ஜமைக்காவில் அம்பேத்கர் சதுக்கம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார் 

புதுடெல்லி: அரசு முறைப் பயணமாக ஜமைக்காவுக்கு சென்றுள்ள இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்கு இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதியில் உள்ள அம்பேத்கர் சதுக்கத்தைத் திறந்து வைத்தார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசு முறைப் பயணமாக மேற்கிந்தியத் தீவுகள் நாடான ஜமைக்காவுக்கு மே 15-ம் தேதி மாலை சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை கிங்ஸ்டனில் உள்ள தேசிய மாவீரர் பூங்காவுக்கு சென்ற … Read more

கறுப்பின மாணவர்களின் உடைமைகளில் சிறுநீர் கழித்த வெள்ளையின மாணவன்; இனவெறி கொடூரம்!

கேப் டவுன் , தென்னாப்பிரிக்காவில் கறுப்பின மாணவர்களின் உடைமைகளில் வெள்ளை இன மாணவர் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேப் டவுன் அருகே உள்ள ஸ்டெல்லன்போஷ் பல்கலைக்கழகத்தின் குடியிருப்பில் உள்ள கறுப்பின மாணவர் அறைக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, ஒரு வெள்ளையின மாணவர் நுழைந்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவன் கறுப்பின மாணவர்களின் உடைமைகளில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின்  புகழ்பெற்ற உயர்மட்ட பல்கலைக்கழக மாணவர் ஒருவர், தன்னுடன் பயின்று … Read more

கோதுமை ஏற்றுமதி தடையை நீக்க இந்தியாவுக்கு அமெரிக்கா கோரிக்கை| Dinamalar

நியூயார்க் : உலக மக்களின் நலன் கருதி, கோதுமை ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையை நீக்கும்படி, இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கை வைத்துள்ளது. உலகில் கோதுமை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஓராண்டில், கோதுமை விலை, 14 – 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தாண்டு வட மாநிலங்களில் கடுமையான வெப்பக் காற்று வீசுவதால், கோதுமை உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விலை உயர்வதை தடுக்கும் நோக்கில், சமீபத்தில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. … Read more

பிரான்சில் 30 ஆண்டுகளுக்கு பிறகு பெண் பிரதமர் நியமனம்

அதிபர் தேர்தலில் வெற்றி பிரான்ஸ் நாட்டில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் தொடர்ந்து 2-வது முறையாக அதிபர் பதவிக்கு மேக்ரான் போட்டியிட்டார். இந்த தேர்தலில் மேக்ரானுக்கும், தீவிர வலதுசாரி வேட்பாளர் மரைன் லூ பென்னுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிய சூழலில் மேக்ரான் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் தலைநகர் பிரான்சில் நடைபெற்ற விழாவில் மேக்ரான் பிரான்ஸ் அதிபராக 2-வது முறையாக பதவியேற்றார். பிரான்சில் கடந்த … Read more

இலங்கை எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவு; பார்லி.,யில் நடந்த ஓட்டெடுப்பு தோல்வி| Dinamalar

கொழும்பு : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த, பார்லிமென்ட் நேற்று அனுமதிக்கவில்லை.நம் அண்டை நாடான இலங்கையின் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததை அடுத்து, இடைக்கால பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரனில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். மகிந்தவின் சகோதரரும், அதிபருமான கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபரை பதவி நீக்கம் செய்வது தொடர்பான … Read more

திரிகோணமலை கடற்படை முகாமில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறியதாக தகவல்.!

இலங்கையின் திரிகோணமலை கடற்படை முகாமில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்நாட்டு மக்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். அதனை அடுத்து, அவரது குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் தப்பியோடுவது போல் காட்சிகளும் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் திரிகோணமலை கடற்படை முகாமில் தங்கியிருந்த அவர், அங்கிருந்து வெளியேறி கொழும்பு அருகே தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் என்ற வகையில் மகிந்தாவிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியமானது என்றும், … Read more

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி

கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் பொதுமக்கள் நடத்திய போராட்டததின் எதிரொலியாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே கடந்த 9-ம் தேதி விலகினார். அவரது ஆதரவாளர்களுக்கு போராட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதல் வன்முறையாக மாறியது. இதற்கிடையே, இலங்கையின் பிரதமராக 6-வது முறையாக ரனில் விக்ரமசிங்கே பதவியேற்றார். அவர் நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார். இந்நிலையில், பரபரப்பான சூழ்நிலையில் இலங்கை பாராளுமன்றம் இன்று கூடியது. அப்போது, … Read more

அமெரிக்க அதிபர் ஆலோசனை குழு பரிந்துரை| Dinamalar

வாஷிங்டன் : ‘அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான, ‘கிரீன் கார்டு’ கோரி தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் மீது, ஆறு மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும்’ என, அமெரிக்க அதிபருக்கான ஆலோசனை குழு பரிந்துரை செய்துள்ளது. இது, அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு, பெரிய அளவில் பலனளிக்கும். முன்னிலை அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டவர்களுக்கு, பல்வேறு வகை விசாக்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, ‘எச்1பி விசா’ அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. கம்ப்யூட்டர் மென்பொருள் இன்ஜினியர்கள் உட்பட, தொழில்முறை பணிகளில் அதிக அளவில் இது … Read more

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தது இந்தியா.!

இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 10 இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு ரஷ்யா முன்னேறியுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்ததை அடுத்து ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தன. இதன் எதிரொலியாக ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் பெறும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்தது. ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணையின் அளவு 6 சதவீதமாக அதிகரித்து, கடந்த ஏப்ரல் மாதம் நாளொன்றுக்கு 2 லட்சத்து 77 … Read more