முடிந்தவரை பல கருப்பினத்தவரை கொல்ல வேண்டும்…அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் கைதானவரின் திடுக்கிடும் இலக்கு

அமெரிக்காவின் நியூயார்க்  மாகாணத்தில் உள்ள பஃப்பலோ நகரில்  உள்ள, பல்பொருள் அங்காடியில் துப்பாக்கி ஏந்திய நபர் நேற்று முந்தினம் கண்மூடித்தனமாக  நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக பேட்டன் ஜென்ட்ரான் என்ற 18 வயது இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவர் 13 பேரைத் தாக்கிய நிலையில் அதில் 11 பேர் கருப்பினத்தவர் ஆவர்.  பேட்டன் ஜென்ட்ரானிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 2019-ம் ஆண்டு நியூசிலாந்தில் 2 மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை முன்மாதிரியாகக் … Read more

ஒரு கையில் குழந்தை, மறுகையில் சூட்கேஸ் – விமான பயணிகளை மிரளவைத்த தாய்

லண்டன்: வெளிநாட்டு விமானத்தில் கைக்குழந்தையுடன் பயணித்த ஒரு பெண் தனது காலால் விமானத்தில் உள்ள கேபின் கதவை அசால்ட்டாக மூடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விமானம் ஒன்றில் பயணம் முடிந்து அனைத்துப் பயணிகளும் இறங்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த ஓர் இளம்பெண் ஒரு கையில் தனது கைக்குழந்தையை வைத்துள்ளார். மறு கையில் இருக்கைக்கு மேலிருக்கும் கேபினில் இருந்து மற்றொருவர் உதவியை நாடாமல் தனது பெட்டியை எடுத்துள்ளார். அதன்பின், அந்த … Read more

ஆரஞ்சு நிறத்தில் மாறிய வானம்…மணற்புயலால் அரபு நாடுகள் அவதி

பாலைவனங்கள் அதிகமுள்ள அரபு நாடுகளில் மணற்புயல் ஏற்படுவது வழக்கம் என்றாலும் கடந்த 2 மாதங்களாக வழக்கத்தை விட தீவிரமான மணற்புயல்கள் ஏற்பட்டுள்ளன. சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில், மணற்புயல் காரணமாக சில நூறு மீட்டர் தூரத்திற்கு புழுதி சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் மாறியுள்ளது. மேலும் படிக்க | இங்கையில் ஒரு நாளுக்கான பெட்ரோல் மட்டுமே இருப்பில் உள்ளது: ரணில் விக்கிரமசிங்க வாகனங்களை குறைந்த வேகத்தில் இயக்கும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ரியாத் நகரின் மத்தியப் பகுதியில் … Read more

வட கொரிய கரோனா அப்டேட்ஸ்: மக்களிடம் மருந்துகளை சேர்க்கும் ராணுவம், ‘நோ’ தடுப்பூசி முகாம்கள்

வட கொரியா என்றால் ராணுவ பலமும் அணு ஆயுத சோதனைகளும்தான் நினைவுக்கு வரும். மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு இடையேயும் கூட வட கொரியா தனது ராணுவ பராக்கிரமங்களை விளக்கும் சோதனைகளைக் கைவிடவில்லை. கரோனா பரவலால் நாடு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களிடம் மருந்துகளைக் கொண்டு சேர்க்க ராணுவத்தையும், 10,000 சுகாதாரப் பணியாளர்களையும் வட கொரியா களமிறக்கியுள்ளது. இது தொடர்பாக வட கொரிய அரசு ஊடகமான கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி இன்று (மே 17) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் … Read more

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியுற்றது. கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி இலங்கையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று காலை இலங்கை நாடாளுமன்றம் கூடிய நிலையில், கோத்தயப ராஜபக்சேவுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தார். இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 68 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்ட 119 பேர் எதிராக … Read more

மனித உரிமைகள் ஆணையம் எதுவும் தேவையில்லை; தாலிபான் அரசின் புதிய உத்தரவு

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து நிர்வாக அமைப்பில் அதிரடியாக பல மாற்றங்களைச் செய்துள்ள தலிபான்கள், இப்போது மேலும் சில அதிர்ச்சி அளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். தற்போது முன்னாள் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஐந்து துறைகளை முற்றிலுமாக கலைக்க முடிவு செய்துள்ளனர். அவர்கள் கலைக்க நினைக்கும் முக்கிய துறைகளில் ஒன்று மனித உரிமை ஆணையம். இது அமெரிக்க ஆதரவு பெற்ற ஆப்கான் அரசாங்கத்தின் முக்கிய அம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கான் அரசு சுமார் 501 மில்லியன் டாலர் பட்ஜெட் … Read more

அதிகரிக்கும் கொரோனா: ராணுவத்திற்கு அதிபர் அதிரடி உத்தரவு!

வட கொரியாவில் ராணுவத்தில் உள்ள மருந்துவ குழுக்கள், தலைநகர் பியாங்யாங்கில் மருந்துகள் வினியோகத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டு உள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பரவிய போதும், வட கொரியாவில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா நுழையாமல் இருந்தது. அங்கு எல்லைகள் மூடப்பட்டு, தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. இருந்தாலும், அங்கு கொரொனா இல்லை என்பதை உலக நாடுகளால் நம்ப முடியவில்லை. இந்நிலையில், கடந்த 12 ஆம் … Read more

மரியுபோல் உருக்காலையிலிருந்து மனிதாபிமான வழித்தடம் வழியாக உக்ரைன் வீரர்கள் வெளியேற ரஷ்யா அனுமதி.!

மரியுபோல் உருக்காலையில் சிக்கியிருந்த உக்ரைன் வீரர்கள் வெளியேற ரஷ்யா அனுமதித்ததை தொடர்ந்து அவர்கள் பேருந்துகள் மூலம் ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். கடந்த சில நாட்களாக அந்த உருக்காலையைத் தரைமட்டமாக்கும் நோக்கில் ரஷ்ய படைகள் தாக்குதலைத் தீவிரப்படுத்தின. அங்கு பதுங்கியிருந்த உக்ரைன் வீரர்களை வெளியேற அனுமதிக்குமாறு உலக நாடுகளின் தலைவர்கள் வைத்த கோரிக்கையை ரஷ்யா ஏற்றுக்கொண்டது. முதல்கட்டமாக 5 பேருந்துகள் மூலம் உக்ரைன் வீரர்கள் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள நோவோ-அசோவ்ஸ்க் நகருக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் … Read more

'கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும்' – ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நம்பிக்கை

வாஷிங்டன்: கோதுமை ஏற்றுமதி மீதான தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும் என அமெரிக்கா நம்புவதாக தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்ட். கடந்த வாரம் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு. அதற்காக ஏற்றுமதி கொள்கையிலும் திருத்தம் மேற்கொண்டிருந்தது. இந்த தடை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மத்திய வர்த்தக துறை தெரிவித்திருந்தது. இந்திய துணைக்கண்டத்தில் நிலவி வரும் அதீத வெப்பத்தினால் வரும் நாட்களில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற பார்வையில் இந்த … Read more