முள்ளிவாய்க்கால் நினைவு நாள்- கிளிநொச்சியில் இன்று கடை அடைப்பு

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் முள்ளி வாய்க்காலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். குண்டுவீச்சில் ஏராளமான குழந்தைகளும் பலியானார்கள். ஒவ்வொரு ஆண்டும் மே 18-ந் தேதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலை தமிழ் மக்கள் கடைபிடித்து வருகிறார்கள். போரில் உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று கடைபிடிக்கப்பட்டது. போரில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பலியானவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். வடமாகாண … Read more

அரசு ஊழியர்கள் ஹேப்பி – கைநிறைய சம்பளம் வரப் போகுது!

அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தருவதற்காக ரூபாய் நோட்டுகளை (கரன்சி) அச்சடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்து உள்ளார். அண்டை நாடான இலங்கையில், கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே, பிரதமர் பதவியை, மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். எனினும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக இலங்கையில் பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை நியமனம் செய்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், இலங்கையின் … Read more

கொரோனா வைரஸ் பரவல்: சீனாவின் பிஜிங்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை

பிஜிங்: சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஒரு பகுதியில் கொரோனா கண்டறியப்பட்டால், அந்நகர் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பூஜ்ய கொரோனா கொள்கையை கடை பிடிக்கும் சீன அரசு கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஷாங்காய் நகரில் வைரஸ் பரவல் அதிகரித்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அங்கு வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும் ஊரடங்கு முழுமையாக நீக்கப்படவில்லை. அதேபோல் தலைநகர் பிஜிங்கில் சில … Read more

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு- பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தகவல்

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் பதவியை ஏற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே, நாட்டை சரிவில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அரசு துறைகளில் எடுக்கப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். இலங்கை அரசிடம் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. இதனால் கச்சா எண்ணையுடன் இலங்கை துறைமுகத்தில் இருக்கும் 3 கப்பல்களில் இருந்து இறக்குமதி செய்ய முடியவில்லை. இதையடுத்து அமெரிக்க டாலரை வெளிச்சந்தையில் வாங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் … Read more

அதிகரிக்கும் கொரோனா…அரசு அதிகாரிகளின் அலட்சியப்போக்கு தான் காரணம்…கடுப்பான கிம் ஜொங் உன்..!

அரசு அதிகாரிகள் தங்கள் அலட்சியப்போக்கால் கொரோனா பரவலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த தவறி விட்டதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிருப்தி தெரிவித்துள்ளார். வட கொரியாவில் அண்மையில் பரவிய கொரோனாவால் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 17 லட்சத்து 20,000 பேர் காய்ச்சல் அறிகுறிகளுடன் உள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு பணிகளுக்காக தலைநகர் பியோங்யாங்-கிற்கு ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். Source link

போப் ஆண்டவர் பிரான்சிஸ் மூட்டு வலியால் அவதி

ரோம்: போப் ஆண்டவர் பிரான்சிஸ் சில நாட்களாக வலது முழங்கால் வலியால் அவதி அடைந்து வருகிறார். வலி நிவாரணத்துக்காக ஊசி மூலம் மருந்து செலுத்தி கொள்வதாக போப் ஆண்டவர் தெரிவித்தார். இதற்கிடையே 85 வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ் மூட்டு வலியால் நடப்பதற்கு சிரமப்பட்டதால் அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்துமாறு டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்படி போப் ஆண்டவர் சக்கர நாற்காலியில் வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். போப் ஆண்டவரின் முழங்கால் வலிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்காக … Read more

இந்திய வம்சாவளி மாணவனின் கழுத்தை நெரித்த அமெரிக்க மாணவன்.. நீதிமன்றத்தை நாட பெற்றோர் முடிவு..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் இந்திய வம்சாவளி சிறுவனின் கழுத்தை சக மாணவன் நெறித்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். வகுப்பறை பெஞ்சில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளி சிறுவனை, அமெரிக்க சிறுவன் ஒருவன் அங்கிருந்து எழுந்திருக்கும்படி கூறியுள்ளான். அதற்கு இந்திய சிறுவன் மறுக்கவே, அவனது கழுத்தை அமெரிக்க சிறுவன் முழங்கையால் நெரித்துள்ளான். சக மாணவனால் செல்போனில் பதிவு செய்யப்பட்ட இந்த காணொலி இணையத்தில் வைரல் ஆனது. இந்த சம்பவத்தை விசாரித்த பள்ளி நிர்வாகம் அமெரிக்க … Read more

70 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த 3.25 அடி நீள முதலையின் புதைபடிவம் கண்டுபிடிப்பு..!

தென் அமெரிக்க நாடான பெருவில் 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முதலையின் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதைபடிவங்களுக்கு பெயர் பெற்ற கடற்கரை நகரமான அரிகுய்பா-வில் இந்த மூனேகால் அடி நீள புதைபடிவத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் கடலுக்கடியில் வாழ்ந்து வந்த முதலைகள் எப்படி நிலத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு இடம்பெயர்ந்தன என்பதை அறிய இந்த புதைபடிவம் உதவியதாக அவர்கள் தெரிவித்தனர். Source link

ரஷியாவை விட்டு வெளியேறும் மெக்டோனல்ட்ஸ்- பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்

மாஸ்கோ: கம்யூனிச நாடுகளின் கூட்டமைப்பான சோவியத் ஒன்றியம் 1990-களில் பிரிந்தபோது ரஷியாவிற்கு மெக்டோனல்ட்ஸ் உணவகம் வந்தது. இது அமெரிக்க முதலாளித்துவத்தின் அடையாளம் என பேசப்பட்டது.  1990-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி மத்திய மாஸ்கோவில் புஷ்கின் சதுக்கத்தில் இந்த உணவகம் தொடங்கப்பட்டபோது. இதில் விற்கப்படும் பிக் மேக் என்ற பர்க்கரை வாங்குவதற்கு 30,000 பேர் கூடியிருந்தனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த இந்த மெக்டோனால்ட்ஸ் உணவகங்கள் தற்போது ரஷியாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு எதிராக … Read more

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சீன தலைநகரில் மக்கள் நடமாட்டம் முடக்கம்

பெய்ஜிங்: கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சீன தலைநகர் பெய்ஜிங்கில் மக்களின் நடமாட்டம் முடக்கப்பட்டிருக்கிறது. சுமார் 2.15 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் நாள்தோறும் 1,000 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வர்த்தக நகரான ஷாங்காயில் வைரஸ் பரவல் அதிகரித்ததால் அந்த நகரில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அங்கு 6 வாரங்களுக்கும் மேலாக ஊரடங்கு நீடிக்கிறது. தற்போது வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் ஊரடங்கு … Read more