சர் தகவல்| Dinamalar

லீவ், : “உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகள் துவங்கியது முதல், அங்கிருந்து, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களை நாங்கள் வெளியேற்றி உள்ளோம்,” என, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு உக்ரைன் ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.தற்போது, நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மட்டும் ரஷ்ய படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். இதற்கிடையே, … Read more