சினிமாவின் மவுனம் கலைக்க இன்னொரு சாப்ளின் பிறந்துவர வேண்டுமா? – கேன்ஸ் விழாவில் ஜெலன்ஸ்கியின் கவன ஈர்ப்புப் பேச்சு
“உக்ரைன் போர் குறித்து சினிமா துறை மவுனம் காப்பது ஏன். 1940ல் ஹிட்லரை பகடி செய்ய ஒரு சார்லி சாப்ளின் இருந்தார். இப்போதைய ஹிட்லரை கேள்வி கேட்க இன்னொரு சாப்ளின் பிறந்துவர வேண்டுமா” என்று ஜெலன்ஸ்கி வினவினார். கேன்ஸ் திரைப்பட விழாவின் 75 வது ஆண்டு விழாவில் உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கியின் பதிவு செய்யப்பட்ட பேச்சு ஒளிபரப்பானது. “மானிடர்களின் வெறுப்பு கடந்து போகும், சர்வாதிகாரிகள் மாண்டு போவார்கள். மக்களிடமிருந்து எடுக்கப்பட்ட அதிகாரம் மக்களிடமே வந்து சேரும்..” … Read more